இடம்: பாதாமி குடைவரை கோவில். குகை எண் 3.
யோகினி
64 யோகினிகளில் ஒருவரான யோகினி யமுனை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறாள். இந்த யோகினி ஒரு ஆமையின் மேல் ஒரு காலையும் அதன் வால் முனையின் மேல் மற்றொரு காலையும் வைத்து தன்னை சமநிலைப்படுத்திக் கொள்வதைக் காணலாம். இந்த யோகினிக்கு நான்கு கைகள் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான அம்சம் இவளது தலையை சுற்றி சுருண்டு எழும்பியுள்ள ஜடாமுடி தான்.
அமைவிடம்: சௌசாத் யோகினி கோவில் ஹிராபூர் ஒடிசா மாநிலம்.

பிட்சாடனர்
இடம்: ஆவுடையார் கோயில். திருப்பெருந்துறை புதுக்கோட்டை மாவட்டம்.


புராண முருகர்
மயில் மீது இரு புறமும் கால்கள் போட்டு அமர்ந்த வடிவில் நுக்கேஹள்ளி எனும் இடத்தில் உள்ள ஹொய்சளர் கலைப்பாணி முருகன் சிலை இது. பொதுவாக ஹொய்சளர்கள் மிக அரிதாகவே முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். இது 13-ம் நூற்றாண்டு சிலையாகும். இங்கே நமக்கு மிகவும் பரிச்சயமான அழகான வேல் ஒரு கையிலும் மறு கையில் பாசக்கயிறு மற்றொரு கையில் அக்கமாலை நான்காம் கையில் ஹொய்சளர் சிலைகள் அனைத்திலும் இருக்கும் ஒருவித எலுமிச்சைவகைப் பழம் இருக்கிறது. ஆறு முகத்தில் மூன்று முகத்தை காண முடிகிறது. மயிலை அதன் தோகைகளுடன் மிக மிக அழகாக உருவாக்கியுள்ளனர்.

திருமூலர் தனது சீடர்களுடன்
திருமூலர் தனது ஏழு சீடர்களுடன் திருவாவடுதுறை கோமூக்தீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஓவியம். 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருமந்திரம் புத்தகத்தில் உள்ளது.

பாறை சிவலிங்கம்
ஹம்பி துங்கபத்ரா நதிக்கரையில் செதுக்கப்பட்டுள்ள இறைவனின் பாதத்துடன் அற்புதமான சிவலிங்கம்


தீவினைகளை நீக்கி நல்வினைகளை பெறுதல்
திருமந்திரத்தில் சைவம் – பகுதி 3
“திருமந்திரத்தில் சைவம் – பகுதி 3” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-10-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

