ஆவுடையார் கோவில் தூணில் உள்ள சிவ தாண்டவம்.
சிவன்
சந்திரகாந்தசோடச லிங்கம்
பட்டீஸ்வரம் 16 பட்டை சந்திரகாந்த சோடச லிங்கம்
புராண லிங்கம்
மகாராஷ்டிராவின் நாசிக்கின் வடமேற்கே சுமார் 37 கிமீ தொலைவில் வகேரா மலைக்கோட்டையில் உள்ள புராண லிங்கம்.
தர்மதாரா லிங்கம்
32 பட்டைகளுடன் உள்ள இந்த சிவ லிங்கம் 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த மிகப்பழமையான லிங்கமாகும். இவர் முன்பு அமர்ந்திருக்கும் நந்தி இறைவனை நேராக பார்க்காமல் தனக்கு வலது பக்கமாக சிறிது திருப்பி இருக்கிறார். இவர் காஞ்சிபுரம் ராமநாதர் கோவிலில் இருக்கிறார்.
யோக தட்சிணாமூர்த்தி
யோக தட்சிணாமூர்த்தி அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படுபவர் வடிவமாகும். யோக நிலையைப் பிரம்ம குமாரர்களுக்குக் கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே யோக தட்சிணாமூர்த்தியாகும்.
பழமையான சிவலிங்கம்
கம்போடியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 12ம் நூற்றாண்டின் பழமையான சிவலிங்கம்
துங்கபத்ரா சிவலிங்கம்
ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் காணப்படும் பழமையான சிவலிங்கம்.
ரிஷபவாகனதேவர்
சிவலிங்க வழிபாடு முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம் என சிவனின் பல ரூபங்களில் இந்த சிவன் சற்று வித்தியாசமாக ரூபத்தில் இருக்கிறார். ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில் ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர். இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கோவிலில் இவர் இருக்கிறார்.
பாகுமுகி சிவலிங்கம்.
சங்கமேஷ்வர் கோவில்
சிவ சிவலிங்கம்
நேபாளத்தின் பக்தாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சூர்ய விநாயக கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவன் மற்றும் சிவலிங்கம்.