துளசி கிருஷ்ணணின் அருள் பெற்ற நங்கைதான். அந்த நங்கையின் அருளால் உண்டானதுதான் துளசி. இந்த துளசி சீதள நோயை குணமாக்கக் கூடியது. கடுமையான நீர் கோர்த்துக் கொண்டு நுரையிரலிலே சொல்லில் அடங்காத அளவுக்கு நீர் இருக்கும் போது அதற்கு இந்த தூய்மையான துளசியை அதிலும் கருந்துளசியை எடுத்து தூய்மை செய்து தூய்மையான நன்றாக கவனிக்க வேண்டும் மாசில்லாத செப்பு பாத்திரத்திலே அவற்றில் தூய்மையான நீரை வைத்து அவற்றிலே சில துளசி தலைகளை இட்டு ஒரு ஓரவு முழுவதும் பாதுகாப்பாக வைத்துவிட்டு அதிகாலை வெறும் வயிற்றில் அருந்த கடுமையான சளி தொடர்பான பிணிகள் எல்லாம் நீங்கி விடும். அதுபோல் மட்டுமல்லால் துளசி மாலையை ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் சாற்றிவர சனி பகவான் ஆதிக்கம் பெற்றோருக்கு அதன் மூலம் வரக்கூடிய அந்த துன்பங்களை தாங்கக்கூடிய வலிமையினை தருவார். இன்னும் எத்தனையோ கூறிக் கொண்டு செல்லலாம். இன்னவன் வைத்திருக்கிறானே அந்த முக்கோண வடிவம் (பிரமீடு) அவற்றின் அடியிலே இந்த துளசி அடங்கிய நீரை வைத்து ஓர் இரவு முழுவதும் வைத்துவிட்டு உண்டால் இன்னும் அதிக ஆற்றல் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு மனிதனுக்கு வரும்.
அசுரர்களை அழிக்க சிவன் இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூற முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும் தேவர்களும் முருகருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் வள்ளி தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாச்சி ஓம் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும் அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் இங்கு தரிசிக்கலாம். இடம் படிக்காசுநாதர்கோயில் அழகாபுத்தூர்.
ஒரு மனிதனை விதியே தவறு செய்யத் தூண்டினாலும் தன் மனதை கட்டுப்படுத்தி போராடி தவறு செய்யாமல் பாவத்தை சேர்க்காமல் வாழப்பழக வேண்டும். நல்லவற்றை செய்ய வாய்ப்பை காட்டும் பொழுது தாராளமாக அந்த வழியில் நடக்கலாம். ஆனால் நல்லவை அல்ல என்று விதி தூண்டும் பொழுது நல்ல ஆத்மாக்களுக்கு ஓரளவு நன்மைகளை எண்ணக் கூடிய ஆத்மாக்களுக்கு இறைவன் மனசாட்சி மூலமாக வேண்டாம் இந்த வழி செல்லாதே இதைச் செய்யாதே என்று எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருப்பான். அந்த மனச்சான்றை மதித்து நடந்தால் அந்த தவறிலிருந்து அந்த பாபத்திலிருந்து ஒருவன் தப்பிக்கலாம். பலகீனமான இதயம் கொண்டவர்களால் இதை செய்ய முடியாது. அதனால்தான் நாங்கள் தொடர்ந்து தர்மம் செய் தர்மம் செய் தர்மம் செய் தொடர்ந்து பிரார்த்தனை செய் பிரார்த்தனை செய் பிரார்த்தனை செய். தொடர்ந்து தலயாத்திரை செய் தலயாத்திரை செய் தலயாத்திரை செய். தொடர்ந்து புனித நதியில் நீராடு புனித நதியில் நீராடு புனித நதியில் நீராடு என்கிறோம். இவற்றை தொடர்ந்து செய்து வர அவனது விதி மெல்ல மெல்ல மாறி அவனை மேலும் அறவழியில் செல்ல தூண்டும். தன்முனைப்பு எதிர்பார்ப்பின்றி இவைகளை செய்வதால் அவன் மனது வைராக்கியப்படுகிறது. அந்த வைராக்கியம் திட மனதை கொடுக்கிறது. பரம்பொருளின் மீது அமர்கிறது. இதுதான் ஒருவன் சென்று சேரவேண்டிய இடம்.
சைவம் மற்றும் வைணவத்தை சாஸ்தா தன்னுள் இணைத்து அவர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறார். இந்தச் சிற்பத்தில் சாஸ்தா பகவான் ஒரு பீடத்தில் அமர்ந்தபடி வலது காலை கீழே தொங்கவிட்ட நிலையில் இடது காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இடம் திருவனந்தபுரம் நேபியர் மியூசியம். காலம் கிபி 15 ஆம் நூற்றாண்டு.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் ஒரு மனிதனின் வாழ்வும் தாழ்வும் உயர்வும் மேன்மையும் பெருமையும் தன்னை உணர்தலும் ஒரு மனிதனின் கர்ம வினைகளைப் பொருத்தே அமைகிறது. இது போல் நிலையிலே அனைத்தும் வினைப்பயனே விதிப்பயனே என்று அறிந்த பிறகு ஒரு மனிதன் ஏதும் செய்யாமல் இருந்து விட்டால் போதுமே என்று அடுத்ததொரு வினா எழும். தாராளமாக அப்படியும் இருக்கலாம். ஆனாலும் அப்படி இருப்பதற்கும் அப்படி ஒரு விதி இருக்க வேண்டும். இதுபோல் நிலையிலே பின் மனிதனுக்கு சிந்தனை ஆற்றல் எதற்காக கொடுக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விஷயம் என்றால் மனிதன் சுயமாக எந்தெந்த நிலையில் முடிவெடுக்க முடியும். அந்த முடிவை விதி அனுமதிக்கிறதா? அனுமதிக்காமல் விட்டு விடுகிறதா? என்று எப்படி புரிந்து கொள்வது.
அதாவது ஓரு மனிதன் சுயநலமாக தன்னலமாக செய்கின்ற எதனையும் கால சூழல் கருதி திசாபுத்தி அந்தரம் கருதி செய்து விடலாம். ஆனால் பொதுநலமாக பிறருக்கு உதவ வேண்டிய அனைத்தையும் அவன் எதனையும் பார்க்காமல் யோசிக்காமல் சிந்திக்காமல் செய்து கொண்டே இருக்கலாம். இதற்கு கால சூழல் ஏதும் தேவையில்லை. இதுபோல் நிலையிலே ஒவ்வொரு சமயமும் யாம் திடீரென்று வாக்குகளை சிலருக்கு கூறுவதும் பலருக்கு மௌனமாக இருப்பதும் இதுகுறித்து பலரும் பல்வேறு வினாக்களை எம்முன்னே வைப்பதும் வாக்குகளை கூறாமல் போவதற்கு காரணங்களை அறிந்து கொள்ள துடிப்பதும் எமக்கு தெரிந்தாலும் சுருக்கமாக கூறுங்கால் உலகியல் வாழ்விலே ஏற்றம் இறக்கம் எப்படி இருந்தாலும் யாங்கள் கூறுகின்ற விஷயம் ஒரு மனிதனுக்கு பலிதமானாலும் ஆகாவிட்டாலும் தொடர்ந்து எமது வழியில் எவன் வருகிறானோ பக்தியையும் சத்தியத்தையும் தருமத்தையும் விடாப்பிடியாக எவன் ஒருவன் கடைபிடிக்கிறானோ அவனுக்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு எமது அருளாசிகள் என்றும் இருக்கும்.
ஆனால் இறைவனை வணங்குவான் எம்மையும் வணங்குவான். தர்மம் என்றவுடன் யோசித்து பார்த்துவிட்டு இந்த மாதம் இதுதான் எனக்கு வருமானம் இந்த மாதம் இந்த செலவுகள் இருக்கிறது. இது போக எதிர்காலத்திற்கு இந்த அளவு சேமிக்க வேண்டியிருக்கிறது. அது போக எதிர்பாராத செலவுக்கு என்று எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. இதனையும் தாண்டி என்னிடம் தனம் இருந்தால் தருவேன். இல்லையென்றால் தர மாட்டேன். அதாவது இவனாகவே ஒன்றை முடிவைடுத்து விட்டு இந்த முடிவுக்கு ஏற்ப எம்மிடம் ஆலோசனை கேட்பதோ அல்லது தர்ம விஷயத்தில் நிபந்தனையே போடாதே என்று கூறினாலும் அதிலே மேச ரிஷபன் எவன் ஒருவன் பார்க்கிறானோ அதிலே திதி நட்சத்திரம் பார்த்து அதிலே இதைதான் செய்வேன் அதைதான் செய்வேன் இப்படித்தான் செய்வேன் என்றெல்லாம் எவன் சுயகட்டுப்பாடு விதித்துக் கொள்கிறானோ அவன் தர்மமே செய்யாதவன் என்பதை விட கீழானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே செய் செய் செய்துகொண்டே இரு என்று கூறும் போது எதனையும் ஒருவன் பார்க்க கூடாது. என்ன ஆகும் குடும்பம் எதிரகாலம் என்ன ஆகும் என் வருமானம் நின்றுவிட்டால் பிறகு நான் போய் கையேந்த வேண்டுமே என்றெல்லாம் ஒருவன் சிந்திக்க துவங்கிவிட்டாலே விதி அவன் சிரசில் ஏறி அமர்ந்து அவனை தர்மப் பாதையை விட்டு திசை திருப்பி தன் கர்மப் பாதைக்கு அழைக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தர்மத்தில் அணுவளவு கூட ஐயமில்லாம் முழுக்க முழுக்க எந்த விதமான பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் வெறும் இறை நாமத்தை மட்டுமே மனதில் வைத்து அதிலும் இங்குள்ள அனைத்தும் இறைவனுக்கு உரிமை சொந்தம் இடையில் நம்மிடம் இறைவன் கொடுத்து வைத்திருக்கிறான். கொடுத்து வைத்ததை நாமே எடுத்து வைக்க கூடாது பதுக்கி வைக்க கூடாது. இதனை யாருக்கெல்லாம் பயன் படுகிறதோ தம்மை சுற்றி யாரெல்லாம் வேதனையில் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அள்ளி வழங்க வேண்டும் என்ற சிந்தனை எப்போதெல்லாம் ஒரு மனிதனுக்கு தலை தூக்கிறதோ அப்பொழுதே அவன் எமது வாக்கை கேட்டாலும் கேட்கா விட்டாலும் எமது அனுக்கிரகம் பரிபூரணமாக இறையருறள் ஆசியுடன் அவனுடன் பின்னிப் பிணைந்து அவன் ஆத்மாவை அவனையும் அறியாமல் மேலேற்ற நாங்கள் துவங்கி விடுகிறோம்.
இது ஒரு புறம் இருக்க பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டு நிறைய பக்தி சாதனைகள் எல்லாம் செய்து விட்டு யோக சாதனைகளை செய்கிறோமே எங்களுக்கு ஏதும் செய்யக் கூடாதா? என்றால் செய்யக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. தர்மத்தை மறந்துவிட்டு பிற உயிருக்கு கருணை புரிவதை ஒதுக்கிவைத்து விட்டு ஒரு மனிதன் தன் குடும்பத்தையும் தவிக்க விட்டுவிட்டு எத்தனை யோகங்கள் செய்தாலும் எத்தனை ஞானக் கருத்துக்களை அவன் வாசித்தாலும் அதனால் அனுவளவும் பயன் ஏதுமில்லை. எங்கோ குகையில் அமர்ந்து விட்டு புருவ மத்தியை நோக்கி சிந்தனையை செலுத்தினாலும் கூட அவன் செய்ய வேண்டிய அன்றாட கர்ம கடமைகள் எல்லாம் அவனை பிடித்து பின் நோக்கிதான் இழுக்கும். எனவேதான் ஒரு மனிதனுக்கு சகல விதத்திலும் காவலாக இருப்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பொதுநல நோக்கோடு அவர் செய்யக் கூடிய ஆணவமில்லாமல் தன்முனைப்பு இல்லாமல் செய்ததை தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் எவன் ஒருவன் செய்கிறானோ அந்த தர்மம் மட்டுமே ஒரு மனிதனுக்கு பரிபூரண கவசம். கர்ணனின் கவசம் கூட இந்திரனால் கவரப்பட்டு விட்டது. இந்த கவசத்தை யாராலும் கவர முடியாது.
எனவேதான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் யாம் தர்மத்தை உபதேசம் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் அதனை கேட்டு விட்டு மீண்டும் மீண்டும் மீண்டும் மனிதன் அதனைத் தவிர அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான். வேறு வழியில்லாமல் யாமும் ஒருவனுக்கு எப்படி உரைத்தால் அவன் மனம் திருப்திப்படுமோ நாங்கள் எமது பாதைக்கு அவன் வராத வரையில் அவனுக்கு எதேல்லாம் திருப்தியாக இருக்கிறதோ அதையாவது எண்ணி அவன் சந்தோசப்படட்டுமே என்று எண்ணி அவன் போக்கில் விட்டுவிடுகிறோம். எனவே இதுபோல் நிலையிலே யாங்கள் கூறுவதை நாங்கள் ஒரு கோணத்தில் கூற அதை சூழ்ச்சியாகவோ உயர்ச்சியாகவோ வேறு விதமாக புரிந்து கொள்வதும் நாங்கள் மௌனமாக இரு என்றால் மௌனமாக இல்லாமல் இப்படித்தானே கூறக்கூடாது என்று கூறினார்கள் வேறு விதமாக கூறலாம் என்று அவனவனாக பொருள் எடுத்துக் கொள்வதும் எம்மைப் பொருத்தவரையில் ஏற்புடையதல்ல என்பதால் எமது வழியில் வரும் சமயம் எல்லா வகையிலும் ஏற்றம் இருக்கலாம் இறக்கமும் இருக்கலாம் இந்த இரண்டையும் அனுசரித்துதான் வாழ வேண்டும் என்ற ஒரு கருத்தை மனதிலே மையப்படுத்திக் கொண்டு தொடர்ந்து தர்மத்தை சத்தியத்தை பக்தியை பின்பற்ற நன்மை உண்டாகும்.
அள்ளி அள்ளி வழங்குகின்ற தடைபடாத தர்ம குணத்தினால் மட்டும்தான் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சேர்ப்பதல்ல சேர்த்து வைப்பதல்ல சுகம். இருப்பதையெல்லாம் தந்துகொண்டே இருப்பதே சுகம். இழக்க இழக்கத்தான் மனிதன் பெறுகிறான். எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் தன்னையே எப்போது இழக்கிறானோ அப்பொழுதுதான் ஒருவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு மனிதன் வழங்கி கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும் ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே கொடுப்பது ஒன்று மட்டும் தான் இறைவனின் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.
திருமாலின் பத்து அவதாரர்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இந்த அவதாரத்தில் இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர் செய்து வென்றார். இடம் கம்போடியா. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.
அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக காலசம்ஹாரர் வணங்கப்படுகிறார். காலன் என்று அழைக்கப்படும் யமனை அழித்த சிவ உருவம் கால சம்ஹாரர் எனவும் காலந்தகர் எனவும் அழைக்கப்படுகிறார். இடம்: திருப்பூதீஸ்வரர் கோவில் கொடும்பாளூர். புதுக்கோட்டை மாவட்டம்
இறைவனுக்கு உகந்த இடம் ஒவ்வொரு மனிதனின் மனம்தான். அந்த மனம் சுத்தமாக பரிசுத்தமாக நேர்மையாக நீதியாக சத்திய நெறியில் தர்ம நெறியில் இருந்தால் எந்த இடத்திலும் இறைவன் அருள் மனிதனுக்கு உண்டு. ஒருவன் சுகமாக இருக்க வேண்டுமென்றால் பிறர் சுகத்தை கெடுக்கக்கூடாது. ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் பிறர் நிம்மதியை கெடுக்கக்கூடாது. ஒருவன் பிறரின் வார்த்தைகளால் காயப்படக்கூடாது என்றால் பிறரை வார்த்தைகளால் காயப்படுத்ததாமல் இருக்கவேண்டும். எனவே இதையெல்லாம் மனதிலே வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு நீ உன் பக்தி வழியில் தொடர்ந்து செல்லச் செல்ல உன் வாழ்க்கையிலும் நிம்மதி வரும்.