கைலாசநாதர் திருக்கோயில் 5

மூலவர் கைலாசநாதர். லிங்க வடிவில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்திய படியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படி நின்ற கோலத்தில் புன்சிரிப்புடன் காட்சி தருகிறாள். தீர்த்தம் தட்சிணகங்கை. ஊர் திருநெல்வெலி அருகே முறப்பநாடு. சூரபத்மனும் மற்ற அரக்கர்களும் செய்த கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் முறையிட்ட நாடு என்று பெயர் பெற்று பின்னர் அது முறப்பநாடு என மறுவியதாகவும் முறம்பு என்ற தடித்த கல் வகைகள் நிறைந்த மேடான பகுதியாக இருந்ததால் முறம்ப நாடு என அழைக்கப்பட்டு பின்னர் முறப்ப நாடாக மறுவியதாகவும் முற்காலத்தில் இங்கு வாழ்ந்த பெண்ணொருத்தி தன் வீட்டு முற்றத்திற்கு வந்த புலியை முறத்தால் அடித்து விரட்டியதால் முறப்பநாடு என்ற பெயர் வந்ததாகவும் மூன்று வகை பெயர்க் காரணங்கள் கூறப்படுகின்றன. புராண பெயர் கோவில்பத்து. தலமரம் பலாமரம். தீர்த்தம் தாமிரபரணி. இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. சோழ மன்னன் மகளின் குதிரை முகமாக பிறந்தது. அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக் கொண்டதால் இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக தலவரலாறு உள்ளது. இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலம் நடுகைலாயம் என்று பெயர் பெற்றது. அகத்தியரின் சீடரான உரோமச மகரிஷிக்கு இறைவன் இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார். இக்கோயிலில் சிவபெருமானே  தட்சிணா மூர்த்தியாகத் தென் திசை நோக்கி  வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

கோயில் உள்ளே நுழைந்தவுடன் பத்து தூண்களை கொண்ட பந்தல் மண்டபம் உள்ளது. அங்குக் கொடிமரம் பலிப்படம் நந்தி ஆகியவை உள்ளன. அதனை தாண்டி அர்த்த மண்டபமும் அதனை தாண்டிக் கிழக்கு நோக்கிய சுவாமி கைலாசநாதர் கருவறை உள்ளது. வெளியே தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை காட்சி தருகிறாள். கோவிலின் உள்சுற்று பிரகாரத்தில் முறையே அதிகார நந்தி சூரியன் ஜுர தேவர் நால்வர் அறுபத்து மூவர்கள் தெற்கு திசை நோக்கிய தட்சணாமூர்த்தி பஞ்ச லிங்கங்கள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் கஜலட்சுமி சனீஸ்வரர் சண்டிகேஸ்வரர் நடராஜர் சிவகாமி அம்மை சந்திர பகவான் ஆகியோர் பரிவார மூர்த்திகளாகக் காட்சி தருகின்றார்கள். கன்னிமூலை விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது. இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். நாய் வாகனத்துடன் காட்சி தருபவர் கால பைரவர். வாகனம் இல்லாதவர் வீர பைரவர். கோயிலுக்கு எதிரே ஆற்றின் மறு கரையில் தசாவதார தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரச் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது.

முற்காலத்தில் வாழ்ந்த சோழநாட்டு மன்னன் ஒருவனுக்கு முன்வினை பயனால் குதிரையின் முகம் கொண்ட பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் அந்த நிலைமையைக் கண்டு வருந்திய மன்னன்  பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அவனுடைய தூய பக்திக்கு இறங்கி அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் அவனது கனவில் தோன்றி இந்த முறப்பநாடு ஸ்தலத்திற்கு சென்று இங்குள்ள தாமிரபரணியில் நீராடி இங்கு லிங்க வடிவிலுள்ள தன்னை வணங்கிடுமாறு கூறினார். அதன் படியே மன்னனும் தன்  மகளை அழைத்துக் கொண்டு இங்கு வந்து தாமிரபரணியில் நீராடி இறைவனை வணங்க மன்னரின் மகளுக்கு இருந்த குதிரை முகம் மறைந்து சுய முகம் தோன்றியது. இதனால் மகிழ்ந்த சோழ மன்னன் லிங்க வடிவிலுள்ள சிவபெருமானுக்கு இங்கு கோயிலை கட்டினான். வல்லாள மகராஜா இக் கோயிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தான். நவகைலாய தலங்களில் ஐந்தாவதான இக்கோயில் நவக்கிரகங்களில் குருவிற்குரிய தலமாக விளங்குகிறது. நவகைலாயங்களில் மற்ற தலங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த தலத்திற்கு உண்டு. காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. அதே போல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை தட்சிணகங்கை என்று பெயர் பெற்றது. இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் ஐந்தாவதான இக்கோயில் குருவுக்கு உரியது. குரு தலம் என்றும் குரு கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள கலியாணகுறடு என்ற மண்டபத்தில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் தளபதி விட்டலராயன் இத்திருகோயிலுக்கு வந்து வழிபட்டதை விட்டிலாபுரம் கல்வெட்டு கூறுகிறது. இந்தக் கைலாசநாதரை மிருகண்டு மகரிஷி மார்க்கண்டேயன் மற்றும் காஞ்சனமாலை ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 555

கேள்வி: சில நாடி ஜோதிடர்கள் வருபவர்களின் பிரச்சனைகளை கேள்விகளாக எழுதி குருவின் பாதத்தில் வைத்தால் அவரே ஓலைச்சுவடி மூலம் பிரசன்னமாகி தக்க பதில் தருவார் என்று கூறுகிறார்கள் அது குறித்து:

இது குறித்து யாங்கள் என்ன கூறுவது? உண்மை ஆங்காங்கே இருந்துகொண்டு இருக்கும் உண்மைக்கு மாறான நிகழ்வும் இருக்கத்தான் செய்யும். மனிதர்கள்தான் அதனை நடைமுறையில் உணர்ந்து கொள்ள வேண்டும். யாம் ஏதாவது கூறினால் அது தேவையில்லாத எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே எப்போழுது ஒரு இடம் செல்கிறீகளோ அந்த இடம் மனதிற்கு பிடிக்கவில்லையா? இந்த சித்தர் அருட் குடிலாக இருந்தாலும் இதனையும் சேர்த்தே யாம் கூறுகிறோம். ஓரிரு முறை வருகிறீர்கள். வாழ்க்கையில் ஏதும் பெரிதாக மாற்றமில்லை அல்லது எதுவும் திருப்தியில்லை என்றால் தாராளமாக மனிதன் தன் கடமையை பார்த்துக் கொண்டு செல்லலாம். மீண்டும் மீண்டும் போராட வேண்டிய அவசியமில்லை என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இன்னவன் கேட்கின்ற வினா காலாகாலம் எம்முன்னை கேட்கப்படுவதுதான் மனிதன் தவறுகளை செய்து கொண்டுதான் இருப்பான். அந்த தவறுகளிலிருந்து அவனை வெளியே கொண்டுவர வேண்டும் என்றுதான் ஞானிகளும் மகான்களும் போராடுகிறார்கள். எமது நாமத்தை வைத்தும் தவறுகள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். மனிதர்கள்தான் இதுபோன்ற மனிதர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவன் விதி. அதுபோன்ற இடத்திற்கு சென்று அவன் ஏமாற வேண்டுமென்று இருந்தால் அது அங்ஙனம்தான் நடக்கும்.

கைலாசநாதர் திருக்கோயில் 6

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்க வடிவில் சனிபகவானின் அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். இறைவி சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியபடியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் காட்சி தருகிறாள். தீர்த்தம் தாமிரபரணி. தலவிருட்சம் இலுப்பை. சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. கோயில் இருக்கும் ஊரில் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது. திருமாலும் திருமகளும் இத்தலத்தில் தங்கியிருப்பதால் இவ்விடம் ஸ்ரீவைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. வைகுதல் என்றால் தங்குதல் என பொருள். இது நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகும். ஊமையாகப் பிறந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி பெற்ற குமரகுருபர சுவாமிகள் இவ்வூரில்தான் அவதரித்தார்.

கோயில் மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கோயிலுக்கு உள்ளே சென்றால் நந்தி கொடிமரம் பலிபீடம் ஆகியவை அமையப் பெற்றுள்ளன. வெளிப்பிரகாரம் முழுவதும் வில்வம் வேம்பு தென்னை வன்னி போன்ற மரங்களும் அரளி நந்தியாவட்டை திருநீற்று பச்சிலை போன்ற செடிகளும் வளர்ந்து நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக முறையே அதிகார நந்தி சூரியன் நால்வர் சுரதேவர் சப்தமாதர்கள் அறுபத்து மூவர் தட்சணாமூர்த்தி கன்னிமூலை கணபதி பஞ்ச லிங்கங்கள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மகாலட்சுமி துர்கை சண்டிகேஸ்வரர் சந்திரன் பைரவர் காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆகியோர் காட்சி தருகிறார்கள். இத்தலத்திலுள்ள நடராஜர் சந்தன சபாபதி என அழைக்கப்படுகிறார். நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர் மற்றும் நடராஜர் அக்னிபத்திரர் வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயில் கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் மேற்கூரையில் நவ கைலாயங்களைப் பற்றிய செய்திகளும் படங்களும் மூலிகைகளைக் கொண்டு படமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி ஒரு கருங்கல் சுவர் அதன் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. மற்ற தென்னிந்தியக் கோயில்களைப் போலல்லாமல் பிரமிடு வடிவ நுழைவுக் கோபுரத்தைக் கொண்ட கோவிலானது தட்டையான நுழைவாயில் கோபுரத்தைக் கொண்டுள்ளது. இங்கு யானை மற்றும் யாளியின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாளியின் வாய்க்குள் உருளும் வகையில் உருளை வடிவிலான கல் பந்து ஒன்று உள்ளது. இந்தப் பந்தை நம் கைகளால் உருட்ட முடியும். ஆனால் அதன் வாயில் இருந்து வெளியே எடுக்க முடியாது. இது பண்டைய காலத்து சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

கோயிலில் பூதநாதர் காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். இச்சிலை மரத்தால் செய்யப்பட்டது. ஆகவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனாதி தைலம் மட்டுமே தடவப்படுகிறது. முற்காலத்தில் இக்கோயிலை பூட்டி சாவியை அர்ச்சகர்கள் பூதநாதர் முன்பாகவே ஒப்படைத்துவிட்டு செல்வார்கள். சித்திரைத் திருவிழாவின் போது முதலில் இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவர் சாஸ்தாவின் அம்சமாக கருதப்படுகிறார். இக் கோவிலில் உள்ள பூத வாகனம் பரிவார தெய்வமாக வணங்கப்படுகிறது. 3ம் நாள் விழாவின் போது இவர் மீது சுவாமி எழுந்தருளுகிறார். இந்தப் பூத வாகனம் திருநெல்வேலி அருகே உள்ள செப்பறை நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும் முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கினால் செப்பறை பழைய கோவில் சிதிலமடைந்து அங்கிருந்த பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து ஆற்றில்  அடித்துக் கொண்டு வரப்பட்ட பூத வாகனமே இங்குள்ள பூதநாதர் என்று செப்பறை மஹாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூத நாதர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கிலி பூதத்தாரின் அம்சமாக இங்கு வணங்கப்படுகிறார்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் ஆறாவது இக்கோயில் ஆறாவது கிரகமான சனிபகவானுக்கு உரியது. சனிபகவான் தலம் என்றும் சனிஸ்வர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

கோயிலில் கல்வெட்டுகள் அதிக அளவில் உள்ளன. கோயிலின் தல வரலாறு கோயிலுக்குரிய இடங்கள் அதன் அமைப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. இதில் இக்கோயிலை கட்டிய குலசேகரபாண்டிய மன்னனின் வரலாறு கோயில்களுக்கு மன்னர்கள் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் கோயிலின் விழாக் காலங்கள் முக்கிய திருவிழா போன்ற தகவல்கள் உள்ளது. இக்கோயில் முதலில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சந்திரகுல பாண்டியனால் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இக்கோயிலின் விமானங்களையும் மண்டபங்களையும் மதுரை சந்திரகுல பாண்டியன் கட்டினார். கோயில் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தினர் மற்றும் நாயக்கர்களால் அடுத்தடுத்து புதுப்பிக்கப்பட்டது. மதுரை நாயக்கர் வம்சத்தின் ஆட்சியாளரான வீரப்ப நாயக்கர் கிபி 1609-23 யாகசாலை கொடிமரம் மற்றும் சந்தன சபாபதி மண்டபம் கட்டினார். கோவிலில் உள்ள பல சிற்பங்கள் பெரிய மொட்டை கோபுரம் ஆகியவற்றை திருமலை நாயக்கர் கட்டினார். வேள்விச்சாலை சந்தன சபாபதி மண்டபம் கொடி மரம் அதன் கீழ் அமைந்திருக்கும் பத்தி மண்டபம் ஆகியவற்றை வீரப்ப நயக்கர் கட்டினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 554

கேள்வி: இராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கக் கூடிய திருப்பாம்புரத்தைப் பற்றி சொல்லுங்கள்:

இராகுவும் கேதுவும் எப்பொழுதுமே சேராதப்பா. இதுபோல் நிலையிலேயே பல்வேறு நாகதோஷங்கள் நீக்குகின்ற ஸ்தலங்களில் திருப்பாம்புரமும் ஒன்று. ஆனால் அங்கும் வழக்கம் போல் பல்வேறு இடைச்செருகல்கள் வந்துவிட்டன. எமக்கு ஏதோ சாபம் ஏற்பட்டதாகவும் அங்கு வந்து நீங்கியதாகவும் கூட வாசகங்கள் அங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படியாயினும் இது போன்ற சாபநிவர்த்தி தலங்களிலே பரிபூரண உள்ளத்தோடு வேண்டிக் கொண்டால் கட்டாயம் நல்ல நன்மைகள் கிடைக்குமப்பா. அது மட்டுமல்ல பொதுவாக நாக தோஷம் அல்லது வேறு தோஷங்களுக்கும் பிரயாச்சித்தம் என்ற பெயரிலே அந்தந்த கிரகங்களுக்கும் கிரக அதி தேவதைகளுக்கும் ப்ரீதி செய்வதோடு அந்த கிரகம் தொடர்பான தர்மங்களையும் செய்ய வேண்டும். இராகு என்றால் விஷம் என்று வைத்துக் கொண்டால் விஷம் நீங்கும் மருந்துகளை வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்யலாம். ஒவ்வாமை நோய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறும் மனிதனுக்கு உதவியை செய்யலாம். குரு பிரீதி செய்ய வேண்டியவர்கள் குரு பிரீதி பூஜைகள் செய்வதோடு மனித நிலையிலே குருவாக இருக்கக் கூடியவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். இவைதான் உண்மையிலேயே குரு தோஷம் நீங்குகின்ற உபாயமாகும்.

கைலாசநாதர் திருக்கோயில் 7

மூலவர் கைலாசநாதர். தாமரை வடிவ பீடத்தின் மீது லிங்கத் திருமேனியில் அருள் புரிகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மை. ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறாள். அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் விருட்சதீர்த்தம் தாமிரபரணி. ஊர் தென்திருப்பேரை. பெரிய கோட்டை இருக்கும் ஊரை பேரை என சொல்வார்கள். இவ்வூர் தமிழகத்தின் தெற்கே பெரிய கோட்டை போல் இருப்பதால் தென்திருப்பேரை என்று பெயர் பெற்றது. நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம் குதிரையாகும். இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன் சந்திரன் குருபகவான் சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். குருவும் சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும் சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இவ்வூரில் உள்ள மகர நெடுங்குழைக்காதர் (பெருமாள்) கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பெருமாள் கோயில் சுக்கிரனின் அம்சத்தை கொண்டது. இந்தக் கோவிலில் உறையும் தாயார் திருப்பேரை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெயரால் தென்திருப்பேரை என்றும் அழைக்கப்படுகிறது. மழைக் கடவுளான வருண பகவான் இங்கு இறைவனை வழிபட்டதால் இந்தத் தலம் வருண ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றின் தெற்கு கரையோரம் அமையப்பெற்றுள்ள இந்தக் கோவிலுக்குள் நுழையத் தெற்கு வாயிலே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுற்று பிரகாரத்தில் நந்தி விநாயகர் தட்சிணாமூர்த்தி சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் நடராஜர் சிவகாமி அம்மை பைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாகக் காட்சி தருகிறார்கள். வல்லப விநாயகர் சக்தி விநாயகர் கன்னிமூல கணபதி சித்தி விநாயகர் என நான்கு விநாயகர்கள் உள்ளார்கள். இக்கோயிலில் கால பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலத்து இறைவன் வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால் பைரவருடன் நாய் வாகனம் இல்லை. பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனைப் போல வலது கையில் தாமரை மலருடன் காட்சி தருகிறார். இவருடன் வள்ளி தெய்வானை இருக்கின்றனர். சனிபகவானுக்கு தனிசன்னதி உள்ளது.

அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்தார். சாவடியில் தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர் ஒரு தென்னந் தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி அந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால் தர முடியாது என சொல்லி விட்டார். கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம் இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? சும்மா பறிச்சு போடு என்றார். விவசாயி கலெக்டரின் உத்தரவை தட்ட முடியாமல் ஒரு இளநீரை பறித்துப் போட்டார். அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. இதைக்கண்ட கலெக்டர் பயந்து விட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தினசரி பூஜைக்காக ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்த தேங்காய் தற்போதும் இக்கோயிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்து விட்டது. தற்போது இந்த தேங்காய் இரண்டு கொம்புகளுடன் உள்ளது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் புதன் பகவானுக்கு உரியது. புதன் பகவான் தலம் என்றும் புதன் கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

கோவிலில் உள்ள சுவர்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூணில் முதலாம் குலோத்துங்கனின் கிபி 1109 ஆண்டு கல்வெட்டு உள்ளது. இதில் ராஜராஜப் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டுத் திருவழுதி வளநாட்டு தென்திருப்பேர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வீரகேரளவர்மன் கல்வெட்டில் திருவழுதி வளநாட்டு திருப்பேரான சுந்தரபாண்டியச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீகைலாசமுடையார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே போல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளும் உள்ளன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 553

கேள்வி: ஒரு உயிர் உடலை விட்டபின் அந்த ஆன்மாவிற்கு இறைவன் முக்தி அளிக்க முடிவு செய்துவிட்டால் அந்த ஆன்மா இறைவனிடம் ஐக்கியமாக எடுத்துக் கொள்ளும் கால அளவு என்ன?

காலம் நேரம் இடம் பொருள் எடை எல்லாம் இந்த உலகத்தை பொறுத்தமட்டில் தானப்பா. இந்த உலகத்தை தாண்டி பல்வேறு உலகம் சென்று விட்டால் இப்பொழுது இருக்கின்ற எந்த கணிதமும் வேலை செய்யாது. புரிவதற்காக இந்த இதை வேறுவிதமாக கூறினால் இங்கு ஒரு மனிதன் இப்பொழுது உள்ள 50 கிலோ எடை இருப்பதாக கொள்வோம். அவன் குரு கிரகத்திற்கு சென்று விட்டால் இதை போல் மூன்று மடங்கு ஆகிவிடுவான். இப்பொழுது அவனின் உண்மையான எடை என்ன என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? எனவே காலம் இல்லை என்பது தான் இறைவனோடு இணைகின்ற அந்த தருணம் அப்பா

கைலாசநாதர் திருக்கோயில் 8

மூலவர் கைலாச நாதர் லிங்க உருவத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்ர வடிவங்கள் உள்ளன. சிவனுக்கு ஆஷூதோஷ என்ற திருநாமமும் உண்டு. அதன் பொருள் எதை விரும்பி சிவனிடம் கேட்கிறோமோ அதை முழு மனதுடன் ஆனந்தமாக வழங்குவார் என்பதாகும். அம்பாள் சவுந்திர நாயகி சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் சௌந்தரிய நாயகி அம்பாள் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்தவளாகக் அருளுகிறாள். சிவனின் வாகனமான நந்தி பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஊர் இராஜபதி. தலமரம் நெல்லி. தீர்த்தம் பாலாவி. இறைவனுக்கு இங்கு சிவனுக்கு ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் என 5 முகங்கள் இருப்பதினால் சிவனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர். பொதுவாக சிவன் கோயில்களில் நவகிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும். காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இதை தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது.

கோயில் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும் எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர். விநாயகர் 63 நாயன்மார்கள் ஆதிகைலாசநாதர் காளத்தீஸ்வரர் வள்ளி தெய்வயானை சமேத முருகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கைலாச நாதர் அம்பாள் நித்ய அக்னி எனப்படும் விநாயகர் ஆகிய மூவருக்கு மட்டும் மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி பூஜைகளும் ஆராதனைகளும் நடக்கிறது. சுமார் 4 1/2 அடி உயரத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனிச் சன்னதி உள்ளது. இவருக்கு மிருகசீரிட நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடந்து வருகின்றன. நவகிரகத்தில் எந்த கிரக தோஷம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்களே தங்கள் கைகளால் அபிஷேகம் பூஜை செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் கேது பகவானுக்கு உரியது. கேது பகவான் தலம் என்றும் கேது கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

உரோமச முனிவர் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது. அங்கே சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். பின் அந்த இடத்தில் சந்திரகுல பாண்டிய மன்னன் கோயில் எழுப்பினார். அக்காலத்தில் அரசர்கள் இத்தல ஈசனை வணங்கிய பின் போரில் வெற்றி பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இக்கோயில் அழிந்து போனது. இங்கிருந்த நந்தி விக்கிரகம் தற்போது ஓட்டப்பிடாரம் என்னும் ஊரில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அழிந்த கோயிலைப் பற்றிய தாக்கம் நீண்ட நாட்களாக அப்பகுதி சிவனடியார்கள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியார்கள் ஒன்று கூடி சிறப்பான ஓர் கோயிலை அந்த இடத்திலேயே எழுப்புவதற்கு முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்தனர். சிவனடியார்களின் பெருமுயற்சியாலும் பங்களிப்புடனும் அழிந்து போன இப் புனித ஸ்தலம் 2008 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி அழகிய வடிவமைப்பில் கட்டப் பெற்றுள்ளது. இதன் கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது. இத்தனை பெருமைகளைக் கொண்ட இந்த சிவன் கோயிலிற்கு ஆரம்பத்தில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. பின்பு 7 நிலை ராஜ கோபுரம் கட்டப்பட்டு 14.06.19 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 552

கேள்வி: குழந்தை பிறந்ததும் முதலில் தேன் கொடுப்பதும் பின்பு சில நாள் கழித்து குழந்தைக்கு சிகையை அகற்றுவது பற்றியும்:

இறைவன் அருளால் சிகையை அகற்றுவது என்பது ஆரோக்கியம் தொடர்பான விஷயம். சிகையை அகற்ற அகற்றத்தான் சிகை நன்றாக ஆரோக்கியமாக வளரும். இதை இறை நாமத்தோடு தொடர்பு கொண்டு விட்டால் மனிதன் பயபக்தியோடு செய்வான் என்பதற்காக முன்னோர்கள் வகுத்தது. மற்றபடி தூய்மையான தேனை தருவதும் ஆரோக்கியம் தொடர்பான விஷயம். நல்ல விதமான மழலை பேச்சு வரட்டும் நல்லவிதமான நோய் எதிர்ப்பு சக்தி வரட்டும் என்பதற்காகத்தான். மற்ற விஷயங்கள் எல்லாம் மனிதர்கள் நாகரீகம் கருதி ஏற்படுத்திக் கொண்ட சடங்குகள் அவ்வளவே.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 551

கேள்வி: அருணகிரிநாதர் பாடிய நாத விந்து கலாதீ நமோ நம என்ற வரிகளின் பொருள்:

இப்பொழுது உள்ள கிரக நிலையிலே இதன் பொருள் கூறுவது கடினம். முன்பே துறவு நங்கை கேட்டுவிட்டாள். பின்னர் உரைப்பதாக கூறியிருக்கிறோம். எனவே (இதற்கும்) பின்னர் உரைக்கிறோம். இருந்தாலும் இதன் பொருள் என்பது ஆண் சக்தி பெண் சக்தி சேர்ந்த அந்த சங்கமத்தை குறிப்பதாகும். இரண்டும் சேர்ந்த நிலையிலே உள்ள இறைவா என்பது சூட்சும பொருளாகும்.

விளாங்கனி பழுக்கும் முன்னர் எப்பொழுதுமே ஓடோடு ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். பலத்த பிறகுதான் ஓட்டை விட்டு ஒதுங்கி தனியாக உள்ளே சுழன்று ஆடும். எனவே பக்குவம் பக்குவம் பக்குவம் என்ற நிலை வந்த பிறகுதான் இந்த நினைவு சாத்தியமாகும். இல்லை என்றால் தானே தானாக தன்னைத்தான் வேறாக பார்க்க இயலாமல் போய்விடும்.

கைலாசநாதர் திருகோயில் 9

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கிய சன்னதியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்பாள் சௌவுந்தர்ய நாயகி. புன்னகை காட்டும் முகத்துடன் நின்ற கோலத்தில் தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்க விட்ட படியும் காட்சி தருகிறாள். தலமரம் வில்வ மரம். தீர்த்தம் தாமிர புஷ்கரணி. ஊர் சேர்ந்தபூமங்கலம். நவ கைலாயத்தில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும். பொதிகை மலையில் தோன்றிய தாமிரபரணி பாபநாசத்தை முதல் திருத்தலமாகக் கொண்டும் கடலில் சங்கமிக்கும் சேர்ந்தபூமங்கலத்தை இறுதித் தலமாக கொண்டும் விளங்குகிறது. தாமிரபரணியின் நீரில் ஒன்பது மலர்களை மிதக்க வைத்தார். ஒன்பதாவது மலர் சேர்ந்த இடமாகையால் சேர்ந்த பூ மங்கலம் என்று பெயர் பெற்றது. இதன் பொருள் மலர் பயணத்தை முடித்த இடம் என்பதாகும். ஒரு நதி கடலுடன் சங்கமிக்கும் இடம் மங்கலம் என்று அழைக்கப்படுகிறது. 

கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்ற இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தஉடன் பலிபீடம் கொடிமரம் நந்தி ஆகியவை காட்சித் தருகின்றன. அவற்றை தரிசித்து உள்ளே நுழைந்தால் இடப்புறம் வடக்கு நோக்கிக் காட்சித் தரும் அதிகார நந்தியை தரிசிக்கலாம். பிரகாரத்தில் பரிவார முர்த்திகளாகச் சூரியன் சந்திரன் நால்வர் சுரதேவர் சப்த கன்னியர் அறுபத்து மூன்று நாயன்மார்கள் தட்சிணாமூர்த்தி விநாயகர் மீனாட்சி சொக்கநாதர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் துர்க்கை மகாலட்சுமி சரஸ்வதி நடராஜர் சிவகாமி பைரவர் நவலிங்கங்கள் சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னிதி உள்ளது. கருவறைக்கு மேலே உள்ள விமானத்தில் யானை மீது குபேரனின் சிலை அவரது இரு துணைவியார்களான சங்கநிதி மற்றும் பத்மநிதியுடன் செதுக்கப்பட்டுள்ளது. 

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் சுக்கிர பகவானுக்கு உரியது. சுக்கிர பகவான் தலம் என்றும் சுக்கிர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

அகத்தியரின் வழிகாட்டுதலின் படி 9 இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட உரோமச முனிவர் தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்கு முகத்தில் நீராடி வழிபட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் முனிவரின் முன்பாக தோன்றி முனிவரின் விருப்பப்படியே முக்தி அளித்து அருளினார். இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான்.