மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -9

துரோணர் துரியோதனை பார்த்து என்னிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசம் ஒன்று இருக்கிறது அதை உனக்குத் தருகிறேன். அதை யாரும் பிளக்க முடியாது. சிவபெருமான் இதை இந்திரனுக்கு அளித்தார். இந்திரன் ஆங்கீசரருக்குக் கொடுத்தான். ஆங்கீசரரர் தன் புதல்வன் பிரகஸ்பதிக்கு அருளினார். பிரகஸ்பதி அக்னியேச்யருக்குக் கொடுத்தார். அக்னியேச்வரர் எனக்குத் தந்தார். அதை உனக்கு நான் தருகிறேன். நீ போய் அர்ஜூனனுடன் போரிடு இனி உனக்கு வெற்றியே. என்றார்.

மகிழ்ச்சியுடன் அக்கவசத்தை அணிந்து அர்ஜூனனைத் தாக்கினான் துரியோதனன். அர்ஜூனனின் அம்புகள் கவசத்தைத் துளைக்க முடியவில்லை. அதிர்ந்த அர்ஜூனன் என்ன செய்வது என்று கிருஷ்ணரை நோக்கினான். கிருஷ்ணர் அர்ஜூனா அவன் கவசம் தான் தகர்க்க முடியாததாய் இருக்கிறதே பின்பு ஏன் உன் பானங்களை வீனடிகின்றாய் கவசம் இல்லாத இடங்களில் உன் அம்புகளால் தாக்கு என்றார். துரியோதனன் மந்திர சக்தி வாய்ந்த கவசத்தை அணிந்திருக்கும் சூட்சமத்தை புரிந்து கொண்டான் அர்ஜுனன். போர் முறையை அர்ஜுனன் மாற்றி அமைத்தான். துரியோதனனுடைய சாரதியையும் ரதத்தையும் குதிரைகளையும் முதலில் அழித்தான். அதன் பிறகு அவனுடைய வில்லையும் ஒடித்தான் அதைத் தொடர்ந்து ஊசிகள் போன்ற அம்புகளை துரியோதனனின் கவசம் இல்லாத இடம் பார்த்து அம்புகளைச் செலுத்தினான். காயமுற்ற துரியோதனன் வலி பொறுக்காது அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

ஒட்டம் பிடித்த துரியோதனை அர்ஜூனன் தாக்க முற்பட்ட போது துரியோதனனை தாக்க முடியாத படி பூரிசிரவஸ் அர்ஜுனனை வழி மறித்து தாக்கினான். உடன் சாத்யகி அர்ஜூனனின் உதவிக்கு வந்து பூரிசிரவஸைத் தாக்கத் தொடங்கினான். இருவரும் போட்ட சண்டை மிகக் கடுமையாக இருந்தது. இருவரும் மற்றவர் வைத்திருந்த ரகங்களையும் குதிரைகளையும் மாற்றி மாற்றி அழித்தனர். அதன்பிறகு இருவரும் குத்துச்சண்டையில் இறங்கினார் சத்யகி சிறிது களைத்த போது சாத்யகியை கீழே தள்ளி காலால் மார்பில் உதைத்தான் பூரிசிரவஸ். மயக்கம் அடைந்தான் சாத்யகி. அவன் தலையை துண்டிக்க முயற்சித்த பூரிசிரவஸ் கையை வெட்டினான் அர்ஜூனன். அந்த கை வாளுடன் வீழ்ந்தது.

பூரிசிரவஸ் அர்ஜூனனைப் பார்த்து நான் வேறு ஒருவருடன் போரிடும் போது அறநெறி கெட்டு கையை வெட்டுகின்றாயே யுதிஷ்டிரரின் தம்பி நீ அதர்மம் செய்யலாமா என்றான். நேற்று என் மகன் அபிமன்யு மீது தர்மவழியை மீறி போரிட்டவன் நீ அது அறநெறியா என்றான் அர்ஜுனன். மேலும் என் பக்கம் சேர்ந்துள்ள ஒருவன் மயங்கி கிடக்கின்ற பொழுது அவன் தலையை வெட்ட முயற்சிக்கிறாய். நான் வெறுமனே உன் செயலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயா உன் செயல் அயோக்கியத்தனம் அல்லவா என்றான். பூரிசிரவஸ் தன் செயல் குறித்து நாணினான். தனது இடக் கையைத் தரையில் ஊன்றி தன் அம்புகளை தரையில் பரப்பினான். அதன் மீது அமர்ந்து கொண்டு பரம்பொருளை கொடுத்து தியானம் பண்ணி உயிரை விட அவன் தீர்மானம் பண்ணி விட்டான். அப்போது மயக்கம் தெளிந்த சாத்யகி தியானத்தில் இருந்தவன் தலையை வெட்டினான். சாத்யகியின் இச்செயலுக்கு அர்ஜூனன் ஆட்சேபம் தெரிவித்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.