பாஞ்சஜன்யம்

பாஞ்சசன்யம் அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த ஒரு சங்கில் 4 சங்கங்கள் இருக்கும். மொத்தத்தில் ஐந்து சங்குகள் இருக்கும். இந்த சங்கு வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தது. சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம். அதிலும் சுத்தமாக அட்சரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான். இந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கில் இருந்து எழக்கூடிய ஓம்கார நாதமானது அட்சரம் ஒரு துளியும் பிசகாத நாத பிரம்மமானது அதன் ஒலியைக் கேட்கும் அனைவரையும் தமது மூல இயல்பான ஆத்ம நிலையுடன் ஒரு கனம் ஒன்ற வைக்கும் விதமாக அவ்வொலி இருந்தது என்பதை மகான்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்கும். ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்கும். சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.

தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக திருமாலுக்கு சிவபெருமான் சங்கினை வழங்கிய காரணத்தினால் இத்தல இறைவன் சங்காரண்யேஸ்வரர் சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். கிருஷ்ணன் தன் கையில் பாஞ்சஜன்யம் சங்கை வைத்திருக்கிறார். சங்கு மகாலக்ஷ்மியின் அம்சமாக உள்ளது. கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம் சங்கு அது போல் அர்ஜுனன் தேவதத்தம் சங்கையும் பீமன் மகாசங்கம் சங்கையும் தர்மர் அனந்த விஜயம் சங்கையும் நகுலன் சுகோஷம் சங்கையும் சகாதேவன் மணிபுஷ்பகம் சங்கையும் பயன்படுத்தினர்.

படத்தில் உள்ள இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது. இந்த அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.

5 thoughts on “பாஞ்சஜன்யம்

  • Saravanan Thirumoolar Post authorReply

   தற்போது இந்த சங்கு விற்பனைக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே!

 1. Drsethuraman Reply

  ஓம் நாராயணா, தங்களது பதிவு அருமையான கதை, முற்றிலும் நிதர்சனம், நன்றி.

 2. M. K. Ragupathy Reply

  தங்களின் தகவலுக்கான ஆதாரம் தெரிய செய்தால் மிக்க நலம்.

  • Saravanan Thirumoolar Post authorReply

   பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் தற்போதும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தி வருவதாக தகவல்கள் உள்ளது.இதுவே தற்போது ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.