திருமந்திர நூலின் நோக்கம் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறுதல் வேண்டும் என்பதேயாகும். இவ்விதம் திருமந்திரம் அனைவருக்கும் எடுத்துரைத்த போதிலும் மறு இன்பங்களை நாடுவோர் பலர் திருமந்திரம் கூறும் யாம் பெற்ற இன்பத்தை நாடுவோர் சிலர் என்பது உலக விதியாகி விட்டது. இருந்த போதிலும் இக்காலத்தில் ஆன்மிகம் இறை சிந்தனை என்பது இளைஞர்களிடத்தில் அதிகரித்து இருக்கிறது. இது ஓர் பாரட்டத்தக்க காரியமாகிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்கின்றது போல் இத்தகைய சிறு சிறு மாற்றங்கள் முழுமையான நலன்களை அளிக்கும். இல்வாழ்க்கையில் பணம் பொருளை நாடுகின்றோம் இறை அருள்தனை மறக்கின்றோம். இத்தகைய செல்வங்கள் நம்முடன் இறுதியில் வராது என்றும் நலம் நல்காரியங்கள் செய்வதின் விளைவாக வருவது இறையருள் மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்.