நவபாஷாணம்

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். எனவே இதனை முறைப்படி புடம் போட்டு கட்டவேண்டும். வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட பாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்கி சித்தர்கள் இதனை செய்கின்றார்கள். அதன்படி நவ பாஷாணம் என்பது ஒன்பது வகை கடுமையான விஷங்களைக் கொண்டது. அவை

 1. சாதிலிங்கம்.
 2. மனோசிலை
 3. காந்தம்
 4. காரம்
 5. கந்தகம்
 6. பூரம்
 7. வெள்ளை பாஷாணம்
 8. கௌரி பாஷாணம்
 9. தொட்டி பாஷாணம்

மேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாக்க ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்) ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன. சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து வேகவைத்து எரித்து நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவார்கள். வறட்டிகளைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். இதற்கு தங்கவாறு பெயர்களும் உள்ளது. அவை

 1. காடைபுடம் 1 வறட்டி
 2. கவுதாரிப் புடம் 3 வறட்டி
 3. குக்குடப் புடம் 8 முதல் 10 வறட்டி வரை
 4. வராக புடம் 50 வறட்டி
 5. யானை புடம் 500 வறட்டி முதல் ஆயிரம் வறட்டி வரை
 6. கன புடம் 700 முதல் 800 வரை
 7. மணல் மறைவுப் புடம் 800 வறட்டி
 8. கோபுடம் 1000 வறட்டி

இது தவிர நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை

 1. கோபுர புடம் – மணல்
 2. பாணிடப் புடம் – தண்ணீர்
 3. உமிப் புடம் – உமி
 4. தானியப் புடம் -நெல்
 5. சூரியப் புடம் – வெயில்
 6. சந்திரப் புடம் – நிலவொளி
 7. பருவப் புடம் – பௌர்ணமி நிலவு
 8. இருள் புடம் – அமாவாசை இரவு
 9. பனிப்புடம் – பனி
 10. பட்டைப் புடம் – மரத்தூள்
 11. நிழற்புடம் – சூரிய ஒளி படாத அறை

நவபாஷாணம் சிலைகளை உருவாக்கியவர் போகர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். சர்வ சாத்திரங்களையும் கற்ற போகியாவார். இவர் சித்தத்தை அடக்கி இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்து இந்த உலக இயக்கத்தையும், பிரபஞ்சத்தையும், இறைஆற்றலையும், உயிர் தத்துவத்தையும், பிரபஞ்ச ரகசியத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் ஆவார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும் ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. நவ பாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று முருகர் நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார். அதில் 1. பழனி மலைக்கோவில் 2. கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 வது சிலை கலியுகத்தின் இறுதியில் வெளிப்படும் என்று புராண வரலாறுகளில் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.