கர்நாடகாவின் விஜயபுரா பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சக்கராங்கிதா லிங்கம் என்று அழைக்கப்படும் இந்த லிங்கம் புராதாண பண்டைய லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தின் மேல் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. ஸ்ரீசக்கரத்தின் மைய பகுதியில் தேவி லலிதா பரமேஸ்வரி வசிக்கிறாள்.
Year: 2021
சக்ர லிங்கம்



தூக்கத்தில் அருள் கொடுக்கும் அனுமன்
மகாராஷ்டிராவின் லோனாரில் உள்ள மோத்தா அனுமன் கோவிலில் ஒரு காந்த பாறையால் கட்டப்பட்ட படுத்த நிலையில் ஒரு பெரிய அனுமன் மூர்த்தி உள்ளார். 8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் அனுமன் ஆரம்பத்தில் இருந்து தூக்க நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். கண்கள் திறந்த நிலையில் இருந்தாலும் இவர் தூக்கத்தில் இருப்பதாக கோவிலின் புராண வரலாற்றுப்படி சொல்லப்படுகிறது. 8 ஆம் நூற்றாண்டில் லோனார் பள்ளத்தை உருவாக்கிய விண்கல்லால் ஏற்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து இந்த அனுமனின் சிலை செதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மூர்த்தி 9.3 அடி உயரமும் அனுமனின் இடது கால் சனி தேவரின் சிறிய சிலை உள்ளது. இந்த சிலை பல ஆண்டுகளாக சிவப்பு நிற செந்தூரம் பூசப்பட்டிருந்தது. இப்போது செந்தூரம் அகற்றப்பட்டு அனுமனின் அசல் வடிவத்தை காணலாம்.
கும்பேஷ்வர்
மகாராஷ்ரா மாநிலத்தில் சடாரா என்னுமிடத்தில் பழமையான பட்டீஸ்வர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள சிவலிங்கம் கும்பேஷ்வர் பிண்ட் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவ லிங்கத்தைப் பற்றி இந்து வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் உள்ளது. இக்கோவிலைப் பற்றி ஸ்ரீ க்ஷேத்ரா பட்டீஸ்வரர் தரிசனம் என்ற வரலாற்று நூல் உள்ளது. இந்த புராதாண சிவலிங்கத்தை சுற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் 8 குகைக் கோயில்கள் உள்ளது. இவற்றில் 1000 க்கும் மேற்பட்ட சிவ லிங்கங்கள் உள்ளது. இக்குகைக்குள் நிலத்திற்கு அடியிலும் சிவ லிங்கங்கள் உள்ளது. குகைக் கோயிலில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்ட பாம்பு மற்றும் சிறிய சிவலிங்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிக்கலான சிற்பங்களைக் கொண்ட மகா சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலிலுள்ள பல தெய்வங்கள் தனித்துவமாக அழகாக உள்ளது. இந்த தெய்வங்களின் பெயரை இன்னும் முழுமையாக அடையாளம் காணமுடியவில்லை.
அக்னீஸ்வர் மற்றும் இறைவனின் வாகனமான காளை இருவரும் சேர்ந்த உடலுடன் ஒரு சிற்பம் இருக்கிறது. இந்த சிற்பத்தில் முகம் பார்ப்பதற்கு ஒரே முகமாக தோன்றினாலும் நன்றாக பார்த்தால் அக்னீஸ்வரரின் முகமும் காளையின் முகமும் தெரியும். அக்னீஸ்வரரின் எழு கைகளுடனும் இரண்டு கால்களுடனும் காளையின் நான்க் கால்களுடனும் இந்ம சிற்பம் உள்ளது. இந்த உருவத்தை வலிமைமிக்க கடவுள் மனிதர்களுக்குள் நுழைந்தார் என்று ரிக் வேதம் 4.58.3 விவரிக்கிறது. இந்த குகைகளில் நவகிரகத்தின் சிற்பங்களும் உள்ளது. நான்கு முகம் கொண்ட சிவலிங்கம் பல சிற்பங்கள் மத்தியில் முற்றத்தில் உள்ளன. பிரதான அறையின் நுழைவாயிலில் கதவின் இருபுறமும் ஆண் வடிவிலான இறை உருவங்கள் திரிசூலங்களையும் பெண் வடிவிலான இறை உருவங்கள் கங்கா மற்றும் யமுனா தண்ணீர் பானைகளையும் வைத்திருக்கின்றார்கள். சிறிய கட்டைவிரல் ஆணி அளவிலான செதுக்கப்பட்ட சிற்பங்கள் முதல் 2 மீ நீளம் வரையிலான சிற்பங்கள் உள்ளது. கோவிலுக்கு வெளியே திரிமூர்த்தியுடன் ஒரு சிவலிங்கமும் கல்லால் செய்யப்பட்ட இரண்டு பெரிய விளக்குத் தூண்களும் உள்ளது. இங்கு சத்குரு கோவிந்தானந்தசாமி மகாராஜ் மட் என்று அழைக்கப்படும் ஒரு மடம் உள்ளது. பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் ஒரு சில சாதுக்களால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றி உள்ள மலையில் சுமார் 52 வகையான மருத்துவ தாவரங்கள் உள்ளன.
தபகேஸ்வர் குகைக்கோவில்
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ள இக்கோவில் மஹாதேவ் கோவில் என்றும் தபகேஷ்வர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான சிவலிங்கம் குகைக் கூரையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்குகைக்குள் இயற்கையாக அமைந்த சிவலிங்கமும் உள்ளது. இந்த குகைக்கோயிலின் கூரையிலிருந்து சிவலிங்கத்தின் மீது நீர் தொடர்ச்சியாக சொட்டிக் கொண்டே இருப்பதால் தப்கேஷ்வர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. தபக் எனும் சொல்லுக்கு இந்தியில் சொட்டுவது என்று பொருளாகும். இந்த கோயிலைச் சுற்றிலும் நிறைய கந்தக நீரூற்றுகள் உள்ளது. இவற்றில் வெளிப்படும் நீருக்கு மருத்துவக்குணங்கள் உள்ளது.
மகாபாரத புராதாண கதையின் படி துரோணாச்சாரியின் மனைவி கல்யாணிக்கு இந்த குகையில் அஸ்வத்தாமன் பிறந்தார். துரோணாச்சாரியா மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் தன் மகன் அஸ்வத்தாமாவுக்கு பால் வழங்க முடியவில்லை. அப்போது சிவபெருமான் குழந்தைக்கு பாலை பாய்ச்சி உள்ளார். பாண்டவர்கள் இந்த சிவபெருமானை வழிபட்டு உள்ளார்கள். துரோணாச்சார்யார் அவரது மனைவியான கல்யாணி மற்றும் மகன் அஸ்வத்தாமன் ஆகியோருக்கு இக்கோவிலில் சிற்பம் உள்ளது.
அட்சய திருதியை
காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூரணி தேவி தான் பிட்சாடணராய் வந்த ஈசனுக்கு உணவளித்தால் தானே அன்னத்திற்கு அதிபதி என்று சிறு கர்வம் கொண்டாள். அந்த கர்வத்தை போக்குவதற்கு சிவபெருமான் ஒரு சிவயோகியாக தோற்றம் கொண்டு அன்னபூரணியம் வந்து தாயே பசி என்றார்இதை கேட்ட அன்னபூரணி தேவி இலையிட்டு தன்னால் இயன்ற வரை உணவுகள் அனைத்தையும் பரிமாறினார். சிவ யோகியோ இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கி உட்கொண்டுக் கொண்டே இருந்தார். அன்னபூரணி உருவாக்கிய உணவுகள் அனைத்தும் பூர்த்தியாக அன்னபூரணி தேவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற தன்னுடைய அண்ணனாகிய மகா விஷ்ணுவை பிரார்த்தித்து அழைத்தார். நடந்தவற்றை அறிந்து கொண்ட மகா விஷ்ணுவாகிய மாதவன் ஒரு அந்தணர் கோலத்தில் அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றார். அங்கு அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது. சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை சிவார்ப்பணம் என்று சொல்லிக் கொண்டு தன் திருவாயால் உட்கொண்டார். உடனடியாக மீண்டும் பாத்திரத்தில் அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.
சிவயோகிக்கு அருகில் இலையிட்டு மகா விஷ்ணுவை அமர்த்தி உணவு பறிமாறினார் அன்னபூரணி தேவி. மகா விஷ்ணு உணவருந்த அமர்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார். தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தினால் சிவயோகியும் தமக்கும் திருப்தி என்று எழுந்து விட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அப்போது உண்மையை உணர்ந்த அன்னபூரணி தேவி அந்த சிவயோகியை வணங்க சிவ யோகி சிவனாக மாறி காட்சியளித்தார். உனக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே நாங்கள் இங்கு வந்தோம். எங்களது கட்டளையின் பேரிலேயே நீ அன்ன பூரணியாய் இங்கு உன் கடமைகளை செய்கிறாய் என்று கூறினார். உடனே மகா விஷ்ணு இன்றைய தினம் பாத்திரத்தில் இருந்த உணவு தேவைக்காக எவ்வாறு வளர்ந்ததோ அது போல எவர் ஒருவர் நல்ல செயலுக்காக நல்ல மனதுடன் காரியங்களை தொடங்குகிறார்களோ அது இனிதே வளரும் என்று ஆசிர்வதித்தார். அன்று முதல் சித்தரை மாதம் சுக்ல பக்ச திரிதியை நாம் அட்சய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்.

ராமரின் முன்னோர்கள்
- பிரம்மாவின் மகன் – மரீசீ
- மரீசீயின் மகன் – கஷ்யபர்
- கஷ்யபரின் மகன் – விவஸ்வான்
- விவஸ்வானின் மகன் – மனு
- மனுவின் மகன் – இஷ்வாகு
- இஷ்வாகுவின் மகன் – விகுக்ஷி
- விகுக்ஷியின் மகன் – புரண்ஜயா
- புரண்ஜயாவின் மகன் – அணரன்யா
- அணரன்யாவின் மகன் – ப்ருது
- ப்ருதுவின் மகன் – விஷ்வாகஷா
- விஷ்வாகஷாவின் மகன் – ஆர்தரா
- ஆர்தராவின் மகன் – யுவான்ஷ்வா-1
- யுவான்ஷ்வாவின் மகன் – ஷ்ரவஷ்ட்
- ஷ்ரவஷ்டின் மகன் – வ்ரதஷ்வா
- வ்ரதஷ்வாவின் மகன் – குவலஷ்வா
- குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
- த்ருதஷ்வாவின் மகன் – ப்ரோமத்
- ப்ரோமத்தின் மகன் – ஹர்யஷ்வா
- ஹர்யஷ்வாவின் மகன் – நிகும்ப்
- நிகும்பின் மகன் – சன்டஷ்வா
- சன்டஷ்வாவின் மகன் – க்ருஷஸ்வா
- க்ருஷஸ்வாவின் மகன் – ப்ரஸன்ஜீத்
- ப்ரஸன்ஜீத்தின் மகன் – யுவான்ஷ்வா-2
- யுவான்ஷ்வாவின் மகன் – மன்தாத்தா
- மன்தாத்தாவின் மகன் – அம்பரீஷா
- அம்பரீஷாவின் மகன் – ஹரிதா
- ஹரிதாவின் மகன் – த்ரதஸ்யு
- த்ரதஸ்யுவின் மகன் – ஷம்பூத்
- ஷம்பூத்தின் மகன் – அனரண்யா-2
- அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா
- த்ரஷஸ்தஸ்வாவின் மகன் – ஹர்யஷ்வா 2
- ஹர்யஷ்வாவின் மகன் – வஸுமான்
- வஸுமாவின் மகன் – த்ரிதன்வா
- த்ரிதன்வாவின் மகன் – த்ரிஅருணா
- த்ரிஅருணாவின் மகன் – திரிசங்கு
- திரிசங்கு வின் மகன் – ஹரிசந்திரன்
- ஹரிசந்திரநநின் மகன் – ரோஹிதாஷ்வா
- ரோஹிதாஷ்வாவின் மகன் – ஹரித்
- ஹரித்தின் மகன் – சன்சு
- சன்சுவின் மகன் – விஜய்
- விஜயின் மகன் – ருருக்
- ருருக்கின் மகன் – வ்ருகா
- வ்ருகாவின் மகன் – பாஹு
- பாஹுவின் மகன் – சாஹாரா
- சாஹாராவின் மகன் – அசமஞ்சன்
- அசமஞ்சனின் மகன் – அன்ஷுமன்
- அன்ஷுமனின் மகன் – திலீபன்
- திலீபனின் மகன் – பகீரதன்
- பகீரதனின் மகன் – ஷ்ருத்
- ஷ்ருத்தின் மகன் – நபக்
- நபக்கின் மகன் – அம்பரீஷ்
- அம்பரீஷனின் மகன் – சிந்து த்வீப்
- சிந்து த்வீப்பின் மகன் – ப்ரதயு
- ப்ரதயுவின் மகன் – ஸ்ருது பர்ணா
- ஸ்ருது பர்ணாவின் மகன் – சர்வகாமா
- சர்வகாமாவின் மகன் – ஸுதஸ்
- ஸூதஸின் மகன் – மித்ரஷா
- மித்ராஷாவின் மகன் – சர்வகாமா 2
- சர்வகாமாவின் மகன் – அனன்ரண்யா3
- அனன்ரண்யாவின் மகன் – நிக்னா
- நிக்னாவின் மகன் – ரகு
- ரகுவின் மகன் – துலிது
- துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
- கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
- ரகுவின் மகன் – அஜன்
- அஜனின் மகன் – தசரதன்
- தசரதனின் மகன் – ஸ்ரீ ராமர்
- ஸ்ரீ ராமரின் மகன்கள் – லவ குசா
- குசாவின் மகன் – அதிதி
- அதிதியின் மகன் – நிஷதா
- நிஷதாவின் மகன் – நலா
- நலாவின் மகன் – நபா

அனைத்தும் கிருஷ்ணன் செயல்
பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஒரு மரத்தடியில் யாரும் அறியாதவாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் யுதிஷ்டிரன். துரியோதனன் தன் தேசத்து அரசனானதும் அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தபட்டு தன் ராஜ்ஜியமெல்லாம் அவன் கொடி பறப்பதையும் அறிந்து தன்னை தானே நொந்து கொண்டான். வீட்டுக்கு மூத்தவன் உடன்பிறந்தோர் முன்னால் அழகூடாது எனும் தர்மத்தை அவன் அப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த கிருஷ்ணன் அவனை தேற்றும் பொருட்டு யுதிஷ்டிரா இங்கே அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டார். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத யுதிஷ்டிரன் சுற்றி யாருமில்லை என்பதை உணர்ந்து கிருஷ்ணனின் கைகளை பற்றி கதறினான். திரௌபதி இப்படி சிரமப்படவும் என் அன்னை வயதான காலத்தில் இப்படி அலையவும் என் தம்பிமார்கள் நாடோடி காட்டுவாசிகளாக திரியவும் நானே காரணமாகி விட்டேன் எனக்கு கிடைத்த தாயும் தம்பிகளும் மனைவியும் நல்லவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவ்வகையில் நான் பாக்கியசாலி. ஆனால் இவர்கள் அனைவருக்கும் என்னால் தானே அனைத்து துன்பமும் வந்தது. துரியோதனன் அழைத்ததும் நான் சூதாடியிருக்க கூடாது. அதுவும் அவன் சகுனி துணையோடு ஆடும் பொழுது நான் உன்னை அல்லவா அழைத்திருக்க வேண்டும் நான் உன்னை அழைக்காமல் உனக்கு தெரியக் கைடாது என்றல்லவா சிந்தித்தேன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன். அந்த நொடிப் பொழுது செய்த சிறிய தவறு இந்த மாபெரும் துன்பத்தை கொடுத்து விட்டது என கிருஷ்ணனிடம் கண்ணீர் விட்டவாறு கூறினான் யுதிஷ்டிரன்.
கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். யுதிஷ்டிரா நீ அழைக்காமல் நான் வரமாட்டேன் என நினைத்தாயா? சூதாட்டத்தில் இருந்த பகடையாய் சுழன்றவனே நான் தான் யுதிஷ்டிரா. எப்பொழுது உன்னை துரியோதனன் அழிக்க நினைத்தானோ அப்பொழுதே அவன் அழிவு தொடங்கியது. இந்த நிலையில் எதிரி வாழவும் திருந்தவும் நீ வாய்ப்பளித்தாய் என்பதை உலகுக்கு சொல்லவதற்காகவே இந்த நிகழ்வை நடத்திக் காட்டினேன். யுதிஷ்டிரன் எப்பொழுதும் தர்மனாக நின்றான் என்பதை வரலாறு எழுதவே பகடையினை அவனுக்கு விழவைத்தேன். சகுனி என் நாடகத்தின் ஒரு கருவி அவ்வளவு தான். நாடகத்தை நடத்துபவன் நான் அதில் நீயும் ஒரு பாத்திரம் என்பதை நினைவில் கொள். உண்மையில் நீ உன் மிக உயந்த இயல்பில் நின்றாய். அதை புரிந்து கொள் தெளிவடைவாய் என்றார். அதற்கு யுதிஷ்டிரன் நான் சூதாடி தோற்றேன். என் இயல்பிலிருந்து மாறி சித்தம் கலங்கி சென்றேன். நானா தர்மவான் என்று சந்தேகத்தோடு கேட்டான். அதற்கு கிருஷ்ணர் யுதிஷ்டிரா இப்பொழுதும் நீதான் வென்றாய். சூதாட்டத்தில் நீ தோற்று உன்னை அழிக்க வந்தவர்களை சிறிது காலம் வாழ வழிசெய்திருக்கிறாய். யுதிஷ்டிரன் தன் ராஜ்ஜியத்தில் தன்னை அழிக்க நினைத்த பகைவர்வர்களுக்கும் சிறிது காலம் வாழ இடம் கொடுத்தான் என பெயர் பெற்றாய். நாட்டின் மீதும் அதிகாரத்தின் மீதும் பேராசை கொண்ட அவர்கள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகாவது திருந்த மாட்டார்களா என வாய்ப்பு கொடுத்த நீ உத்தமன். இது உன் அன்னைக்கு தெரியும். உன் மனைவிக்கு தெரியும். உன் சகோதரரகளுக்கும் தெரியும் அதனால் தான் அவர்கள் உன்னை ஒருவார்த்தை கூட சொல்லவில்லை பகைவனுக்கும் அருளிய நல்ல மனதுடையவன் என்று உன்னை மனதார வாழ்த்தி வணங்கி கொண்டிருக்கின்றார்கள். நீயோ இங்கு அழுது கொண்டிருக்கின்றாய் என்றார்.
கிருஷ்ணா இது போதும் என் மனபாரம் குறைந்ததது என் மனம் குளிர்ந்தது நான் கடைபிடிக்கும் தர்மத்தை காக்க நீ அருள்புரிந்திருக்கின்றாய். இல்லையேனில் சூதாடி வென்றான் யுதிஷ்டிரன் என்ற அவப்பெயர் எனக்கு வந்திருக்கும். சூதாடி வென்று தம்பியருக்கு ராஜ்யம் கொடுத்தான் அயோக்கியன் என்ற அவப்பெயர் காலத்துக்கும் நின்றிருக்கும். இதை என் குடும்பத்தர் எப்படி பொறுப்பார்கள். உலகம் என்னை எப்படி கருதியிருக்கும். நல்ல வேளையாக என்னை காப்பாற்றி இருக்கிறாய் என்று கிருஷ்ணரிடம் மகிழ்ச்சி அடைந்த யுதிஷ்டிரன் தன் கலக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அதற்கு கிருஷ்ணர் நீ கடைபிடிக்கும் தர்மம் உன்னோடு எப்போதும் நிற்கும். அதற்கு ஏற்றபடி தர்மமும் நானும் உன்னை காப்போம். கௌரவர்கள் ஆடாத ஆட்டம் ஆடி அந்த அக்கிரமத்தால் அழிந்தும் போவார்கள். நீ உன் கடமையினை செய் உன் இயல்பிலே இரு குற்றவுணர்ச்சியோ கண்ணீரோ கொள்ளாதே. அவர்களை சிலகாலம் வாழ வழிவிட்டதை எண்ணி உன் புண்ணியம் பெருகியிருப்பதை உணர்ந்து கொள் அது ஒரு நாள் உனக்கு வெற்றியளிக்கும் என்பதை மனதில் கொள் என்றார் கிருஷ்ணர். நடந்து முடிந்த சூதாட்டத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்வியிலும் தனக்கு கிடைத்த பாடத்தை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான். அவனையும் அறியாமல் ஒரு கம்பீரமும் உற்சாகமும் அவனுக்குள் வந்தது. சகோதரர்களை நோக்கி சிரித்தபடி நடந்தான். அவனுக்கு தர்ம தேவதை புன்னகைத்தபடி குடைபிடித்து நடந்து கொண்டிருந்தது கிருஷ்ணனுக்கு மட்டும் தெரிந்தது.

வாரணாசி நாகேஸ்வரர்
வாரணாசியில் உள்ள 45 அடி ஆழத்தில் உள்ள நாக தீர்த்தத்தில் வருடத்தின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நீர் உள்வாங்கி அங்குள்ள நாகேஸ்வரர் தரிசனம் கொடுக்கிறார்.

துக்காராம்
துக்காராம் தேவநகரம் என்னும் ஊரில் மாதவராவ் என்னும் பக்தசீலரின் பிள்ளையாக 1598ல் அவதரித்தார். தந்தை செய்து வந்த தானிய வியாபாரத்தை இவரும் செய்தார். கல்வியறிவு பெறாவிட்டாலும் இயற்கையிலேயே இசைஞானம் பெற்றவராக இருந்தார். கவிதை எழுதும் ஆற்றலும் இருந்தது. குடும்பத்தினர் வழிவழியாக மீது பக்தி செலுத்தியதை துக்காராமும் பின்பற்றினார். இசை ஞானமும் பக்தி ஞானமும் துக்காராமின் இருகண்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் தானிய வியாபாரம் குறைந்து துக்காராமின் குடும்பம் வறுமையில் சிக்கியது. இந்த நிலையிலும் பாண்டுரங்கன் மீதான பக்தி மட்டும் துக்காராமுக்கு குறையவில்லை. பாண்டுரங்கன் பல அற்புதங்களை இவருடைய வாழ்வில் நிகழ்த்தினார். துக்காராம் அந்த ஊரில் உள்ள ஒரு சவுகாரிடம் கடன் பெற்று தானியம் வாங்க வெளியூர் சென்றார். தானியத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இரவுவேளை பலத்தமழை புயல்காற்றுடன் பெய்தது. மாடுகளை அவிழ்த்து விட்டு ஓரிடத்தில் ஒதுங்கினார். களைப்பாக இருக்கவே தூங்கி விட்டார். மறுநாள் விழித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வண்டி மாடு தானியம் எதையும் காணவில்லை. மனவேதனைக்கு ஆளானார். மிகவும் சோர்வுற்ற துக்காராம் பாண்டுரங்கனைக் குறித்து தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில் பாண்டுரங்கனே துக்காராம் போல் உருவை மாற்றிக்கொண்டு மாட்டு வண்டியில் புறப்பட்டார். தானிய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை துக்காராம் மனைவி ஜீஜாபாயிடம் கொடுத்துவிட்டு நீராடக் கிளம்பினார். ஜீஜாபாய் கடனாக வாங்கிய பணத்தைக் கொடுக்க சவுகார் வீட்டுக்குச் சென்றாள். ஏற்கனவே துக்காராம் வந்து கடனைத் திருப்பி கொடுத்து விட்டார் என்று சொன்னதும் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த துக்காராமையும் காணவில்லை. வெளியே சென்றிருப்பார் என்று அமைதியாக இருந்து விட்டார் ஜீஜாபாய்.
துக்காராம் தியானத்தில் இருந்து கண் விழித்த துக்காராம் வருத்தத்துடன் வீடு திரும்பிவந்தார். வீட்டில் நடந்த விபரங்களை ஜீஜாபாய் மூலம் அறிந்து கொண்ட துக்காராம் ஆச்சரியத்தில் மூழ்கினார். தன்னைப் போல வந்து அற்புதத்தை நிகழ்த்தியது பாண்டுரங்கனே என்பதை எண்ணி தம்பதியர் இருவரும் ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். துக்காராம் பாண்டுரங்கன் கோயிலில் பாடல்கள் பாடுவதை தன் முழுநேரப் பணியாகக் கொண்டார். கோயிலில் பக்தர் கூட்டம் பெருகியது. பலரும் இவருடைய சீடர்களாக மாறினர். சிலர் அவர் மீது பொறாமையும் கொண்டனர். அதில் ராமேஸ்வரபட் என்பவர் துக்காராம் நீ பிறப்பால் தாழ்ந்தவன் அதனால் நீ பாடும் பாடல்களை பாண்டுரங்கன் ஏற்றுக் கொள்ளமாட்டான். நீ எழுதிய பாடல்களை இந்திராயணி ஆற்றில் நானே எறிந்து விடுகிறேன் என்று சொல்லி ஆற்றில் தூக்கி எறிந்தார். துக்காராம் பாண்டுரங்கனை எண்ணி தியானத்தில் மூழ்கினார். நதிதேவதை மூலம் மீண்டும் பாடல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு துன்பம் செய்த ராமேஸ்வரபட்டும் துக்காராமின் சீடராக மாறினார்.
துக்காராம் மீது வீரசிவாஜி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். ஒருமுறை அவர் துக்காராமைச் சந்திக்க மாறுவேடத்தில் வந்திருந்தார். ஒற்றர்கள் மூலம் இவ்விஷயத்தை அறிந்த அவுரங்கசீப்பின் படைகள் பாண்டுரங்கன் கோயிலைச் சுற்றி வளைத்தன. சிவாஜியைக் காப்பாற்றும்படி பாண்டுரங்கனை துக்காராம் வேண்டிக் கொண்டார். பாண்டுரங்கனே வீரசிவாஜி போல குதிரையில் தப்பி ஓட அவுரங்கசீப்பின் படை வீரர்கள் பின்தொடர்ந்தனர். அதனால் உண்மையான சிவாஜி காப்பாற்றப்பட்டார். இதற்காக துக்காராமுக்கு பொன்னும் பொருளும் சன்மானமாக வீரசிவாஜி கொடுத்த போதும் அவற்றை துக்காராம் ஏற்றுக் கொள்ளவில்லை.
துக்காராமுக்கு கமலாபாய் என்ற மனைவியும் உண்டு. ஒரு நாள் அவள் தன் சேலையை துவைத்து வெயிலில் உலர்த்தப் போட்டுவிட்டு ஏதோ வேலையாக வெளியில் சென்றுவிட்டாள். கிழிந்த சேலை கட்டியிருந்த ஒரு ஏழைப்பெண்ணுக்கு உதவும் எண்ணிய துக்காராம் கமலாபாயின் சேலையை அவளிடம் கொடுத்து விட்டார். அவளும் அதை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கமலா தன் சேலையை உடுத்தியிருந்த பெண்ணைக் கண்டதும் துக்காராமிடம் கோபித்தாள். பாண்டுரங்கா பாண்டுரங்கா என்று சொல்லி வீட்டையும் பாழாக்குறீங்களே என்று கத்தினாள். குழவிக் கல்லை எடுத்துக் கொண்டு பாண்டுரங்களை அடிக்க கோயிலுக்கு புறப்பட்டாள். கோயிலில் புன்னகையுடன் ருக்மணியே கமலாபாயின் புடவையைக் கட்டிக் கொண்டு காட்சி அளித்தாள். பலவிதமான ஆடை ஆபரணங்களை கமலாபாய்க்கு கொடுத்து அருள்புரிந்தாள். ஓடிவந்து துக்காராமின் பாதங்களில் விழுந்து கதறி அழுதாள் கமலா. துக்காராம் கமலாபாயிடம் கமலா நீயே பாக்கியசாலி. வழிபட்டும் காணமுடியாத பிராட்டியைக் கண்ணாரக் கண்டு தரிசிக்கும் பாக்கியம் பெற்ற விட்டாயே நீ பாக்கியவதி என்று சொல்லி மகிழ்ந்தார்.
துக்காராம் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள்போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது. விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இருதயத்தில் பக்தியானது கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை அன்பு அமைதி திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து குடிகொண்டிருந்தது. துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் இது போல் நாமக்கும் நடை பெற வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி சித்திக்க தாங்கள் அருள் செய்ய வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால் இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது சாங்கேவர்மன் என்ற ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக் கொண்டிருந்தார். வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அவர் பாண்டுரங்கனின் மகா பக்தராகி தனது குருநாதரைப் பற்றி பாடல்கள் பல இயற்றி பாடினார்.
துக்காராம் நாற்பத்தைந்து ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த துக்காராம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு நான் போய் வருகிறேன் என்று கூறினார். அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ராம் ராம் என்று சொல்லிக் கொண்டே இந்தப் பூத உடலுடன் வைகுண்டம் கிளம்பினார்.