ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 7

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் நான்காம் அத்தியாயத்தில் மனத்தை வென்று குருவருளால் முக்தியை அடைய வழி காட்டும் தத்வ விக்ஞான யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த நான்காம் அத்தியாயத்தில் மொத்தம் 23 சுலோகங்கள் உள்ளது. இதில் 12 முதல் 19 வரை உள்ள சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 8 விரைவில் பதிவேற்றப்படும்.

ஸ்ரீ பாலா பீடம்

ஸ்ரீ பாலா சுண்டு விரல் அளவுள்ள ஒரு சிறிய தேவி ஆவார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு சான்றாக சுண்டு விரல் அளவே இருந்தாலும் கோடி சூரியப் பிரகாசத்தைப் போல சக்தி வாய்ந்தவளாக அருள்பாலிக்கிறாள். இந்த பாலா பீடம் கோயில் அல்ல. ஸ்ரீ பாலா தான் வசிப்பதற்காகத் தேர்ந்தெடுத்த ஒரு சிறிய வீடு ஆகும். இந்த இடம் நெமிலி பால பீடம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீடம் வேலூர் அருகே உள்ள நெமிலி என்ற ஊரில் உள்ளது.

வேலூர் மாவட்டம் தாங்கி என்னும் சிற்றூரில் வசித்தவர் இராமசுவாமி அய்யர். கடவுளுக்குத் தொண்டு செய்து காலம் செலுத்திய வேதவிற்பன்னரான இராமசுவாமி அய்யருக்கும் கஷ்ட காலம் வந்தது. அதிலிருந்து மீள முடியாமல் தனது குடும்பத்தோடு ஊரை விட்டே கிளம்பினார். கால்நடையாகவே வந்தவர்கள் அரக்கோணம் அருகிலுள்ள நெமிலி கிராமத்தை வந்தடைகிறார்கள். அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள் நிரந்தரமான வசிப்பிடம் கிடைக்கும்வரை இங்கேயே தங்கலாம் எனத் தீர்மானிக்கிறார்கள். ஆனால் சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களோ இது மோகினிப் பிசாசு குடியிருக்கும் இடம் என்று அச்சமூட்டுகிறார்கள். இராமசுவாமி அய்யர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அய்யரின் மனைவி சாவித்திரி தூசி படிந்து கிடந்த சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றினார் . அன்று இரவு உணவை உண்டு அனைவரும் உறங்கிப் போனார்கள். ஆனால் ராமசுவாமி அய்யர் விடிய விடியக் கண் விழித்து மந்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டே இருந்தார். பொழுது விடிந்ததும் சத்திரத்துக்கு ஓடிவந்த ஊர் மக்கள் அங்கே அய்யரும் அவரது மனைவி மக்களும் நலமுடன் இருந்ததைக் கண்டார்கள். இவர்களிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த ஊர்மக்கள் அய்யர் குடும்பம் நிரந்தரமாக தங்கள் ஊரிலேயே தங்கி இருக்க வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் இரவு இராமசுவாமி அய்யரின் இரண்டாவது மகன் சுப்பிரமணியனின் கனவில் ஒன்பது வயதுச் சிறுமி காட்சி கொடுத்தாள். அன்னை ராஜராஜேஸ்வரியின் அருளாசிப்படி பாலாவாகிய நான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறேன். ஆற்றிலிருந்து என்னை நீ எடுத்து உனது இல்லத்தில் வைத்து அமர்த்திக்கொள் என்று சொல்லி மறைந்தாள் சிறுமியாய் காட்சி தந்த பாலா.

சூரிய உதயம் வரை காத்திருக்க முடியாமல் மிகுந்த உற்சாகத்துடன் சுப்பிரமணியர் ஆற்றுக்கு விரைந்தார். ஆற்று நீரில் நாள் முழுவதும் பாலாவைத் தேடினார். பாலா கிடைக்கவில்லை. அடுத்த நாளும் அதுபோலவே தேடினார். பாலா கிடைக்கவில்லை. மூன்றாவது நாள் தேடிதேடி சோர்ந்து போய் பாலாவை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். ஒளிந்து விளையாடுவது போதும். நீ சொன்னது போலவே உன்னை உன் இல்லத்திற்கு அழைத்துச் செல்லவே வந்தேன் வந்து விடு என்று மனமுருக பிரார்த்தித்து விட்டு நீரில் மூழ்கினார். அவர் மூழ்கிய அடுத்த கணமே ஏதோ ஒன்று தன் கையைத் தொடுவதை உணர்ந்தார். அதனை தன் கைகளால் பற்றி மேலே எடுத்துப் பார்த்தார். ஒரு விரல் அளவுள்ள சிறிய பாலா சிலை. சூரிய ஒளியில் பாலா தெய்வீக அழகால் ஜொலித்தாள். பாலாவை பார்த்த ஆனந்தத்தில் பேரானந்தமடைந்தார். தன் வீட்டிற்கு பாலாவை அழைத்து வந்து அவளுக்கு என்று ஒரு சிறிய சிம்மாசனத்தை உருவாக்கி அவளைப் பிரதிஷ்டை செய்தார். நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில் குழந்தை பாலா சுப்பிரமணியரின் இல்லத்தில் குடியேறிய செய்தி கேட்டு நெமிலி ஊர் மக்கள் திரண்டு வந்தார்கள். அந்த ஆண்டு நவராத்திரிக் கொண்டாட்டங்களின் நாயகி ஆனாள் பாலா. ஒன்பது நாட்களும் ஹோமம் அபிஷேகம் பூஜைகள் அன்னதானம் வஸ்திரதானம் என அமர்க்களப்பட்டது பாலா குடில். தான் குடிகொண்ட கிராமத்தையும் தன்னை வணங்கிச் சென்ற மக்களையும் செல்வச் செழிப்பாக்கினாள் பாலா. இப்படித்தான் சுப்பிரமணிய அய்யரின் இல்லம் பாலா பீடமானது.

பாலா சில சமயங்களில் பக்தர்களின் கனவில் தோன்றி தனக்குப் பிடித்தமான உணவைப் படைக்குமாறு கேட்பாள். அவளது இருப்பிடத்திற்குச் செல்லும் அனைவருக்கும் பிரசாதமாக சாக்லேட்டுகளும் குங்குமமும் வழங்கப்படுகிறது. தினமும் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் பாலா பீடம் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும். பாலா பீடத்திற்கு செல்லும் அனைவருக்கும் பிரசாதமாக சாக்லேட்டுகளும் குங்குமமும் வழங்கப்படுகிறது. பாலா பீடம் திரு. ஐயரின் குடும்பத்தினரால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் 1945 ஆம் ஆண்டு தனது பக்தர்களுடன் சேர்ந்து மூன்று முழு நாட்கள் இங்கு பூஜை செய்தார். திருமுருக கிருபானந்த வாரியார் பரமஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள் உள்ளிட்ட மகான்கள் உட்பட பலரும் பாலா பீடம் வந்து பாலாவை தரிசித்துள்ளார்கள். ஸ்ரீ பாலாம்பிகையை பற்றி கருவூர் சித்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

ஸ்ரீலலிதோ பாக்யானம் என்ற புராணத்தில் பாலாவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. லலிதாம்பிகையிடம் இருந்து அவதரித்தவள் பாலா. தாயைப் போல சிவந்தவளான இவளுக்குரிய மந்திரம் ஸ்ரீவித்யா. முருகப்பெருமான் தாயின் சம்பந்தமில்லாமல் பிறந்தது போல தந்தையின் சம்பந்தம் இல்லாமல் தாயிடம் இருந்து பிறந்தவள் பாலா. ஸதா நவவர்ஷா என்ற பெயரும் இவளுக்கு உண்டு. எப்போதும் புதுமையாக யாரும் எதிர்பாராத விதமாக அருளைப் பொழிபவள் என்பது இதற்குப் பொருள். கைகளில் ஜெப மாலையும் புத்தகமும் ஏந்திக்கொண்டு அபய வரத முத்திரைகளை காட்டி அருள்புரிவாள். லலிதாம்பிகையின் பரிவாரங்களோடு போரிட்டு தோற்றான் பண்டாசுரன். அவனுக்கு முப்பது புத்திரர்கள் இருந்தனர். அவர்களையும் அழித்தால் தான் தேவர்களுக்கு நிம்மதி என்பதால் பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க லலிதாவின் மகளான பாலா புறப்பட்டாள். லலிதாம்பிகை தன் கவசத்தில் இருந்து சிறு கவசத்தை தோற்றுவித்து மகளின் உடலில்அணிவித்தாள். போருக்கு புறப்பட்ட பாலா பண்டாசுரனின் புத்திரர்களைத் தோற்கடித்து வெற்றியுடன் திரும்பிய பாலா அன்னை லலிதாம்பிகையுடன் ஐக்கியமானாள்.

சைவ நாற் பாதங்கள்

சைவ நாற் பாதங்கள்” எனும் தலைப்பைப் பற்றி “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 4-1-2026 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். இத்தலைப்பில் முதியோர்களுக்கான சாதக வழி முறைகளைப் பற்றிய கருத்துக்கள் பகிரப்பட்டது.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 6

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் நான்காம் அத்தியாயத்தில் மனத்தை வென்று குருவருளால் முக்தியை அடைய வழி காட்டும் தத்வ விக்ஞான யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த நான்காம் அத்தியாயத்தில் மொத்தம் 23 சுலோகங்கள் உள்ளது. இதில் 4 முதல் 11 வரை உள்ள சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 7 விரைவில் பதிவேற்றப்படும்.

வழிவிடும் முருகன் திருக்கோயில்

வழிவிடும் முருகன் திருக்கோயில் இராமநாதபுரத்தில் உள்ளது. இக்கோயில் முருகரை வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாலும் இந்த முருகருக்கு வழிவிடும் முருகர் என்று பெயர் வந்தது. இக்கோயில் தற்போது உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. கோயிலின் அருகிலேயே நீதிமன்றம் இருந்தது. தங்களது வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று சொத்து வழக்குகளில் சிக்கி வாழ வழியற்று நிற்பவர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்ந முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர்.

இக்கோயிலில் உள்ள ஒரு சன்னதியில் வினாயகரும் முருகரும் ஒரே சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சனீஸ்வரனின் தாய் சாயாதேவி மரம் வடிவில் அருள்பாலிக்கிறாள். இந்த மரத்துக்கு சாயாமரம் என்ற பெயருண்டு. சனி பகவான் தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரின் துன்பங்களை போக்கி அருள் பாலிக்கிறார். இந்த மரம் இலங்கையிலுள்ள கதிர்காமம் முருகன் கோயிலிலும் உள்ளது.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 5

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் நான்காம் அத்தியாயத்தில் மனத்தை வென்று குருவருளால் முக்தியை அடைய வழி காட்டும் தத்வ விக்ஞான யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த நான்காம் அத்தியாயத்தில் மொத்தம் 23 சுலோகங்கள் உள்ளது. இதில் முதல் 3 சுலோகங்களுக்கான சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 6 விரைவில் பதிவேற்றப்படும்.

முருகர் 11 தலையுடன்

இராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன் குண்டுக்கரை முருகன் கோவிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோவிலில் உள்ள எனது பழைய சிலையை எடுத்து விட்டு புதிய சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி புதிய முருகன் சிலை பிரதிஷ்டை செய்து சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். முருகனுக்குரிய ஆறு முகம் மற்றும் சிவனுக்குரிய ஐந்து முகம் சேர்த்து மொத்தம் 11 முகங்களுடன் இவர் சிவமுருக அம்சமாக வீற்றிருக்கிறார். மற்ற கோவில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்து உள்ளது. இடம் இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 4

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் மூன்றாம் அத்தியாயத்தில் மொத்தம் 15 சுலோகங்கள் உள்ளது. இதில் முதல் 10 சுலோகம் வரை சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 5 விரைவில் பதிவேற்றப்படும்.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 3

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் இரண்டாம் அத்தியாயத்தில் மொத்தம் 14 சுலோகங்கள் உள்ளது. இதில் 6 ஆம் சுலோகம் முதல் 14 சுலோகம் வரை சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி 3 ஆம் அத்தியாயம் பகுதி – 4 விரைவில் பதிவேற்றப்படும்.