சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த காட்சி. இடம் மங்களநாதர் கோவில் உத்திரகோசமங்கை.

சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த காட்சி. இடம் மங்களநாதர் கோவில் உத்திரகோசமங்கை.

வில்வ மரத்தடியில் இருக்கும் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூஜை செய்யும் உதாங்கமுனிவர். இடம்: பஞ்சவர்ணேசுவரர் கோவில். உறையூர் திருச்சி.

ஆறுமுகங்களும் பன்னிருகைகளுடன் கொண்ட சண்முகன். ஸ்ரீ சிகாநாதசாமி (சிகாகிரீஸ்வரர்) கோவில் குடுமியான்மலை. புதுக்கோட்டை மாவட்டம்.

சிவபெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை. அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள். அவள் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் சிற்பிகள். இடம்: ஹலபேடு. ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர் இருவருக்கும் நடராஜர் தனது திருநடனத்தை காட்டி அருளிய காட்சி. இடம் முக்தீஸ்வரர் கோவில். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
