மனம் என்பது உழாத நிலம் போன்றது ஆகும். நிலத்தில் கலைகள் தேவையில்லாத முட்கள் முளைத்து இருக்கும். மண் முரடாக இருக்கும். கல் பாறைகள் இருக்கும். அதில் தெய்வீக செடியை நட இயலாது. மண்ணில் உள்ள தேவையில்லாத குப்பைகளை நீக்கி மண்ணை முதலில் ஏர் உழுது பன்படுத்திய பிறகுதான் செடியை நட வேண்டும். அப்போது செடியானது நன்கு வளரும். நிலத்தை உழுது பன்படுத்துவது போல நம் மனதையும் இயமத்தால் தீயவற்றை நீக்கி மனதால் நன்மை தரக்கூடிய நியம வழியை கடைபிடித்து தெய்வீக செடியை நட்டு வைத்தால் இறைவன் அங்கு வந்து அமர்வான்.
இயமம்: தீமைகளைப் போக்குவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:
- மனதாலும் பேச்சாலும் செயலினாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமை.
- மனதாலும் பேச்சாலும் செயலினாலும் பிறர் பொருளைக் களவாடாமை.
- மனதாலும் பேச்சாலும் செயலினாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்.
- மனதாலும் பேச்சாலும் செயலினாலும் உண்மையைப் பின்பற்றுதல்.
- பிறர் கொடுக்கும் பரிசுகளை ஆசையினால் பெற்றுக் கொள்ளாமை.
இதனைக் கடைபிடித்தால் நம்மிடமுள்ள அனைத்து தீமைகளும் விலகும்.
நியமம்: நன்மைகளைப் பெறுவது
தவம் ஜபம் சந்தோஷம் தெய்வ நம்பிக்கை தானம் சிவவிரதம் சித்தாந்தக் கேள்வி சிவபூசை ஞான அறிவு நாணம் ஆகிய பத்துக் காரியங்களையும் தவறாது மேற்கொள்ளுதல் நியமம் ஆகும். இவற்றை மேற்கொள்ளும் போது ஒளியாகிய சிவத்தையும் அந்த ஒளியின் ஆற்றலாகிய சத்தியை தியானித்தலும் நியமம் ஆகும்.
இதனை தொடர்ந்து செய்பவர்களுக்குள் இறைவன் வந்து அமர்வான். இதனை திருமந்திரம் அட்டாங்க யோகம் தலைப்பில் வரும் பாடல்களில் தெரிந்து கொள்ளலாம்.