ஸ்ரீ ஸ்வேத வராக பெருமாள் திருக்கோவில் மைசூர் அரண்மனை.

ஸ்ரீ ஸ்வேத வராக பெருமாள் திருக்கோவில் மைசூர் அரண்மனை.

இடம். ஸ்ரீ வாதிராஜ சுவாமி மடம், சோதே கர்நாடகா.

விஷ்ணு பகவானும் கருட பகவானும் தோழமையுடன் நிற்கும் சிற்பம். கருடன் மனித வடிவில் காட்டப்பட்டுள்ளார். இடம்: குன்றக்குடிகுடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

நாரதர் அளித்த சாபத்தினால் நளகூவரன் மணிக்கிரீவன் என்ற இரு தேவர்கள் மரங்களாக மாறி நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக் கொண்டே கண்ணன் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்ற போது மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்த போது மரங்கள் வேரோடு சாய்ந்து அவைகளில் இருந்து நளகூவரன் மணிக்கிரீவன் இருவரும் சாப விமோசனம் பெற்றார்கள். இந்த நிகழ்வை விளக்கும் சிற்பமும் மண்டபத் தூணில் உள்ளது. இடம்: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில். கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும் பின்னர் 12-13 ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு திரு அகத்தீஸ்வரமுடையார் என்ற பெயர் கொண்ட சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது.

பிரகலாதனின் பக்திக்கு ஆரத்தழுவும் நரசிம்மரின் சிதிலமடைந்த சிற்பம்

பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு. இடம் வரதராஜப்பெருமாள் கோவில் காஞ்சிபுரம்.

திருமாலின் பத்து அவதாரர்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இந்த அவதாரத்தில் இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர் செய்து வென்றார். இடம் கம்போடியா. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.

சுயம்வரத்தில் சிவதனுசை உடைத்த ஸ்ரீராமருக்கு மாலை அணிவிக்கும் சீதை. இடம்: பரிமளரங்கநாதர் கோவில். திருஇந்தளூர் மயிலாடுதுறை.


லலிதாதேவி மற்றும் விஷாகா இவர்கள் இருவரும் கண்ணனின் கோபிகையரில் முதன்மையானவர்கள். வேணுகோபாலனுடன் இருவரும் இருக்கும் சிற்பம். இடம் ஹசாராராமா கோயில். ஹம்பி

ராமரும் சீதையும் சின்முத்திரையில் உள்ளார்கள். பரதன் சத்ருக்கன் அருகே உள்ளார்கள். லட்சுமணன் பணிவாக வணக்கம் செலுத்துகிறார். அனுமான் அன்புடன் ஸ்ரீராமரின் பாதங்களைத் தன் கைகளில் தொட்டு வணங்குகிறார். இடம் சிருங்கேரியில் உள்ள குரு நிவாஸில் இந்த சிற்பம் உள்ளது.
