குருநாதர் கருத்துக்கள் #30

ஆன்மீக நிலை அடைய வேண்டும் என பலரும் எண்ணம் கொண்டும் அந்நிலையில் சிறப்புகள் காணுதல் வேண்டும் என ஏக்கம் கொண்டனர். அதற்குரிய பயிற்சிகள் யாரும் செய்வதில்லை. பயிற்சிகளை கையாளவே அனைத்தும் கைகூடும் என்பதை மறந்தீர்களே. அனைவரும் இன்று ஓடுகின்றனர் செல்வத்தை நாடியே செல்வம் வேண்டும் அதை மறுப்பதற்கில்லை. எந்த அளவிற்கு வேண்டும் என்பதே கேள்வியாகின்றது. மானிட நிலையில் வேண்டியது உடை, உணவு, இருப்பதற்கு ஓர் இடம் இதற்கு மேலாக சொத்துக்கள் சேர்ப்பது ஏன் என கேள்வி கேட்போம். குழந்தைகளுக்கு வேண்டும் என்று கூறினால் தவறாகாது குழந்தைகளால் அச்சொத்துகளை காக்க முடியுமா என கேள்வி கேட்போம் இல்லை அவர்கள் ஏமாற்றப்பட்டால்? என கேள்வி கேட்போம் இவையாவும் உங்களது பொறுப்பல்ல படைத்த இறைவனின் பொறுப்பே பின்பு நீங்கள் ஏன் செல்வத்தை நோக்கி ஓடுகின்றிர்கள். சிறு காலம் தெய்வ சிந்தனையில் ஈடுபடுங்கள்.

இரண்டாவதாக எதிர்காலங்கள் அறிய வேண்டும் என அறிய ஆவல் ஏன்? நடப்பது நன்றாகவே நடக்கும் அதை தடை படுத்த முடியாது. வீணாக ஜாதகத்தை எடுத்து அங்கும் இங்கும் அலைவதை சிறிது நிறுத்துங்கள். இறைவன் மீது பரிபூரணமாக நம்பிக்கை வையுங்கள். ஜாதக நிலைகளில் என்ன நடக்கும் என அறிந்து விட்டால் வருவதை உங்களால் தவிர்க்க முடியுமா? இயலாத நிலையில் அதை அறிந்து கொள்ள நினைப்பது ஏன்? ஜோதிடம் என்பது ஓர் பொய்யான அறிவு என்று யாம் இங்கு எடுத்துரைக்கவில்லை அதில் சத்தியம் உண்டு. ஆனால் அதை தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகின்றாய் என்பது தான் கேள்வியாகின்றது. இறைவனிடம் அனைத்தும் விட்டு விட்டு சரணடைந்த பின் எதிர்காலம் அவன் பொறுப்பாகின்றது. அதனை அறியாமல் அங்கும் இங்கும் ஓடி பல நூறு பணம் செலவு செய்து அவன் கூறும் பரிகாரங்களும் செய்த பின் இறைவனை குறை சொல்வது ஆகாது. முழுமையாக சரணடைந்தவனுக்கு எவ்வித தோல்விகள் நேரிடாது ஏனெனில் அவன் மனப்பக்குவன் அந்த அளவிற்கு இருக்கும். தன் கர்ம வினை தன்னை தொடர்ந்தது என அவன் அறிவான். இதற்கு இறைவன் பொறுப்பாக மாட்டான் சகிக்கும் தன்மை மட்டும் தருவான் என்பதை முழுமையாக உணர்ந்து சரணடைந்து முழுமையாக இறைவனை அடையுங்கள் இல்லையேல் அகங்காரத்தின் மறுபக்கமாக நான் செய்கிறேன் என்ற நம்பிக்கையில் செல்லுங்கள் மத்தியில் கிடந்து தவழாதிர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.