ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான். காலங்கள் கடந்தும் சிவனின் தரிசனம் கிட்டவில்லை. அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை. கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான். சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு புதிய விஷ்ணு சிலையை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி ஊதுவத்தி ஏற்றினான். நறுமணம் அறை முழுவதும் பரவியது. நறுமணத்தை உணர்ந்த அவன் சிவன் அந்த நறுமணத்தை நுகரலாகாது என எண்ணி பரண் மீது ஏறி சிவன் சிலையின் மூக்கை துணியால் கட்டினான்.
துணியை கட்டிய அடுத்த நொடி சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்து போன அவன் சிவனிடம் கேட்டான். இத்தனை நாட்கள் உன்னை பூஜித்த போது காட்சியளிக்காத நீ இப்பொழுது காட்சி தருவது ஏன் என கேட்டான். பக்தா இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்று தான் இந்த சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ உணர்ந்த அந்த நொடி நான் உன் கண் முன் வந்து விட்டேன் என இறைவன் பதிலளித்தார்.
மூலவர் பசுபதீஸ்வரர். அம்மாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் கொன்றை. புராண பெயர் திருஆமூர் கடலூர் மாவட்டம். பழமையான ஆலயம் தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம். இத்தலத்தின் சிறப்பை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் நின்ற திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார். அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப் பட்டிருக்கிறது. தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது. அப்பரின் குருபூஜை சித்திரை சதய நட்சத்திரத்திலும் அப்பரின் ஜெயந்தி நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு புளிப்பு துவர்ப்பு கசப்பு உவர்ப்பு கார்ப்பு என்ற அறு சுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிபி 7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.
திருவாமூர் என்ற இந்த தலத்தில் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார். தாயார் மாதினியார். சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக் கொண்டார். திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான சைவ சமயத்திற்கு மீட்டுத் தரவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார். இதையடுத்து திருநாவுக்கரசரை சூலை நோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர் சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கிபி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றதாகும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். 3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம் 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.
சிவபெருமான் தட்சனின் மகள் சதிதேவிதை திருமணம் செய்ததைக் கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும் சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த தன்மகள் சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தார். இதனால் சதி தேவியார் யாகத்தை அழிக்க யாககுண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்கச் சிவபெருமான் தன் ஜடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார். மேலும் வீரபத்திரன் மிகுந்த கோபம் கொண்டு பிரஜாபதி தட்சன் தலையைக் கொய்து பிரஜாபதி தட்சனின் யாகக் குண்டத்திலியே போட்டார். பின் தேவர்களின் மீது கோபம் கொண்டு அவரவர்க்கு உரிய தண்டனை தந்தார். ஈசன் தன் கருணையால் பிரஜாபதி தட்சன் தலைக்குப் பதில் அங்குள்ள ஒரு ஆட்டின் தலையை பொருத்தினார். பின் சதி தேவியின் உடலைச் சுமந்து பிரபஞ்சம் முழுதும் கோபத்துடன் சுற்றி திரிந்தார். அப்போது அவர் ஆடிய ருத்ரதாண்டவமே சதிதாண்டவமூர்த்தி எனப்படுகிறது. இதனைக் கண்ட மகாவிஷ்ணு தன் சுதர்சனத்தால் அன்னையின் உடலைப் பிரித்துச் சக்தி பீடங்களாக மாற்றினார்.
இந்த அரிய சோழர்கால சிற்பம் தற்போது கேரள மாநிலம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் கோவில் திருத்த வேலைகளைச் செய்வித்தார்.
பாண்டவர்களில் சகாதேவன் சகுனியை கொல்வேன் என்ற தன் சபதத்தை நிறைவேற்றினான். பீமன் 100 கௌரவர்களையும் அழிப்பேன் என்ற சபதத்தில் துரியோதனை தவிர்த்து அனைவரையும் அழித்துவிட்டான். துரியோதனனையும் அழித்து தன் சபதத்தை முடிக்க துரியோதனனை தேடினான்.
துரியோதனன் யுத்தகளத்திலிருந்து நடந்த செல்ல ஆரம்பித்தான். இந்த வம்சம் முழுவதும் அழிந்து போவதற்கு நீயே காரணமாக இருப்பாய் என்று விதுரர் துரியோதனிடம் கூறியது அவனுக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது. தன்னுடைய தேகம் தீயினுள் போட்டு வெந்து கொண்டிருப்பது போன்று இருந்தது துரியோதனனுக்கு. தன்னுடைய கதையை தவிர அவன் கைவசம் வேறு எதுவும் இல்லை. தன் கதாயுதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து சென்ற அவன் அருகில் இருக்கும் துவைபாயன தடாகத்தை அடைந்தான். தன் உடலின் எரிச்சலை தணிப்பதற்கு தடாகத்திற்குள் அமர்ந்தான்.
துரியோதனன் மரணத்திலிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடிவிட்டான் என்று கருதிய பாண்டவர்கள் ஏமாற்றமடைந்தனர். அவன் உயிர் பிழைத்திருத்தால் யுத்தம் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று பாண்டவர்கள் எண்ணினார்கள். வேட்டைக்காரர்கள் கூட்டமொன்று அவர்களை அணுகி துரியோதனன் துவைபாயன தடாகத்தில் அமர்ந்து இருப்பதாக தெரிவித்தார்கள். அது மாலை நேரம். பாண்டவர்களும் கிருஷ்ணன் விரைந்து சென்று துரியோதனனை கண்டுபிடித்தனர். துரியோதனனை கண்ட யுதிஷ்டிரர் நீ ஒரு க்ஷத்திரன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீ ஒரு பயந்தாங்கோலி போன்று உன் உயிரை காப்பாற்றுவதற்கு இங்கு வந்து ஒளிந்து கொண்டு இருக்கின்றாய். உனக்காக உயிர்த்தியாகம் செய்த கூட்டத்தாரை நீ மறந்து விட்டாய் என்றான். அதற்கு துரியோதனன் என் உடலுக்கு சிறிது ஓய்வு தருதல் பொருட்டே நான் எங்கே இருக்கின்றேன். என்னுடைய சகோதரர்கள் நண்பர்கள் அனைவரையும் இழந்தேன். இப்போது ராஜ்யத்தில் எனக்கு ஆசை ஏதும் இல்லை. ஆகையால் இந்த ராஜ்யத்தை உனக்கு தானமாக கொடுத்து விட்டு காட்டிற்குள் சென்று தவ வாழ்க்கை வாழ எண்ணியுள்ளேன் என்றான்.
அன்று முதியவர்கள் கொடுத்த புத்திமதியை நீ ஏற்கவில்லை. நாங்கள் சம்பாதித்த ராஜ்ஜியத்தில் ஐந்து ஊசிமுனை நிலம் கூட கொடுக்க மாட்டேன் என்று மறுத்தாய். இப்பொழுது யுத்தத்தில் தோற்கும் தருவாயில் தானமாக கொடுக்கின்றேன் என்கிறாய். உன்னுடைய பித்தலாட்டம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிகிறது. இந்த ராஜ்யம் உன்னுடையது என்று நீ உரிமை கொண்டாடினால் உன்னை வென்று அந்த ராஜ்யத்தை பெற நான் விரும்புகின்றேன். நான் ஒரு க்ஷத்திரன் என்பதை தயவு செய்து நீ தெரிந்துகொள். யாரிடமிருந்தும் நான் தானமாக எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படியிருக்க உன்னை போன்ற எதிரி ஒருவனிடம் இருந்து நான் எப்படி தானமாக ஏற்பது யுத்தத்திற்கு வா என்று யுதிஷ்டிரர் அழைத்தார்.
திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும் சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்க்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் அவர்கள் மீதும் பட்டுவிட்டது. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர். சிவனடியாரோடு சிவனடியாராக ஆலயத் தொண்டு புணைய முனைந்து விட்டனர்.
அனுப்பிய தூதர்கள் இருவரும் திரும்பி வராதததைக் கண்டு மேலும் இரு தூதர்களை அனுப்பினான் எமதர்மன். சிவாச்சாரரும் மற்றும் சிவஞானம் பெற்றிருந்த யமதூதர்கள் இருவரும் சேர்ந்து ஆலயப் பிரகாரத்தில் உழவாரபணி மேற்க் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் சிவனடியார் ஆலயப் பிரகாரத்தில் முளைத்திருந்த புற்களை சிவநாமம் சொல்லி பிடுங்கி உதறிக் கொண்டிருந்தார். அப்போது திரும்ப வந்த யமதூதர்கள் இருவரும் சிவாச்சாரரைத் தேடி ஆலயப் பிரகாரம் வந்தனர். புற்களை பிடுங்கி உதறியதிலிருந்து தெறித்த மணல் படிமங்கள் இரண்டாம் முறையாக வந்த எமதூதர்கள் இருவர் மீதும் பட்டது. இவர்களும் சிவஞானம் பெற்று சிவனடியாராக மாறிவிட்டனர். மேலும் அடியார்களோடு அடியாராக ஆலயப் பணியை மேற்கொண்டனர். இரண்டாவதாய் அனுப்பிய இருவரும் திரும்பி வராததால் என்ன ஆயிற்று என நினைத்த எமதர்மன் நாமே நேரில் சென்று பார்க்கலாம் என புறப்பட்டான்.
பிரகாரத்தை சுத்தம் செய்த சிவனடியார் ஈசனுக்கு மாலையில் வழிபாடு செய்வதற்காக வில்வதழைகளைக் கொண்டு வாழைநாரில் தொடுத்துக் கொண்டிருந்தார். சிவச்சாரரைத் தேடி ஆலயம் வந்து பார்த்தான் எமதர்மன். அங்கே சிவாச்சாரருடன் தன் தூதர்கள் நால்வரும் சிவத் தொண்டு செய்து கொண்டிருப்பதை பார்த்து விட்டான். இதைக் கண்டதும் சிவாச்சாரரை ஆவேசத்தோடு நோக்கி என்ன மாயவித்தை செய்து இவர்களை சிவவேலை பார்க்கச் செய்தீர் என்றதுடன் இப்போது நானே வந்திருக்கிறேன். என்னை என்ன செய்யப் போகிறாய் பார்க்கலாம் என்றான் எமதர்மன். சிவ நாமத்தை கூறிக் கொண்டு விழ்வதழையை தொடுத்துக் கொண்டிருந்த சிவனடியார்க்கு எமதர்மனின் பேச்சு எரிச்சல் அடையச் செய்தது. திருப்பணி செய்ய விடாமல் இதென்ன தொல்லையா போச்சு என வில்வதழையை தொடுத்துக் கொண்டிருந்த வாழைநாரை எடுத்தார். திருவூறல்நாதா எனச் சொல்லி அந்த வாழைநாரை எமதர்மன் மீது எறிந்தார் சிவனடியார். விரைந்த வாழைநார் ஒரு வலையாக உருவெடுத்து எமனின் கை கால்களை கட்டிப் போட்டன. எமன் மந்திரத்துக்கு கட்டுண்டவர் போல செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். நாம எவ்வளவு பாசக்கயிறை வீசியிருப்போம் ஆனால் இந்த சாதாரண வாழைநாரை நம்மால் அறுத்தெறிய முடியவில்லையே என வியந்து சிவாச்சாரரைப் பணிந்தார். சிவனடியாரும் எமதர்மனை பார்த்து இத்தலத்தில் தக்கோலத்தில் சுயம்புநாதராக வீற்றிருக்கும் மகாதேவன் திருவடியை தொழுவாயாக மகாதேவனை சரணடைந்தால் உமக்கு கதிமோட்சம் உண்டாகும் என்று சிவனடியார் எமதர்மனுக்கு வழிகாட்டினார்.
எமதர்மனும் நேராகச் சென்று மகாதேவரை சரணடைந்து வணங்கினான். தஞ்சம் என வருவோர்க்கு அருளுபவன் திருவூறல்நாதன் ஆவார். காலனே இங்கு வந்து சரணடைந்து விட்டதார். எமனுக்குக் காட்சி தந்து என்னடியார்கள் மீது கைவினை செய்யாதே என்று உன்னிடம் பல முறை கூறியுள்ளேன். திருக்கடையூரில் மார்க்கண்டேயனை திருவெண்காட்டில் சுவேதுவை போன்ற என் அடியார்கள் மீது நீ பாசக் கயிறை வீசியிருக்கின்றாய். ஒவ்வொரு முறையும் தவறுவதும் மன்னிப்பதும் நல்லதல்ல என ஈசன் உரைத்து எமதர்மனை கட்டப்பட்டிருந்த வாழைநார் கட்டை விலக்கினார். எமதர்மனும் ஈசனை வணங்கி வழிமொழிந்து புறப்பட்டுச் சென்றான். சிவனடியாராக மட்டும் இருந்து விட்டால் எம பயமில்லை என இருக்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவநெறியில் உறுதிபட இருந்தால் எமனை சிவாச்சாரர் கட்டியது போல எந்த வினையையும் எதிர்க்க முடியும். அதற்கு இந்த சிவாச்சாரியார் சிவனடியார் போல, சுவேது போல, மார்க்கண்டேயர் போல ஞானம் பெறும் வழியில் பயணிக்க வேண்டும்.
பதினேட்டாம் நாள் யுத்தம் துவங்கியது. சிறுசிறு கூட்டங்களை வைத்தே பொருத்தமான வியூகத்தை சல்லியன் அமைத்தான். பாண்டவர்களின் நிலையும் இவ்வாறே இருந்தது. அவர்களும் சிறு கூட்டத்தை வைத்து வியூகம் அமைத்துக்கொண்டனர். இரு படை வீரர்களும் போர்க்களம் வந்தனர். யுத்தம் துவங்கியது. கர்ணன் போர்க்களத்தில் இறந்ததால் தானே போர்க்களம் சென்று கிருஷ்ணரையும் அர்ஜூனனையும் கொல்வதாக கர்ணனினிடம் கூறிய உறுதிமொழியை மனதில் எண்ணிக்கொண்டான் சல்லியன். சல்லியனை எதிர்த்து போராட யுதிஷ்டிரர் முன் வந்தார். யுதிஷ்டிரருக்கும் சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது. சல்லியன் எய்த அம்புகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. யுதிஷ்டிரருக்கு உதவி புரிய பீமன் வந்தான். சல்லியனின் ரதத்தை உடைத்து தள்ளினான். வேறு ரதத்தில் வந்த சல்லியன் யுதிஷ்டிரரின் இருபக்கமும் இருந்த படைகளை அழித்து தள்ளினான். அவனை வெற்றி அடைவான் வெற்றி தங்களுக்கு உரியது என்று கௌரவ கூட்டத்தினர் எதிர்பார்த்தனர். அமைதியாக போர் புரிந்து வந்த யுதிஷ்டிரர் திடீரென்று எமதர்மனுக்கு நிகரான போர் வீரனாக தென்பட்டான்.
யுதிஷ்டிரர் தன் சிந்தையை கிருஷ்ணர் மீது செலுத்தினார். கிருஷ்ணர் புன்முறுவலுடன் பார்க்க யுதிஷ்டிரர் தன் சக்தி ஆயுதத்தை எடுத்து சல்லியனின் மீது வீசினார். சக்தி ஆயுதம் சல்லியனின் மார்பில் சரியாக சென்று தாக்கி சல்லியனை கொன்றது. கௌரவர்களின் கடைசி தளபதியும் வீழ்ந்தான்.
கௌரவ படைகளில் இப்போது குழப்பம் உண்டாகியது. நாலாபக்கமும் பீதியுடனும் அவர்கள் கலைந்து ஓடினர். இந்த நெருக்கடியில் துரியோதனன் உட்புகுந்து அவர்களுக்கிடையில் தைரியத்தையும் ஊட்டினான். பாண்டவர்களை எதிர்த்து அவன் வீராவேசத்துடன் போர்புரிந்தான். மீதம் இருந்த அவனுடைய சகோதரர்களும் தங்களுடைய முழு திறமையை கையாண்டனர். ஆயினும் அவர்கள் அனைவரையும் பீமன் அழித்தான். தான் செய்திருந்த சபதத்தை நிறைவேற்ற இந்த சந்தர்ப்பத்தை பீமன் நன்கு பயன்படுத்தி கொண்டு அவர்கள் அனைவரையும் அழித்தான். துரியோதனன் ஒருவன் நீங்கலாக ஏனைய 99 பேரும் மடிந்து போயினர்.
குருக்ஷேத்திர போருக்கு காரணமான சகுனி போருக்கு வந்தான். அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான். சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை. அப்போது சகாதேவன் உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு. குல நாசம் புரிந்த கொடியவனே இது சூதாடும் களம் அல்ல போர்க்களம். இங்கு உன் வஞ்சம் பலிக்காது என்றபடியே சகுனியின் பகடை விளையாண்ட கையை முதலில் வெட்டினான். பின்பு சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் சகாதேவன் செய்த சபதமும் நிறைவேறியது. பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். துரியோதனன் தனது படைகள் தளபதிகள் உடன் பிறந்தோர் என பலரை இழந்தான். போர்க்களத்தை உற்று நோக்கினான். தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.
காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் அனந்தசூரி – தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர். குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர். அன்றிரவு இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார். திடுக்கிட்டு கண் விழித்த அவர் தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க அப்போது அசரீரியாய் ஒரு குரல் அந்த மணியை யாரும் தேட வேண்டாம் புரட்டாசி சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக வேங்கடநாதன் என்கிற பெயரில் அனந்தசூரி – தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன். திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே மணியானகுழந்தையாக அவதரித்ததால் திருமலையில் இன்றும் பூஜை தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை.