ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 503

அகத்தியர் தனது பொது வாக்கில் ராம் என்ற ராமரின் மந்திரத்தை வைத்தே ராமரது வரலாற்றையும் ராமரது தத்துவத்தையும் சொல்லியிருக்கிறார்.

இறைவன் கருணை காெண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.
இறைவன் கருணை காெண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.

இன்பம் இதுவே என காட்டி தந்தா ராம்.
இன்பம் இதுவே என காட்டி தந்தா ராம்.

ஈகை (தர்ம) குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றா ராம்.
இன்பம் இதுவே என காட்டித் தந்தா ராம்.

இறை கருணை காெண்டாராம் அதனால் உலகை படைத்தா ராம். இறை கருணை காெண்டா ராம்.
அது போலவே இறை கருணை காெண்டதனால் அது போலவே இறை கருணை காெண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள் வந்தா ராம்.

இறை கருணை காெண்டா ராம். அது போலவே இறை கருணை காெண்டதனால் இது போலவே ஒவ்வாெரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தா ராம்.

இயம்புங்கால் (இதனை எடுத்து சொன்னால்) திருஷ்டியில் (ஞானப் பார்வையில்) அருளை தருவா ராம். துயரத்தில் தன்னை இணைத்துக் காெள்வா ராம். தாெல்லை வரும் பாெழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால் நடப்பா ராம். அவர் வருவா ராம் நடப்பா ராம் பாேவா ராம் இருப்பா ராம் என்றும் நல் அருளை தருவா ராம். ஆயினும் (ஆனாலும்) இதை உணர்வார் யார்? புரிந்தார் யார்?

இது போலவே இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சாெந்தம் என காெண்டவ ராம். அது போலவே காெண்டவ ராம் தன்னை காெண்டவளே (அன்னை). காெண்டவ ராம் தன்னை காெண்டவளே (அன்னை).

இயம்புங்கால் (இதனை எடுத்து சொன்னால்) அவர் (அன்னை) என்றும் இருப்பா ராம். அவர் (அன்னையாக) இருந்து இருந்து உயிர்களை காப்பாராம். காத்து காத்து ரட்சித்து அருள்வா ராம். அவர் (அன்னை) என்றும் உயிர்களாேடு பரிவாய் உறுதுணையாய் இருப்பா ராம். அவர் பாேவாராம் வருவா ராம் என்று தாேன்றினாலும் அவர் என்றென்றும் இருப்பா ராம். அவர் பக்தர்கள் நெஞ்சில் கிடப்பா ராம். அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பா ராம். இதை) உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஒளிர்வா ராம் (பிரகாசிப்பா ராம்). அவர் என்றும் உயர்ந்தா ராம். அவர் ஒரு பாெழுதும் தாழ்ந்தா ராம் என்று யாரும் கூற இயலாதாம் (முடியாதாம்). இது போலவே இறை கருணை காெண்டா ராம். அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வாெரு உள்ளமும் மகிழ்வில் ஆழுமாம் (ஆழ்ந்து இருக்குமாம்).

இறை கருணை காெண்டா ராம். இறை கருணை காெண்டா ராம். அதனால் அவர் (ராமர்) வந்தா ராம். அதனால் பிள்ளை என பிறந்தா ராம். அதுவும் நாடு ஆள்வது தாெல்லை என துறந்தா ராம். பிறகு வனம் சென்றா ராம். அது போலவே அங்கு சிலரை கண்டா ராம். அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தினா ராம். அது போலவே அவர் தன் துணையை பிரிந்தா ராம். அங்கு அவர் கண்டா ராம். தன் துணைக்கு மேல் துணையாய் தன்னையே தனக்குள் அடிமைபடுத்தும் ஒரு துணையை. அது போலவே வாயுபுத்திரனை (ஆஞ்சநேயர்) அவர் கண்டா ராம். தாேழமை காெண்டா ராம். அது போலவே அவர் வாலியை ஒதுக்கி வைத்தா ராம். அவர் வாலியின் சாேதரனை (சகோதரனை) ஏற்றி வைத்தா ராம். அதனால் வாலியை மாேட்சத்தில் இறக்கி வைத்தா ராம். அது போலவே அவர் மனிதருக்கும் இறைக்கும் (இறைவனுக்கும்) பாலம் என இருந்தா ராம். அது போலவே) மனிதர் செய்யும் பாவமெல்லாம் களைய அவர் பாலம் என இருந்தா ராம். அது போலவே ஆழியை (கடல்) கடந்தா ராம். அது போலவே ஆழி (கடல்) தாண்டி ஆழி (கடல்) தாண்டி அது பிறவி பெருங்கடல் தாண்டும் வண்ணம் மனிதர் உணரும் வண்ணம் அவர் பாலம் அமைத்தா ராம். அது போலவே சென்றா ராம். அசுரர் தலை எடுத்தாராம். அது போலவே அங்கு தன் ஆத்மாவென விளங்கும் அன்னையை மீட்டா ராம். அது போலவே ஆத்மாவை அவர் மீண்டும் சாேதித்து பார்த்தா ராம். அது போலவே மாேட்சம் என்னும் தேசத்தில் அமர்ந்தா ராம். ஆட்சியை தாெடர்ந்தா ராம்.

அது போலவே பஞ்ச (ஐந்து) புலனெல்லாம் விதவிதமாய் அலை கழிக்க ஆத்மா தன்னை அது தாெலைக்க தாெலைந்ததை வைராக்கியம் என்னும் வாய்வு (காற்று) என்று தேட அது போலவே தேடி கண்டுபிடித்து அதை உறுதியோடு பிடித்துக் காெள்ள அந்த ஆத்மாவுக்குள் உள்ள ஆத்மஞானம் செல்ல அதுவே இது இதுவே அது என உணர்ந்தா ராம் உணர்ந்தா ராம். அவரெல்லாம் ராமர் வழி வந்தாராம் வந்தாராம். அது போலவே அப்படி வருவாேரெல்லாம் சிறந்தா ராம் சிறந்தா ராம். அது போலவே சிறந்தாேரெல்லாம் தாெடர்ந்து பிறவியற்ற நிலைக்கு உயர்ந்தா ராம் உயர்ந்தா ராம்.

இறை கருணை காெண்டா ராம். அதனால் உயிர்கள் மீது அன்பு பாெழிந்தா ராம். அவர் என்றென்றும் இருப்பா ராம். பக்தர்கள் உள்ளத்தில் கிடப்பா ராம். இதை உணர்ந்தாேரே உண்மையை உணர்ந்தாே ராம். ஏனையாேர் எல்லாம் தாழ்ந்தாே ராம். எனவே தாழ்ந்தாே ராம் என்கிற நிலை தாண்டி உயர்ந்தாே ராம் என்ற நிலைக்கு வர அன்றாடம் அவரவர் வாயும் (மூச்சுக் காற்றுடன்) ராம் ராம் ராம் என ஜபிக்க அவரவர் ஆத்மாவும் உயர்ந்தாே ராம் என்கிற நிலைக்கு வரும். இது போலவே யாம் இறை அருளால் உள்ளத்தில் கலந்து அன்பினால் உயர்ந்து வாழ இறை அருளால் நல்லாசி கூறுகிறாேம்.

வாலி வழிபட்ட ஆதிபுரீஸ்வரர்

கிஷ்கிந்தை எனும் நாட்டை அரசாண்டு வந்த வாலி வீடுபேறடைவதற்காக தினசரி 4 சமுத்திரத்தில் நீராடி விதிப்படி நித்யகருமம் முடித்து பின்பு கயிலை மலை சென்று முதலில் நந்தி தேவரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்று பார்வதி சமேதரான சிவபெருமனை வாக்கு காயங்களினால் வழிபட்டுப் பின் தன் நகரினை அடைந்து நீதியுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.

ஒரு நாள் திக் விஜயம் செய்து வந்த இராவணன் வாலியைக் கண்டு குறும்பாக அவனை தன் கையை விட்டுப் பிடிக்க முற்படுகையில் வாலி தன் வாலினால் இராவணன் உடல் முழுவதையும் சுற்றி கட்டி விடுகிறார். பின்னர் அப்படியே சமுத்திரங்களில் நீராடி கயிலை மலை சென்று நந்தி தேவனை வணங்கி சிவனைக் காண அனுமதி கேட்டார். அதற்கு நந்தி தேவர் கைலாசபதியானவர் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் அதிகாபுரியை அடுத்த ஆதிபுரத்திற்கு சென்றுள்ளார் என்றார். உடனே சிவபெருமானை தரிசிக்க வேண்டி நந்திதேவரிடம் வாலி ஆதிபுரத்திற்கு வழி கேட்டார். நந்திதேவரோ உன் வாலினால் கட்டுண்டு கிடக்கும் இராவணன் அந்த ஆதிபுரத்தை அறிவான் என்று கூறுகிறார். (இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தன். சிவன் இருக்கும் இடம் எதுவாகினும் இராவணனிற்கு தெரியும்) உடனே வாலி இராவணனைப் பார்த்து ஆதிபுரத்திற்கு வழி சொன்னால் இந்த கட்டை தளர்த்தி உன்னை விடுவிப்பேன் என்கிறார். உடனே இராவணன் இந்த ஆதிபுர திருத்தலத்தை காட்டிட அங்கு திரிபுரசம்கார மூர்த்தியாய் உள்ள சிவபெருமானைக் கண்டு பேரானந்தம் அடைந்து வாலி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம் இந்த ஆதிபுரம்.

வாலியின் வாலினால் கட்டுண்டு இராவணன் விழிபிதுங்கி நிற்கும் காட்சி மூல விக்ரகம் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் தெற்கு திசையில் உள்ளது. இடம்: பத்மதளநாயகி உடனுறை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் ஆதிபுரம் எனும் எய்தனூர் (நெல்லிக்குப்பம் அருகில்) கடலூர் மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 502

அகத்தியர் தனது பொது வாக்கில் தூய தமிழில் சொல்லியிருக்கிறார். இதற்கு கீழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

நதியின் சங்கமம் ஆழியாேடு, உயர் நற்றமிழின் சங்கமம் நற்சுவையாேடு, விதித்த விதியின் சங்கமம் அவனவன் செயலாேடு, என்றென்றும் பதியின்(கணவன்) சங்கமம் மெய் பத்தினியாேடு, அவனவன் மதியின் சங்கமம் உயர் குணத்தாேடு, விளைந்த கதியின் சங்கமம் அவனவன் எண்ணத்தாேடு, என்றென்றும் தர்மத்தின் சங்கமம் புண்ணியத்தாேடு, தளர்வில்லா மனதின் சங்கமம் இறையாேடு, தப்பில்லா வாழ்வும் வளமாேடு இருக்க நாள் நாளும் நிகழும் சங்கமம் நல் விளைவாேடு, நலமில்லா சூழலின் சங்கமம் முன் கர்மத்தாேடு, நன்றாய் உயிரின் சங்கமம் ஆக்கையாேடு, அந்த ஆக்கையின் சங்கமம் ஆண் பெண் கலப்பாேடு அறியங்கால் அடியாரின் சங்கமம் உயர் தாெண்டாேடு, உயர் தாெண்டின் சங்கமம் நல்புண்ணியத்தாேடு, ஆன்மா ஆக்கை எடுத்த பயன் புலன் ஆசை விட்டு அன்றாடம் அறம் சத்யம் தாெடர்ந்து மெய் ஞான வழியில் சென்று ஆக்கை தாண்டி ஆன்மாவை இறையாேடு சங்கமித்தலே. சங்கமிக்கும் காலம் வரை தேகம் மீண்டும் மீண்டும் சங்கமிக்கும். தமிழ் சங்கமம் வளர்த்த அன்னை மீனாள். பெருகூர்(ஓர் ஊர்) தன்னில் இருந்து சங்கத்தாேடு சில சங்தேகத்தாேடு எம்முன் அமர்ந்த என்றும் எம்மையே சங்கமித்து எம்மையே சங்கல்பம் செய்து சங்கில் இருந்து நாதம் வந்தாலும் எம்(அகத்திய மாமுனிவர்) நாதமாக எண்ணி எம்மையே எம்மையே சங்கநாதம் செய்யும் பூர்வ ஜென்ம தாெடர்……. நல்லாசி.

விளக்கம்:

நதியின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) ஆழியாேடு (கடலோடு)

உயர் நற்றமிழின் (நல்ல தமிழின்) சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) நற்சுவையாேடு (நல்ல சுவையோடு)

விதித்த விதியின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) அவனவன் செயலாேடு

என்றென்றும் பதியின் (கணவன்) சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) மெய் (உண்மையான) பத்தினியாேடு

அவனவன் மதியின் (அறிவின்) சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) உயர் குணத்தாேடு

விளைந்த (வாழ்வில் கிடைத்த) கதியின் (நிலை) சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) அவனவன் எண்ணத்தாேடு

என்றென்றும் தர்மத்தின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) புண்ணியத்தாேடு

தளர்வில்லா மனதின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) இறையாேடு

தப்பில்லா வாழ்வும் வளமாேடு இருக்க நாள் நாளும் நிகழும் (செய்கின்ற நன்மையான செயல்கள்) சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) நல் விளைவாேடு

நலமில்லா சூழலின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) முன் கர்மத்தாேடு

நன்றாய் உயிரின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) ஆக்கையாேடு (உடம்போடு)

அந்த ஆக்கையின் (உடம்பின்) சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) ஆண் பெண் கலப்பாேடு அறியுங்கால் (அறியும் பொழுது)

அடியாரின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) உயர் தாெண்டாேடு

உயர் தாெண்டின் சங்கமம் (சென்று சேருகின்ற இடம்) நல் புண்ணியத்தாேடு

ஆன்மா ஆக்கை (உடம்பு) எடுத்த பயனானது புலன் ஆசை விட்டு அன்றாடம் அறம் சத்யம் தாெடர்ந்து மெய் ஞான வழியில் சென்று ஆக்கை (உடம்பை) தாண்டி ஆன்மாவை இறையாேடு சங்கமித்தலே (கலப்பதே) ஆகும். சங்கமிக்கும் (அப்படி கலக்கின்ற) காலம் வரை தேகம் (உடலோடு) மீண்டும் மீண்டும் சங்கமிக்கும் (ஆன்மா சேர்ந்து பிறந்து கொண்டே இருக்கும்).

தமிழ் சங்கமம் (மூன்று தமிழும் கலந்து இருப்பது) வளர்த்த அன்னை மீனாள் (மீனாட்சி). பெருகூர்(ஓர் ஊர்) தன்னில் இருந்து சங்கத்தாேடு (கூட்டத்தோடு) சில சந்தேகத்தாேடு எம்முன் அமர்ந்த என்றும் எம்மையே சங்கமித்து (சார்ந்து இருந்து) எம்மையே சங்கல்பம் (வைராக்கியமாக பற்றிக் கொண்டு) செய்து சங்கில் இருந்து நாதம் வந்தாலும் எம்(அகத்திய மாமுனிவர்) நாதமாக எண்ணி எம்மையே எம்மையே சங்கநாதம் (சங்கும் நாதமும் போல ஒன்றாக) செய்யும் (இருக்கும் காரணம்) பூர்வ (முந்தைய) ஜென்ம (ஜென்மத்திலிருந்து) தாெடர் (தொடர்ந்து வருகின்ற பற்றினால் ஆகும்) நல்லாசி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 501

கேள்வி: வலம்புரி சங்கைப் பற்றி:

வலம்புரி சங்கை முக்கண்ணனை (மூன்று கண்களைக் கொண்ட சிவ பெருமானை) வைத்து யார் வழிபாடு செய்கிறார்களாே அவர்களுக்கே தர வேண்டும். முக்கண்ணனின் (சிவ பெருமானின்) வழிபாடு முறையாக செய்பவருக்கே வலம்புரி சங்கு சென்று சேர வேண்டும். சங்கை அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் முன் சங்கையே அபிஷேகம் செய்ய வேண்டும். அது போலவே மேல் உள்ள குறிப்புகளை அகற்றிவிட்டு (சுத்தம் செய்துவிட்டு) சுத்தமான நீரில் ஏக (ஒரு) தினம் (நாள்) வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் சுத்தமான ஆவின் (காேமாதாவின்) பாலிலே சூலத் (27 நாட்களைக் கொண்ட) திங்கள் (ஒரு தமிழ் மாதம்) குறையாது வைத்திருக்க வேண்டும். சூல (27) முறை பால் மாற்ற வேண்டும். கங்கை நீரிலே வைக்க மேலும் நலம். நீரிலே ஒவ்வாெரு முறையும் சுத்தம் செய்து பத்திரமாக வைக்க வேண்டும்.

ராமர் விட்ட அம்பு

ஸ்ரீ ராமர் எய்த ஒரே அம்பு 7 பனை மரங்களை துளைத்துச் சென்றதாக புராணத்தில் உள்ளது. இதை விளக்கும் சிற்பம் கர்நாடக மாநிலம் ஹளபீடுவில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் உள்ளது.

வைகுண்டசதுர்மூர்த்தி

வைகுண்டசதுர்மூர்த்தி என்பவர் நான்கு தலைகளைக் கொண்ட விஷ்ணு பகவானின் சக்தி வாய்ந்த அம்சமாகும். மனிதத் தலை சிங்கத் தலை பன்றித் தலை உக்கிரமான தலை ஆகியவற்றை உடையவர். ஒரு தலை பின்னால் மறைந்திருக்கிறது. நான்கு தலைகள் கொண்ட விஷ்ணுவைப் பற்றிய விவரங்கள் மகாபாரதத்திலும் சில பண்டைய புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மிருகத்தின் தலை நரசிம்மரையும் வராஹத்தையும் குறிக்கிறது.

திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 2

“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 2” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-11-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.