உடலில் உண்டு பண்ணுகின்ற வதையையும் வலியையும் பொறுத்துக்கொள்ளும் மனவலிமை சூத்திரியர்களுக்கே உண்டு வேறு யாருக்கும் கிடையாது. அடே சிறுவனே நீ சூத்திரியனா என்று பார்கவ மகரிஷி கர்ணனிடம் கோபமாகக் கேட்டார். கர்ணன் குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். தேம்பித் தேம்பி அழுதான். என் பெற்றோர் யார் என்று எனக்கு தெரியாது. ஒரு தேரோட்டியின் என் குடும்பம் என்னை வளர்த்து வருகிறது. ஆதலால் நான் சூத புத்திரன் என்று அழைக்கப்படுகின்றேன். ஞான வேட்கையினால் தூண்டப் பெற்று கல்வி கற்க நான் தங்களிடம் பொய் கூறினேன். வேறு பாவம் எதையும் நான் செய்யவில்லை. நான் கொண்டிருக்கும் நோக்கத்தின் புனிதத்தை கருத்தில் கொண்டு என்னை மன்னித்து அருளும் படி வேண்டுகின்றேன். கல்வியை இணத்தோடும் கொள்கைழோடும் இணைக்கலாகாது என கூறப்படுகிறது. தாங்கள் எனது தந்தைக்கும் தாய்க்கும் மேலானவர் தங்களிடம் அடைக்கலம் அடைகிறேன். கிருபை கூர்ந்து தாங்கள் என்னை தங்களுக்கு உற்றவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினான்.
பார்கவ ரிஷிக்கு கோபமடைந்தார். அவருக்கு பண்பிலும் மிக்கது பிறப்பு. மாணவன் ஒருவன் எத்தகைய பிறப்பில் இருக்கின்றான் என்பது அவருக்கு முக்கியமானதாக இருந்தது. பிராமண குலத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே கலையை கற்றுக் கொடுப்பது என்ற கொள்கையை அவர் வைத்திருந்தார். கர்ணன் கூறியதை கேட்டதும் பார்கவரிஷிக்கு கர்ணன் மீது வைத்திருந்த அன்பு ஒரு நொடிப்பொழுதில் மாயமாக மறைந்து போயிற்று. அவனைப் பற்றிய நல்ல எண்ணத்தை அறவே மறந்து விட்டார். கர்ணன் இவ்வளவு நாள் குருவிற்கு செய்த பணிவிடையும் ஒப்பற்றது. அதையும் அவர் பொருட்படுத்தவில்லை. அவருடைய தலை சிறந்த மாணவனாக திகழ்ந்த கர்ணன் மீது சாபம் ஒன்றை சுமத்தினார். உன்னை ஒரு பிராமணன் என்று பாசாங்கு பண்ணிக்கொண்டு என்னிடத்தில் இருந்து கற்றுக் கொண்ட அர்த்தசாஸ்திர வித்தைகளை அனைத்தையும் கற்றுக் கொண்டாய். இந்த வித்தைகள் பயன்படுத்த வேண்டிய நெருக்கடியான நேரத்தில் இவை யாவும் உன் ஞாபகத்தில் இருந்து மறைந்து போகும் என்று சாபமிட்டார்.
பார்கவரிஷி கூறியதை கேட்டதும் கர்ணன் மயக்கமடைந்து கீழே விழுந்தான். நெடுநேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து அவன் எழுந்து பார்த்த பொழுது பார்கவரிஷி அங்கு இல்லை. ஆதரிப்போர் அற்றவனாக ஊக்கத்தை முற்றிலும் இழந்தவனாக அவன் ஆகிவிட்டான் வீட்டுக்கு திரும்பி போய்க் கொண்டிருந்த பொழுது தன்னுடைய நிலையை எண்ணி கவலையுற்றான். அவனை பெற்றவர் யார் என்பது அவனுக்கு தெரியாது. வளர்ப்பு பெற்றோர்களோ அன்பே வடிவெடுத்து இருந்தனர். ஆயினும் சூதபுத்திரன் என்னும் நாமம் அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. திறமைசாலிகளின் கூட்டத்தில் அவன் ஒட்டி உறவாடுதற்கு அந்த நாமம் இந்த நாமம் அவனுக்கு இடைஞ்சலாய் இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே வீடு நோக்கி சென்றான்.