ஹாவேரியில் உள்ள சித்தேசுவரன் கோவிலின் ஷிகாராவில் 11ஆம் நூற்றாண்டு கல்யாண சாளுக்கிய சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட தியான நிலையில் உள்ள சிவன். இடம் சித்தேசுவரன் கோவில். ஆவேரி மாவட்டம். கர்நாடக மாநிலம்.
சிவன்
மகாசாதசிவா
25 முகங்கள் 75 கண்கள் மற்றும் 50 கைகளுடன் மகாசாதசிவா இடம் ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கோபுரம் சுசீந்திரம்.
பழமையான சிவலிங்கம்
பழமையான சிவலிங்கம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பழமையான சிவலிங்கம்.
தாமரை லிங்கம் சோமநாதர்
ஸ்ரீதிரிபுவன சித்தர் தாமரை மலரில் உருவாக்கிய சிவலிங்கம்
பத்துக் கரங்களில் ஆயுதமேந்தியபடி நடனமாடும் சிவன்
இரவனபாடி குடைவரைக் கோயில் ஐஹோளே கர்நாடக மாநிலத்தில் இந்த சிலை உள்ளது. வலது முன்கை மார்பை அணைத்தபடி இருக்க இடது முன்கை பக்கவாட்டில் விரிந்துள்ளது. உயரமான தலையலங்காரம் இடையில் மடிப்புடன் அமைந்த ஆடை அணிந்து சிவன் ஆடும் நடனத்தை பார்வதி கணபதி முருகன் (முகம் சிதைக்கப் பட்டுள்ளது) தேவலோகப் பெண்கள் மற்றும் சப்த_மாதர்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்கு சிவன் காட்டும் ஆடல் அந்தகாசுரனை அழித்த பின்பு வெற்றிக்களிப்புடன் ஆடும் நடனம்.
தொகன்ஜி சிவலிங்கம்
ஜப்பான் நகோயாவில் உள்ள தொகன்ஜி கோவிலில் உள்ள சிவலிங்கம்
ஸ்ரீ கண்டேஸ்வரர்
சிவபெருமானின் தொண்டையில் விஷத்தை தடுத்த பார்வதி தேவி இடம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்குடி ஸ்ரீ கண்டேஸ்வரர் சன்னதி
சிவபார்வதி
அர்த்தநாரி நடேஷ்வர் ஆலயம். வேலப்பூர் மஹாராஷ்டிர மாநிலம். இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் யாதவ் ஆட்சியாளர் ராமச்சந்திரதேவ் ஆட்சியின் போது பிரம்மதேவ்ரெய்னா மற்றும் பைதேவ்ரெய்னா என்ற இரண்டு சகோதரர்கள் ஹேமதபந்தி பாணியில் கட்டப்பட்டது. கிருஷ்ண தேவராயரால் 13ஆம் நூற்றாண்டில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
லிங்கோத்பவ மூர்த்தி
சோழர் காலத்து லிங்கோத்பவ மூர்த்தியின் கிரானைட் சிற்பம். தற்போது இருப்பது அருங்காட்சியகம் பாரிஸ் பிரான்ஸ்.