கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் இந்த நந்தி பகவான் சிற்பம் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் இந்த நந்தி பகவான் சிற்பம் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் எட்டாம் அத்யாயத்தில் அகம் (நான்) எனும் மதத்தை ஒழித்து அகத்துள்ளே இருக்கும் ஆண்டவனுடன் ஐக்கியமடைய வழிவகுக்கும் வர்ண விபாக யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த எட்டாம் அத்தியாயத்தில் 11 பாடல்கள் உள்ளது. இந்த 11 சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் ஏழாம் அத்தியாயத்தில் இந்த உடலை பெற்ற பயன் என்ன? என்றும் மனம் ஒன்றி முக்தியை நாடும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கர்மா கர்ம யோகம் பற்றி பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த ஏழாம் அத்தியாயத்தில் மொத்தம் 12 சுலோகங்கள் உள்ளது. இந்த 12 சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 12 விரைவில் பதிவேற்றப்படும்.
இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் ஆறாம் அத்தியாயத்தில் பக்தி மார்க்கமே முக்தி மார்க்கம் என்னும் விபாக யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த ஆறாம் அத்தியாயத்தில் மொத்தம் 14 சுலோகங்கள் உள்ளது. இந்த 14 சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 11 விரைவில் பதிவேற்றப்படும்.
வேத வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி வியாசர் இடைவிடாமல் சொல்லிய மகாபாரதம் எனும் இதிகாசத்தை தன் தந்தத்தை எழுத்தாணியாக்கி உருவாக்கித்தந்த கண நாயகரின் மரத்தாலான சிற்பம். இடம் ஸ்ரீ மகாதேவர் ஆலயம், வாழப்பள்ளி, கேரளம்.

காமதேனுவின் மீது அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் அன்னை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோலம். இடம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரில் உள்ள பழைமையான மரச்சிற்பம்.

இராவணனின் புஷ்பக விமானம் பிரம்மாவுக்காக விஸ்வகர்மா உருவாக்கினார். பின்னர் பிரம்மா அதை செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு பரிசளித்தார். பின்னர் அதை அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இராவணன் குபேரனிடம் இருந்து கைப்பற்றி தனதாக்கிக் கொண்டார். இராமர் அனுமன் உருவாக்கிய பாலத்தின் மூலம் இலங்கை சென்று இராவணனை போரில் வென்று இராவணன் வைத்திருந்த புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்ப அயோத்திக்கு வந்தார். தனது பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் குபேரனை அழைத்து மீண்டும் குபேரனிடம் புஷ்பக விமானம் திரும்ப கொடுத்து விட்டார். இவ்வரலாறு கம்ப இராமாயணத்தில் மீட்சிப் படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மரச்சிற்பமாக வடித்துள்ளார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கடவல்லூர் விஷ்ணு ஆலயத்தின் கருவறையின் வெளிச்சுவரில் இந்த சிற்பம் உள்ளது.

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் நான்காம் அத்தியாயத்தில் மனத்தை வென்று குருவருளால் முக்தியை அடைய வழி காட்டும் தத்வ விக்ஞான யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த நான்காம் அத்தியாயத்தில் மொத்தம் 23 சுலோகங்கள் உள்ளது. இதில் 20 முதல் 23 வரையும் அடுத்து ஐந்தாம் அத்தியாயத்தில் 9 ஆம் சுலோகம் முதல் 23 ஆம் சுலோகம் வரை உள்ள சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 10 விரைவில் பதிவேற்றப்படும்.
சகலாகம சார சங்கிரகம் என்னும் ஆகம நூல் பிரம்ம முகூர்த்த நேரம் பற்றிய அதிகாலை நேரத்தின் விளக்கத்தை சொல்கிறது. அந்த நூலில் சொல்லப்பட்ட ஒரு சுலோகம்
சுலோகம்
பிராம்ஹே முகூர்த்தே வித்வாம்ஸ்து
மனசா சிந்தயே சிவம்
சத்ரிபாத திரிகடிகா
ராத்திரியேது தினே தினே.
சூரியன் மறைந்த நேரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு சூரியன் மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். மீண்டும் அதிகாலை 6 மணிக்கு விடிகிறது என்று வைத்துக் கொள்வோம். மொத்தம் 12 மணி நேரம் இரவு ஆகும். இந்த 12 மணி நேரம் கொண்ட ஒரு இரவை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதிக்கு ஜாமம் என்று பெயர். 7 1/2 நாழிகை என்பது ஒரு ஜாமம். 24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை ஆகும். ஆக ஒரு இரவுக்கு மொத்தம் 4 ஜாமங்கள் இருக்கும். 1 ஜாமம் என்பது 3 மணி ஆகும். சூரியன் மறைந்த 6 மணி முதல் 9 மணி வரை முதல் ஜாமம். 9 மணி முதல் நடுஇரவு 12 மணி வரை 2 ஆம் ஜாமம். 12 மணி முதல் 3 மணி வரை 3 ஆம் ஜாமம். அதிகாலை 3 மணி முதல் விடியற் காலை 6 மணி வரை 4 ஆம் ஜாமம். இந்த 4 ஆம் ஜாமத்தில் உள்ள 7 1/2 நாழிகையில் பாதி 3 3/4 நாழிகை அதாவது 1.30 மணி நேரத்திற்கு பிரம்ம முகூர்த்த நேரம் என்று பெயர். சூரியன் உதிக்கும் 6 மணிக்கு 1.30 மணி நேரம் முன்பிலிருந்து பிரம்ம முகூர்த்த நேரம் ஆரம்பிக்கிறது.
இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தூய்மையான பிரபஞ்ச சக்தியானது மழைபோல் கொட்டிக் கொண்டே இருக்கும். இந்த சக்திக்கு பிரம்மாவின் துணைவியான சரஸ்வதி என்று பெயர். அந்த அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு மனிதனுடைய அறிவும் மனமும் விழிப்பு நிலையில் இருக்கும். இந்த அதிகாலை நேரத்தில் எழுந்து உடலை தூய்மை செய்து விட்டு எக்காரியத்தை செய்தாலும் அறிவும் மனமும் விழிப்பு நிலையில் இருப்பதினால் மழை போல் கொட்டிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச சக்தியை எளிமையாக கிரகித்துக் கொள்ளும். அப்போது நூல்களை படித்தாலும் பூஜைகள் செய்தாலும் தியானம் ஜெபம் என்று எந்த காரியம் செய்தாலும் அக்காரியமானது நமது மனதில் அப்படி ஞாபகமாக பதிய ஆரம்பிக்கும். ஞாபகமாக பதியும் அந்த செயலானது நல்ல சிந்தனையை கொடுத்து அறிவை வளர்த்து நம்மை மேலும் மேன்மைப் படுத்துகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் அதிகாலை எழுந்து படி என்றும் அதிகாலை எழுந்து பூஜைகள் செய். தியானம் செய். ஜபம் செய். கோயிலுக்கு செல் என்று எந்த நல்ல காரியம் செய்தாலும் அதிகாலை நேரத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

ஸ்ரீ ஆதிசங்கரர் – ஒளியின் உதவி இல்லாமல் ஒரு பொருளை பார்க்க முடியாது. அதுபோலவே மனதில் ஆராய்ச்சி இல்லாமல் ஞானம் அடைய முடியாது. அஞ்ஞானத்தால் மனதில் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகும். கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
