காசி தங்க அன்னபூரணி கோவில் மிட்டாய் திருவிழாவில் லட்டுத் தேரில் தீபாவளியன்று மட்டுமே காட்சியளிப்பாள்.




காசி தங்க அன்னபூரணி கோவில் மிட்டாய் திருவிழாவில் லட்டுத் தேரில் தீபாவளியன்று மட்டுமே காட்சியளிப்பாள்.
லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.
கருடன் மீது சவாரி செய்யும் விஷ்ணு பகவானின் 9 ஆம் நூற்றாண்டு பழங்கால சிலை. இடம் கம்போடியா
அமிர்த கலசத்திற்காக கருடபகவான் நாகர்களுடன் சண்டையிடும் காட்சி கருட விஷ்ணு கெஞ்சனா பண்பாட்டு பூங்காவில் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் உள்ளது.
சென்னை அருகே உள்ள கானாத்தூரில் உள்ள ஜகநாதர் கோவிலில் இடம்பெற்றுள்ள திரிவிக்ரமன் மற்றும் வராக மூர்த்தியின் சிற்பம்.
மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம் அதைச் சுற்றி நவதுர்கைகள். நேபாளம் பக்தபூரில் அமைந்துள்ளது.
கண்ணனை ஒரு புறமிருந்து பார்த்தால் ருக்மிணியை மட்டும் அணைத்திருப்பதாய் தோன்றும். மறுபுறம் பார்த்தால் சத்யபாமாவை மட்டும் கைபிடித்திருப்பதாய் தோன்றும். தூணின் கோண பகுதியில் நின்று கண்டால் கண்ணன் இருவரையும் கைபிடித்திருப்பதை காணலாம்.
பழமையான சிவலிங்கம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பழமையான சிவலிங்கம்.
சிலி சான்டியாகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 1100 ஆண்டுகள் பழமையான நவகிரகங்கள் கொண்ட சிற்பம். இடமிருந்து வலமாக சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி ராகு மற்றும் கேது. ராகுவின் தலையில் பல நாகங்கள் கோபுரங்கள் போல் இருப்பதை காணலாம்.