கஸ்வால் மகாதேவ் கோயில்

இமாச்சலப் பிரதேசத்தின் கஸ்வாலியில் மகாதேவ் கோயில் உள்ளது. அங்கு சிவபெருமானின் சிலையின் கீழ் ஒரு சூடான நீரூற்று உள்ளது அந்த சூடான நீரில் அரிசி சமைக்கப்படும் காட்சி.

மாதேஷ்வரன் சிவலிங்கம்

தண்ணீரில் நீந்தி சென்று தான் இந்த சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். அர்ச்சகர் வாரத்தில் ஒருநாள் திங்கள்கிழமை மட்டும் நீருக்குள் நீந்தி சென்று பூஜை செய்கிறார். இக்கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.

துர்கா பரமேஸ்வரி அம்மன்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது.