ஒற்றைக் கல்லில் கருடன் விஷ்ணு லட்சுமி மற்றும் 8 பாம்புகள் என 11 கடவுள்கள் செதுக்கப்பட்டுள்ளனர். 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டில் ராமானுஜாச்சாரியாரால் நிறுவப்பட்ட சிலை இது. சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. கருட பகவான் ஒரு காலில் மண்டியிட்டு வலது கையில் விஷ்ணு பகவானனையும் இடது கையில் லட்சுமி தேவியையும் ஏந்தி நிற்கிறார். இடது கை சிறிது உயர்ந்த நிலையில் உள்ளது. இது லட்சுமியின் செல்வச் செழிப்பைக் குறிக்கிறது. மகாவிஷ்ணுவும் கருடனும் மகாலட்சுமியை நோக்கி தரிசனம் செய்கின்றனர். ஆனால் லட்சுமி தேவி நேராக அமர்த்த வண்ணம் தன்னை நாடி வரும் பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். கருடன் சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. அதைச் சுற்றி 8 பாம்புகள் அவரது அணிகலன்களாக உள்ளன. இது விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோவில். இடம்: கருடதேவஸ்தானம். கோலாதேவி கிராமம். கோலார் மாவட்டம். கர்நாடக மாநிலம்.
புராண சிற்பங்கள்
தேவகி தாயாருடன் பாலகிருஷ்ணர்
கோவா மாநிலத்தில் மார்செல் இடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவகி கிருஷ்ணர் கோவிலில் மட்டுமே கிருஷ்ண பரமாத்மா தேவகி தாயாரின் இடுப்பில் அமர்ந்திருப்பார். கிருஷ்ணரின் குழந்தை வடிவத்துடன் அன்னை தேவகி வழிபடப்படும் ஒரு அரிய கோயிலாகும்.
இரட்டை நந்தி
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டரில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் இங்கு 2500 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இல்லை. உடைந்த நிலையில் காணப்படுகிறது.
ஒரு முறை விவசாயி ஒருவரின் நிலத்தில் மாடு ஒன்று மேய்ந்தது. ஆத்திரமடைந்த விவசாயி அந்த மாட்டின் காதையும் கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த கற்சிலையான நந்தியின் கொம்பும் காதும் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. வந்தது. தெய்வ நந்தி என்பதை அறியாமல் செய்த தவறுக்கு விவசாயி வருந்தினார். அதற்கு பிராயச்சித்தமாக புதிய நந்தி சிலை ஒன்றை பழைய நந்தி சிலையின் பின்பாக பிரதிஷ்டை செய்தார்.
சாதிபிரல்ல அகஸ்தியேஸ்வரர்
சிவலிங்கத்தின் தலையில் சடாமுடி உள்ளது. சடாமுடியில் இருந்து வரும் தலைமுடி சிவலிங்கத்தின் பாணத்தில் தலையை சுற்றி பரந்து விரிந்திருக்கிறது. இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் வெவ்வேறு வம்சங்களால் புணரமைக்கப்பட்டது. 1500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயிலில் 12 கல்வெட்டுகள் உள்ளன. 9 ஆம் நூற்றாண்டில் குறிப்பிட்ட அம்மனா பேக்கடா கோயிலை மீண்டும் புதுப்பித்து கட்டினார். இடம் கமலாபுரம் கடப்பா மாவட்டம். ஆந்திரப் பிரதேச மாநிலம்.
சூரிய பகவான்
தேரோட்டி அருணா ஏழு குதிரைகள் கொண்ட தேரை ஓட்ட தேரில் இரண்டு தாமரை மலர்களை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சூரிய பகவான். தேர் வேகமாக செல்வதை குறிக்கும் வகையில் சூரிய தேவனின் பின்னால் பறக்கும் அவரின் வஸ்திரம். இடம் வாராஹி தேயுலா கோவில். ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் சூரிய கோவிலுக்கு வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள சௌராஷி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.
அண்ணாமலையார்
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அண்ணாமலையார் சன்னதி
சந்தியா தாண்டவம்
சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றான சந்தியா தாண்டவம். இடம்: சாண்ட் தர்ஷன் அருங்காட்சியகம், ஹட்ஷி மகாராஷ்டிரா மாநிலம்.
நாகச்சந்திரேஸ்வர்
உஜ்ஜயினி உள்ள நாகசத்திரேஸ்வரர் சிலை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரமார் கால சிலையாகும். இந்த சிலை நேபாளத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது. செங்கற்களால் ஆன இந்த சிற்பத்தில் சிவனும் பார்வதியும் நாகத்தின் மீது அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுவைப் போல் சிவன் பார்வதியுடன் பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிலை இக்கோயிலை தவிர்த்து வேறு எங்கும் இல்லை. சிவபெருமானை நோக்கி தவம் செய்த நாகராஜருக்கு அவரது தவத்தின் பலனாக இறைவன் அவருக்கு அழியாத தன்மையைக் கொடுத்தார்.
நாகம் அவர்கள் மீது குடை வடிவில் படர்ந்துள்ளது. சிவனுக்கு வலதுபுறம் விநாயகர் இருக்கிறார். இக்கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும். இந்த வருடம் முறை ஆகஸ்ட் 9ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகசந்திரேஸ்வரர் சன்னதி திறக்கப்பட்டு மறுநாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 12 மணி வரை வழிபடப்பட்டு மீண்டும் சன்னதி மூடப்பட்டது. 1050 ஆம் ஆண்டு பர்மர் மன்னர் போஜ் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இதற்குப் பிறகு, சிந்தியாவின் மன்னர் ரானோஜி 1732 இல் மகாகல் கோயில் மற்றும் நாகச்சந்திரேஷ்வர் கோயில் உட்பட முழு அமைப்பையும் புதுப்பித்து பலப்படுத்தினார். உஜ்ஜயினி மாகாளர் கோயிலின் 3 ஆவது தளத்தில் இந்த சன்னதி உள்ளது.
கார்த்திகேயன்
எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கார்த்திகேயன் சிற்பம் உத்திரபிரதேச மாதிலத்தில் கன்னோஜ் நகரில் உள்ளது.
அடிமுடிகாணா அண்ணாமலை
மேலே அன்னப் பறவையாக படைக்கும் கடவுள் பிரம்மா தாழம்பூவுடன் விவாதிக்க கீழே வராக ரூபத்தில் பூமியை பிளந்து ஈசனின் அடியைக்கான காக்கும் கடவுளான விஷ்ணு பயணிக்க தீர்ப்பினை கூற ஜோதி பிழம்பாக எம்பெருமான் ஈசன் காட்சியளிக்கும் தத்ரூபமாக தூணில் வடிக்கப்பட்டுள்ள சோதி வடிவான அடிமுடிகாணா அண்ணாமலை சிற்பம். இடம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படும் ஔஷதீஷ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.