கர்ணன் தனக்கு வில் வித்தை கற்றுக் கொடுக்கும்படி துரோணாச்சாரியார் கேட்டுக் கொண்டான். துரோணாச்சாரியார் மறுத்துவிட கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலையில் செல்கிறான் கர்ணன். கர்ணனின் திறமையை சோதிக்க வானில் பறக்கும் ஒரு பறவையை குறி பார்த்து வீழ்த்தச் சொன்னர் கிருபாச்சார்யார்.
கர்ணன் அம்பை நாணில் பூட்டினான். ஒரு கணம் வானில் பறவையை குறி பார்த்தவன் அம்பை விடாமல் வில்லையும் அம்பையும் கீழே வைத்துவிட்டான். அதற்கான காரணத்தை கர்ணனிடம் கேட்டார் கிருபாச்சார்யார். அதற்கு கர்ணன் குருவே இது அதிகாலை நேரம் இந்நேரம் ஒரு பறவை வானில் பறக்கிறது என்றால் அது தன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு செல்கிறது என அர்த்தம். இப்போது எனது திறமையை காண்பிக்க அதை கொன்றுவிட்டால் நான் வீரனாவேன் ஆனால் அதன் குஞ்சுகள் அனாதையாகிவிடும் எனவே நான் அதை கொல்லமாட்டேன் என்றான். இதனைக் கேட்ட கிருபாச்சார்யார் கர்ணா நீ கற்றது வித்தையல்ல வேதம் என்றார்.
பணத்தாலும் பதவியாலும் பலத்தாலும் உயர்ந்தவர்கள் தன் பலத்தை பலம் குறைந்தவர்களிடம் காட்டுவது வீரமும் அல்ல. சத்ரிய தர்மமும் அல்ல.
துரோணாசாரியர் மறுத்ததும் பரசுராமரிடம் தானே செல்லுவார்..எனக்கு குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்துங்கள்
துரோணாச்சாரியாரிடம் சென்று பின்பு கிருபரிடம் செல்லும் போது கர்ணன் சிறுவன். கர்ணன் பெரியவர் ஆனதும் துரியோதனனின் ஆலோசனையின் பேரில் பரசுராமரிடம் செல்வான்.