கண்டபேருண்டா

வலிமை கொண்ட இரு தலைகள் கொண்ட பறவையான கண்டபேருண்டா மல்லிகார்ஜூனா கோவிலில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. 1399 முதல் 1947 வரை மைசூர் சாம்ராஜ்யத்தை ஆண்ட உடையார்களின் அரச முத்திரையாக இந்த வலிமைமிக்க பறவை இருந்தது. தற்போது கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது.

சிவசக்தி

சிவபெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை. அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள். அவள் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் சிற்பிகள். இடம்: ஹலபேடு. ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

நடராஜர்

வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர் இருவருக்கும் நடராஜர் தனது திருநடனத்தை காட்டி அருளிய காட்சி. இடம் முக்தீஸ்வரர் கோவில். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

கல்யாண சுந்தரேசுவரர்

மணக்கோலத்தில் சிவனும் உமையவளும். இடம் திருவாலந்துறையார் திருக்கோயில் மகாமண்டபத்தில் நுழைவாயில் வலதுபுறம் அமைந்துள்ளது. கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.

புன்னகையுடன் நரசிம்மர்

விஜயநகர காலத்து நரசிம்மரின் சிற்பம். கடிஹஸ்தத்துடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். அவரது பாதங்களுக்கு கீழே அஞ்சலி முத்திரையுடன் கருடபகவான் அமர்ந்துள்ளார். நரசிம்மரின் இருபுறம் சங்கு மற்றும் சுதர்சனம் இருக்கிறது.