காசேர பாறா

சுவாமி ஐயப்பன் அமர்ந்த பாறை இன்றும் காட்டிற்குள் உள்ளது. அச்சன்கோயில் ஆலயத்துக்கு அருகே உள்ள அடர்த்தியான காட்டிற்கு உள்ளே 12 கிலோ மீட்டர் தூரத்தில் எரிமேலிக்கு அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ளது. காசேரபாறா உள்ளது. காசேரா என்றால் மலையாளத்தில் நாற்காலி அல்லது இருக்கை என்று பொருள். பாறா என்றால் பாறை என்று பொருள்.

பந்தளராஜன் மனைவியின் நோய் தீர்க்க புலிப்பால் தேடிச் சென்ற அய்யப்ப சுவாமி இந்த பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தார். இன்றும் பழங்குடி மக்கள் காட்டுக்குள் செல்லும்போது இந்த பாறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு காட்டுக்குள் செல்கிறார்கள்.

உத்குடி ஆசனத்தில் அய்யனார்

கருவறையில் அய்யனார் வடக்கு நோக்கிய நிலையில் உத்குடி ஆசனத்தில் ஜடாமுடியுடன் மாலை மற்றும் யக்ஞோபவீதம் கால்களில் சலங்கை அணிந்து அமர்ந்துள்ளார். சுற்றி காவல் தெய்வங்கள் உள்ளார்கள். உள்ளூர் மக்கள் இந்த அய்யனாரை சாஸ்தா என்றும் அழைக்கிறார்கள். இங்கு இவரது வாகன யானை பீடத்தின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: விஷ்ணு கோவில் இடங்கிமங்கலம் லால்குடி திருச்சி மாவட்டம்.

சாஸ்தா

சைவம் மற்றும் வைணவத்தை சாஸ்தா தன்னுள் இணைத்து அவர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறார். இந்தச் சிற்பத்தில் சாஸ்தா பகவான் ஒரு பீடத்தில் அமர்ந்தபடி வலது காலை கீழே தொங்கவிட்ட நிலையில் இடது காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இடம் திருவனந்தபுரம் நேபியர் மியூசியம். காலம் கிபி 15 ஆம் நூற்றாண்டு.