பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு. இடம் வரதராஜப்பெருமாள் கோவில் காஞ்சிபுரம்.

பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு. இடம் வரதராஜப்பெருமாள் கோவில் காஞ்சிபுரம்.
திருமாலின் பத்து அவதாரர்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இந்த அவதாரத்தில் இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர் செய்து வென்றார். இடம் கம்போடியா. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.
சுயம்வரத்தில் சிவதனுசை உடைத்த ஸ்ரீராமருக்கு மாலை அணிவிக்கும் சீதை. இடம்: பரிமளரங்கநாதர் கோவில். திருஇந்தளூர் மயிலாடுதுறை.
லலிதாதேவி மற்றும் விஷாகா இவர்கள் இருவரும் கண்ணனின் கோபிகையரில் முதன்மையானவர்கள். வேணுகோபாலனுடன் இருவரும் இருக்கும் சிற்பம். இடம் ஹசாராராமா கோயில். ஹம்பி
ராமரும் சீதையும் சின்முத்திரையில் உள்ளார்கள். பரதன் சத்ருக்கன் அருகே உள்ளார்கள். லட்சுமணன் பணிவாக வணக்கம் செலுத்துகிறார். அனுமான் அன்புடன் ஸ்ரீராமரின் பாதங்களைத் தன் கைகளில் தொட்டு வணங்குகிறார். இடம் சிருங்கேரியில் உள்ள குரு நிவாஸில் இந்த சிற்பம் உள்ளது.
அஹோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். உலக நன்மைக்காக செஞ்சுக்களின் குடியில் பிறந்த லட்சுமியை நரசிம்மர் இங்கு வந்து திருமணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது. செஞ்சுலட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள். இடம் அஹோபிலம்
அனுமனின் மேல் அமர்ந்திருக்கும் கம்பீர தோற்றத்தில் ராமர். ஸ்ரீராமரை சுமந்திருப்பதால் பணிவான பெருமிதத்துடன் அனுமன். இடம்: ஸ்ரீசௌந்திரராஜபெருமாள் கோவில் தாடிக்கொம்பு. திண்டுக்கல் மாவட்டம்.
நாராயணன் தனது மனைவி லட்சுமியுடன். இடம் ஹோய்சலேஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலம்.
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்து கடலின் அடியில் அமர்ந்து கொள்ள மந்தார மலையை மத்தாகக் கொண்டும் வாசுகி எனும் நாகத்தை கயிறாகக் கொண்டும் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையும் அற்புதமான காட்சி. இடம்: ஹட்கேஷ்வர் மகாதேவ் கோவில். வாட்நகர் குஜராத்.
ஆதிசேஷன் மேல் அமர்ந்தவாறு பச்சைக்கல்லால் ஆன பெருமாள் பரமபதநாதர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இடம்: கரிவரதர் பெருமாள். கரிய மாணிக்க பெருமாள் கோவில் பனம்பாக்கம் கடம்பத்தூர் செஞ்சி.