ஸ்ரீசக்ராத்தில் அனுமான்

கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள யந்த்ரோதரகா அனுமான் கோவிலில் கிரானைட் பாறையில் கட்டப்பட்ட ஸ்ரீசக்ராவின் மையத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அனுமான்.

அவதாரத்ரய அனுமான்

மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவபிருந்தாவனத்தில் இந்த அனுமன் அருள் பாலிக்கிறார். மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த அனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய அனுமான். அனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார்.

அனுமன்

ராம தூதுவனாக ராவணனிடம் சென்ற அனுமன் தனது வாலை ஆசனமாக உருவாக்கி ராவணனுக்கு சரி சமமாக அமர்ந்திருக்கும் காட்சி. இடம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்ரியில் உள்ள சிந்தல வெங்கடரமண சுவாமி கோயில்

லட்சுமணன்

லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.

ஸ்ரீ ராமர்

ரிஷிகளின் அறிவுரைப்படி ஸ்ரீ ராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் சேர்ந்து பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க சிவலிங்கத்தை நிறுவி ஆகம முறைப்படி வழிபட்டார். அனுமன் அருகில் இருந்தார். அப்போது சிவன் பார்வதியுடன் வானில் தோன்றினார். இராமநாதசுவாமி கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள தூணில் இதை விளக்கும் சிற்பம்.