சுலோகம் -157

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-38

எவ்விதம் புகையால் நெருப்பும் அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்படுகிறதோ கருப்பை தசைகளால் கரு மறைக்கப்படுகிறதோ அது போலவே காமத்தினால் ஞானம் மறைக்கப்படுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நெருப்பை அதில் இருந்து வரும் புகை மறைத்து விடும். தெளிவாக அனைத்தையும் காட்டக்கூடிய கண்ணாடியை அழுக்கு சேர்ந்து மறைத்து விடும். கருவை கர்ப்பப்பை தசைகள் மறைத்து விடும். அது போலவே உயிர்களிடத்தில் உள்ள ஞானத்தை காமமும் கோபமும் மறைத்து விடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 279

கேள்வி: வேதாத்ரி மகரிஷி தன் வாழ்நாளை அர்ப்பணித்து தவ முறை தியான முறை பயிற்சியை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது உயர்வு பெறுமா? அதன் மூலம் இந்த உலகம் அமைதியை நோக்கி நகருமா?

இறைவனின் கருணையாலே இந்த உலகிலே மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக் கூடாது? என்பதற்காக இறைவன் பல்வேறு ஞானியர்களையும் மகான்களையும் அவ்வப்பொழுது மனித வடிவிலேயே அனுப்பி வைத்து போதனைகள் செய்து வருகிறார். சில சமயம் நூல்கள் வாயிலாக கூட பல மனிதர்கள் கண்ணில் நல்ல விஷயங்களை படுமாறு இறைவன் செய்வதும் உண்டு. பல மனிதர்களுக்கு இவையெல்லாம் ஓரளவு தெரியத்தான் செய்யும். ஆனால் மனிதன் அறிவு மயமானவன் அல்ல. உணர்வு மயமானவன். அவன் அறிவுக்கு பல நல்ல விஷயங்கள் தெரிந்தாலும் அவன் உணர்வுக்கு எது பிடித்திருக்கிறதோ அதைதான் செய்வான். மனிதனின் உணர்வுகளைத் தூண்டி விட்டாலே இங்கே எல்லா செயல்களையும் செய்யலாம் என்றுதான் பல மனிதர்கள் காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே உணர்வுகளை கட்டுப்படுத்தி பெரும்பாலான தருணங்களில் நல்லறிவை தெய்வீக அறிவைப் பயன்படுத்த மனிதன் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்டாயம் எத்தனை உயர்ந்த போதனையாக இருந்தாலும் எத்தனை நல்ல விஷயமாக இருந்தாலும் அது வெறும் செவியாடலாக மட்டும் இருக்குமே ஒழிய நடைமுறைக்கு வரவே வராது.

பெரும்பாலான மனிதர்களுக்கு இதை செய்யலாம். இதை செய்யக்கூடாது என்பது தெரிந்தாலும் உடனடியான லாபத்திற்கும் தேகம் சார்ந்த உணர்வுக்கும் அடிமைப்பட்டு செய்யக் கூடாத காரியங்களை செய்து கொண்டுதான் இருக்கிறான். செய்ய வேண்டியவற்றை செய்யாமல் தள்ளிப் போடுகிறான். எனவே தனி மனித ஒழுக்கமும் பண்பும் அவன் தன்னைத்தான் சீர் தூக்கிக் கொள்கின்ற முறையும்தான் முக்கியம். அப்படி தன்னைத்தான் திருத்திக் கொண்டால் ஏற்கனவே போதித்த நல்ல போதனைகளே போதும் மனித குலம் உயர. வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி வாழுகின்ற மனிதனுக்கு எத்தனை போதனைகளையும் எத்தனை விதமான கருத்துக்களையும் கூறினாலும் அவைகள் அவன் செவியில் ஏறாது. இறைவனே நேரில் வந்து சொன்னாலும் கூட அத்தருணம் கேட்டுவிட்டு பிறகு அவன் மாற்றப் பாதையில்தான் செல்வான். எனவே தன் உடல் சார்ந்த இச்சைகளையெல்லாம் அவன் தன்னிடம் உள்ள அறிவைக் கொண்டு அடக்க முயன்றால்தான் இதிலிருந்து அவன் மேலேற முடியும்.

சுலோகம் -156

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-37

ரஜோ குணத்திலிருந்து உண்டாகியது இந்தக் காமமும் கோபமுமாகும். இது பெருந்தீனிக்காரன். போகங்களில் போதும் என்ற எண்ணமில்லாதவன் மேலும் பெரிய பாவி இதையே இந்த விசயத்தில் பகைவனாக அறிந்து கொள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒருவன் இறைவனை நோக்கிய யோகத்தில் ஈடுபடும் போதோ அல்லது தர்மத்தின் வழி செல்லும் போதோ பூர்வ ஜென்ம வாசனைகளின் காரணமாக ரஜோ குணம் தலை தூக்குகிறது. இதன் காரணமாக ஆசைகள் புலன்கள் வழியாக எளிதாக வந்து உலக விசயங்களில் இழுக்கிறது. இந்த ஆசைகளை அனுபவித்தாலும் பெருந்தீனீக்காரன் போல் மேலும் மேலும் என்று அடுத்த ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆசைகளை அனுபவக்க முயற்சிக்கும் போது அது தடைபட்டால் மிகுந்த கோபம் ஏற்படுகிறது. இந்த கோபம் அடுத்தவர்களுக்கு தீமையை ஏற்படுத்துகிறது. இது பாவம் ஏற்பட காரணமாயிருக்கிறது. அனுபவித்த ஆசைகள் போதும் என்ற எண்ணமில்லாதவன் மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்கிறான். தணிக்க முடியாத ஆசையும் கோபமும் உயிர்களுக்கு மிகப்பெரிய விரோதிகள் இது உயிர்களின் அழிவிற்கு வழிவகுத்து விடுகிறது என்பதை அறிந்து கொள் என்று என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 278

கேள்வி: ஐயனே அம்மை நோய் எதனால் ஏற்படுகிறது? மக்கள் மாரியம்மன் உடம்பி்ல் இறங்கி விட்டதாக எண்ணி இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அன்னையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே வேப்பிலை சிகிச்சையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதற்கேற்றாற் போல் நான்கைந்து தினங்களில் அம்மை நோய் இறங்கி விடுகிறது. மருத்துவர்களோ இது நோய்க் கிருமிகளால் ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர். இதில் எது உண்மை?

இறைவன் அருளால் இதுபோல் பல்வேறு நோய்களுக்கு மனிதன் பல்வேறு விதமான காரணங்களைக் கற்பித்துக் கொள்கிறான். இது ஒருபுறமிருக்கட்டும். எல்லா நோய்களும் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பது மனித விஞ்ஞானத்தின் கருத்து. நாங்கள்(சித்தர்கள்) அதை மறுக்கவில்லை. கிருமிகள் ஏன் ஏற்படுகின்றன? என்பதை மனிதன் ஆய்ந்து பார்க்கவேண்டும். எத்தனையோ கிருமிகள் எப்பொழுதுமே சுற்றிக் கொண்டிருக்க அந்த கிருமிகள் ஏன் குறிப்பிட்ட மனிதனை தாக்க வேண்டும்? எனவே மீண்டும் மீண்டும் பாவகர்மா என்ற நிலைக்குதான் நாங்கள் (சித்தர்கள்) வரவேண்டும். இது ஒருபுறமிருக்க தீவிரமான பக்தியிருந்தால் மனதிலே அணுவளவும் கபட எண்ணம் இல்லாமலிருந்தால் நல்ல எண்ணங்களும் சாத்வீக எண்ணங்களும் இருந்தால் தீவிரமான பக்தியோடு நல்ல எண்ணங்களும் சேர இவன் கூறிய நோயை மட்டுமல்ல எந்த நோயையும் மனிதன் விரட்டலாம் மருத்துவ சிகிச்சை இல்லாமல். இப்படி நாங்கள் (சித்தர்கள்) கூறினால் அடுத்ததொரு வினா வரும். அப்படியானால் இருக்கின்ற எல்லா மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு ஆலயங்களாக கட்டிவிடலாம் அல்லவா? வெறும் பிராத்தனைகள் மூலம் எல்லா நோய்களையும் நீக்கலாம் அல்லவா? என்று. விதி வழியாக நோய் வருவது இருக்கட்டும். மனிதனே தன்னை நன்றாக பராமரிக்க வேண்டும் தன் சுற்றுப்புறத்தை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வில்லாமல் அவனாகவே வரவழைத்துக் கொள்வது யார் குற்றம்? என்று பார்க்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு நோய்க்கு சிகிச்சையே செய்யாதே என்று நாங்கள் (சித்தர்கள்) ஒருபொழுதும் கூறமாட்டோம். தெய்வத்தை நம்பு. வேண்டாம் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதையும் நாங்கள் தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் சிகிச்சை எடுத்தால்தான் ஒரு பாதிப்பு வந்தது என்றோ பிராத்தனையால்தான் பாதிப்பு வந்தது என்ற வார்த்தைதான் நாங்கள் (சித்தர்கள்) ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனென்றால் சிகிச்சை செய்தாலும் அல்லது பிராத்தனை செய்தாலும் ஒரு நோயால் ஒருவனுக்கு பாதிப்பு வந்துதான் ஆகவேண்டும் என்ற விதி இருப்பின் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும். இதையெல்லாம் தாண்டி இவன் குறிப்பிட்ட நோய் மற்றும் இன்னும் சில நோய்களெல்லாம் இறைவனே மனித உடலில் ஆக்கிரமிப்பு செய்வதாக மனிதன் எண்ணுகிறான். இதை சித்தர்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டும்லாமல் இந்த மூடத்தனத்தின் உச்சம் என்னவென்றால் அன்னை இறங்கியிருக்கிறாள். எனவே அது அம்மையாகவே காட்சியளிப்பதாகவே கொள்வோம். ஆனால் அதற்கு சிகிச்சையளித்ததால் அன்னைக்கு கோபம் வந்துவிட்டது என்ற கருத்து மிகவும் ஏற்க முடியாத வாதம்.

கோடானு கோடி உயிர்களை துடிக்க துடிக்க கொல்லும் போது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவனை வஞ்சித்து ஏமாற்றும் பொழுது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவன் சொத்தையெல்லாம் ஏமாற்றி பிடுங்கும் பொழுது அன்னைக்கு வராத கோபம் இந்த உலகம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி எத்தனையோ நச்சுத் தொழிலையெல்லாம் விடமாட்டேன் எனக்கு இதில் லாபம் கிட்டுகிறது. அடுத்த வரும் தலைமுறை எப்படி போனால் எனக்கென்ன? என்று மனிதர்கள் செயல்படும் பொழுது அன்னைக்கு வராத கோபம் தன் பிணி போக வேண்டும் என்று ஒரு மருத்துவ முயற்சி எடுத்தால் மட்டும் வந்து விடப் போகிறதா என்ன? மனிதனுக்கு சந்திக்கின்ற அறிவை பிரம்மதேவன் தந்திருக்கிறாரப்பா. சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும். ஒரு நோய்க்கு சிகிச்சை செய்வதும் தவறல்ல பிராத்தனை செய்வதும் தவறல்ல. அவன் விதி எவ்வாறோ அவ்வாறுதான் நடக்கும். அந்த விதியையும் மாற்றத்தான் நாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே தர்மம் தர்மம் தர்மம் தர்மம் என்று எப்பொழுதுமே கூறிக் கொண்டேயிருக்கிறோம். இதை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் கதை

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு காடு. அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள சிவபெருமான் சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் காட்டை விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் கதையின் சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 277

தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் காதை (கதை) ஒன்று கூறுங்கள் ஐயனே

எத்தனையோ காதைகளை (கதைகளை) முன்னர் கூறியிருக்கிறோம் அப்பா. கூறியது கூறல் பலருக்கு இகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்தக் காதை (கதை) முக்கியமல்ல. அதில் உள்ள கருத்துதான் முக்கியம் என்பதற்காக மீண்டும் கூறுகிறோம். இதுவும் முற்காலத்திலே நடந்த நிகழ்வுதான். கொடுப்பதில் அளவு பார்க்காமல் தாராளமாக இருந்தால் அது பிறருக்கு கொடுப்பதல்ல (மறைமுகமாக) தனக்குதானே கொடுப்பது போல என்ற தத்துவத்தை புரிய வைக்கவே இந்த காதையை (கதையை) மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு வனம் (காடு). அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள என் ஐயன் முக்கண்ணனுக்கு (சிவபெருமான்) சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் வனத்தை (காட்டை) விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் காதையின் (கதையின்) சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 276

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பரந்துபட்ட உலகமும் இந்த பேரண்டமும் நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம் பொருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி திடமாக நம்பி எல்லாம் அவன் செயல் என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டால் அப்படி மாற்றிக் கொள்கின்ற மனிதனுக்கு அப்படி மாற்றிக் கொண்டு உண்மையாக வாழ வேண்டும் உண்மை வழியில் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும் இறைவன் எம்போன்ற மகான்கள் மூலமாகவோ வேறு வழி மூலமாகவோ வழிகாட்டிக் கொண்டேயிருப்பார் அப்பா. அதுபோல் ஆத்மாக்களுக்கு யாங்களும் இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு (குடிலுக்கு) வந்துதான் அவன் வழிமுறைகளைப் பெற வேண்டும் என்பதல்ல. நாங்கள் எத்தனையோ வழி முறைகளை வைத்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ஓலை (ஜீவநாடி) மூலம் பேசுவது. வேளை வரும் பொழுது வேறு வேறு மார்க்கங்களையும் நாங்கள் (சித்தர்கள்) கடைபிடிப்போம். விதியிலே ஒரு மனிதனுக்கு அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும் கூட நல்லவனாக இருந்து விட்ட அல்லது இருக்கின்ற காரணத்தினாலேயே இறை தரிசனமோ அல்லது சித்தர்கள் தரிசனமோ கிடைக்க வேண்டும் என்பது இல்லை அல்லது ஓலை (ஜீவநாடி) மூலம்தான் சித்தர்களின் வாக்கை அறிந்து முன்னேற வேண்டும் என்ற நிலையும் இல்லை. வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம்.

இதுபோல் நிலையிலே எம்மைப் பொறுத்தவரை இங்கு வருபவர்களுக்கு பலமுறை உரைத்திருக்கிறோம். இதுபோல காலத்திலே பக்தி மார்க்கமும் பரிபூரண சரணாகதி தத்துவமும் அதோடு தக்க ஏழைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதும் அந்த தர்ம குணத்தை எப்படியாவது இறையிடம் போராடி பெற்று இன்னும் கூறப் போனால் மனித அறிவு ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் நாங்கள் (சித்தர்கள்) கூறினாலும் அதில் உச்சகட்டமாக இங்கு வருபவர்கள் வெளியில் ஏளனம் செய்வது ருணம் (கடன்) பெற்று அறம் செய் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற கருத்தை அதுவும் எல்லோருக்கும் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. சிலருக்கு சிலவற்றை மனதிலே வைத்து கூறுகிறோம். அந்த தர்மத்தை எவனொருவன் தன்முனைப்பு இல்லாமல் செய்கிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டியதே இல்லையப்பா. அந்த தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு எத்தனை இடர் எதிர்ப்பு சோதனை வேதனை வந்தாலும் நீ தர்மம் செய்தாயே? அவன் உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான். அவனைப் போன்ற ஏமாற்றுக்காரனுக்கெல்லாம் நீ ஏனப்பா உதவி செய்கிறாய்? என்று இன்னொருவன் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும்கூட என் கடன் தர்மம் செய்து கிடப்பதே என்று எவன் தொடர்ந்து தர்ம வழியில் வருகிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டாம். இறையே அவனை வழி நடத்தும். அதைதான் நாங்களும் தர்மம் தர்மம் தர்மம் என்று பலருக்கும் பல முறை கூறுகிறோம். ஆனால் கேட்க விடவேண்டுமே அவனவன் கர்மம். இந்த ஜீவ அருள் ஓலை உண்மை. இதில் வாக்குகளைக் கூறுவது சித்தர்கள்தான் என்று நம்பக்கூடிய அனைவருக்குமே இந்த வாக்கு பொருந்துமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 275

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

யாம் கூறுகின்ற நங்கையை (பெண்ணை) மணக்க வேண்டும் என்று சிலர் எண்ணலாம். அப்பொழுதுதான் வாழ்க்கை மணக்கும் என்றும் எண்ணலாம். ஆனாலும் கூட விதியில் எது இடம் பெறுகிறதோ அதைதான் எப்பொழுதுமே மனிதன் நுகர இயலும். திருமணம் தொடர்பான கர்ம வினைகள் எத்தனையோ சிக்கலான கர்ம வினைகளைக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஆண்டாண்டு காலம் பாடம் எடுத்தாலும் கூட மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இந்த களத்திர பாவம். எல்லா பாவங்களும் அப்படிதான் என்றாலும் களத்திர பாவம் என்பது மிகவும் நுட்பமானது. அதனால்தான் பல்வேறு தருணங்களிலே பல்வேறு விதமான திருமணங்கள் பொய்த்து போவதும் பல்வேறு திருமணங்கள் புறத் தோற்றத்திற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் உள்ளே நிம்மதியாக வாழாமல் இருப்பதுமாக இருக்கிறது. மனிதனின் பெருமளவு கர்மாக்கள் குறைகின்ற இடம் களத்திர பாவம். ஆன்மீகம் என்றாலே தற்சமயம் அது பலவகையான ஆன்மீகமாக மனிதனால் பார்க்கப்படுகிறது. இந்த ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) நாங்கள் (சித்தர்கள்) சுட்டிக் காட்டுகின்ற வழியானது மிக மிக ஞானியர் என்று மனிதர்களால் மதிக்கப்படுகின்ற ஞானியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்படாத வழி முறையாகத்தான் இருக்கும். நீ கற்ற கற்கின்ற ஆன்மீக நூல்கள் நீ பார்க்கின்ற ஆன்மீக மனிதன் உன் செவியில் விழுகின்ற ஆன்ம செய்திகள் இது வரை கற்ற பல்வேறு ஆன்மீக விஷயங்கள் எல்லாம் கூட நாங்கள் (சித்தர்கள்) காட்டுகின்ற வழியிலே முரணாகத் தோன்றும்.

எமது வழி முறையில் வர வேண்டும் என்று நீயோ உன்னொத்து சிலரோ எண்ணலாம். நாங்கள் (சித்தர்கள்) வாழ்த்துகிறோம். ஆனால் அதனால் மிகப்பெரிய உலகியல் நன்மையோ அல்லது உளவியல் நன்மையோ வந்து விடாதப்பா. அதிக துன்பங்களும் அவமானங்களும் வரும். அதை சகித்துக் கொள்கின்ற பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் எமது வழியில் நீயும் வரலாம். யாங்கள் (சித்தர்கள்) தடுக்கவில்லை. வந்து வெற்றி பெற நல்லாசி கூறுகிறோம். யாம் பலமுறை கூறியிருக்கிறோம். நாங்கள் (சித்தர்கள்) பாரபட்சம் பார்ப்பதில்லை என்று. எல்லோரும் இறைவனுக்கும் எமக்கும் சேய்கள்தான் (பிள்ளைகள்தான்). ஆனாலும் கூட இறைவனுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? சித்தர்களுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? அந்த மாயத்திரை எது? அது எப்பொழுது அகலும்? தீவிர பற்று தன் பிள்ளைகள் மேல் கொண்டிருக்கின்ற பாசம் அந்த பாசத்தின் காரணமாக ஏற்படுகின்ற தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும் கூட தவறாக தெரியாத ஒரு நிலை. அதையே மற்றவர்கள் செய்தால் அது மிகப்பெரிய பஞ்சமாபாதகமாகத் தோன்றுவது. இவையெல்லாம் மாயையின் உச்சநிலை. எனவே சுயநலமும் தன்முனைப்பும் தீவிர பாசமும் ஆசையும் பற்றும் எந்த மனிதனுக்குள்ளும் எத்தனை காலம் இருந்தாலும் இறைவன் அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் அவனால் புரிந்து கொள்ள முடியாது.

சுலோகம் -155

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-36

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். கிருஷ்ணா இந்த மனிதன் தான் விரும்பா விட்டாலும் பலவந்தமாக தூண்டப்பட்டவன் போல எதனால் ஏவப்பட்டு பாவத்தை சேர்க்கிறான்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒரு மனிதன் பாவம் செய்வதற்கு விருப்பப்படுவது கிடையாது. ஆனாலும் ஒரு அரசனின் கட்டளைக்கு அடிபணியும் சேவகன் போல ஐந்து புலன்களின் கட்டளைக்கு அடிபணிந்து ஒரு மனிதன் பாவம் செய்து விடுகிறான். ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 274

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான் விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய் விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம் தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான் இருந்தாலும் அதனையும் நாங்கள் (சித்தர்கள்) செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே? அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே? என்றுதான். ஆனாலும் வழக்கம் போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

இறைவனின் கருணையாலே இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கு இல்லை அல்லது தற்சமயம் வாக்கு பகிர்வதில்லை அல்லது சிலருக்கு வாக்கு கூறுகிறார்கள். பலருக்கு கூறுவதில்லை அல்லது யார் அதிகம் தனம் வைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் வாக்கு ஓதுகின்ற நிலை இருக்கிறது என்றெல்லாம் தத்தம் மனதிற்கு ஏற்ப அந்த மனம் எந்தளவிற்கு கீழ்மைபட்டிருக்கிறதோ அந்தளவிற்கு எண்ணுகிறார்கள். ஒருவரின் சிந்தனையும் செயலும் சொல்லும் தரம் தாழ்ந்து இருக்க இருக்க அவன் இன்னும் பாவங்களை தொலைக்கவில்லை என்பதுதான் பொருள். பாவங்கள் பெருமளவு குறைந்த ஆத்மா மேலும் பாவங்களை செய்ய அஞ்சும் ஆத்மா ஒரு தீயதை பிறர் செய்ய பார்த்தாலும்கூட அவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான். ஏதோ ஒரு சந்தர்ப்பம் அல்லது வேறு ஏதோ ஒரு சூழல் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்று அதைக் கூட ஆக்கப் பூர்வமாகத்தான் பார்க்கும். ஆனால் பாவங்கள் நிரம்பியுள்ள ஒரு ஆத்மா பிறர் செய்கின்ற நற்செயல்களைக்கூட குதர்க்கமாகத்தான் பார்க்க எண்ணும். நல்லவர்களை பார்த்தாலே பாவ ஆத்மாக்களுக்கு தேகமெங்கும் எரிச்சல் வருவது போல் இருக்கும்.

File written by Adobe Photoshop? 4.0