விஷ்ணு துர்க்கை

ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று.

இராஜராஜேஸ்வரம் 9 ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டு இராஜராஜசோழர் காலம்.

மூன்று மார்பகங்கள் கொண்ட மீனாட்சி அம்மன்

சிவப் புராணத்தில் உள்ளபடி மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னன் மலையத்துவசன் காஞ்சனமாலை தம்பதியர் வேள்வி செய்து பெற்ற தவப்புதல்வி ஆவாள். இவளே சுந்தரேஸ்வரரின் மனைவியும் ஆவாள். மீனாட்சி அம்மனை தடாதகை பிராட்டி எனவும் அழைக்கப்பட்டதாக சில கூற்றுகள் இருக்கின்றன. பிறப்பில் மீனாட்சி அம்மனுக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகும் மணவாளனை பார்த்த பிறகு தனது மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் எனும் நிலை கொண்டிருந்தார். கயிலை மலையில் சிவனை கண்ட பிறகு மீனாட்சி அம்மனின் மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது என சிவப்புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் மிகுந்த வீரம் கொண்ட பெண்ணாக இருந்துள்ளார். தனது தந்தை இறந்த பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படையுடன் கிளம்பி கயிலை மலை வரை சென்று வென்று வந்தார் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கயிலை மலையில் சிவனை கண்டு வெட்கம் கொண்ட பெண் நிலையை மீனாட்சி அம்மன் அடைந்த பிறகு மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது. சிவனையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டார். இன்றளவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடந்த பிறகே சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைப் பெற்று வருகின்றன.

கைகடிகாரம் கட்டும் அம்பாள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் பரமல்யாணி உடனுறை சிவசைலநாதர் திருக்கோவிலில் உற்சவர் அம்பிகைக்கு விழாக்காலங்களில் அலங்காரம் செய்யும் போது இடது கரத்தில் தங்க கைகடிகாரம் சார்த்துவார்கள்.