மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராமேஷ்வர் கோயிலில் தரையோடு தரையாக அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராமேஷ்வர் கோயிலில் தரையோடு தரையாக அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.
அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் வரலாற்று சிதைவுகள் காணப்படும் இடமொன்றில் ஒரு கிணறுக்குள் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் மாஹேஸ்வர் நகர படித்துறை ஒன்றில் அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்கம் நகரில் உள்ள மாமலேஷ்வர் கோயில் சிவலிங்கம்.
கர்நாடக மாநிலம் ஹம்பியில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் 9 அடி உயரமுள்ள இந்த படவலிங்கம் அமைந்துள்ளது. ஒற்றைக் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில் மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது சிவனின் மூன்று கண்களாக கருதப்படுகின்றன. இது ஹம்பியிலுள்ள லிங்கங்களுள் மிகப் பெரியதாகும். ஒரு ஏழை விவசாயப் பெண் இதனைக் கட்டியதாக வரலாறு உள்ளது. லிங்கம் உள்ள அறை வழியாக ஒரு வாய்க்கால் செல்வதால் லிங்கத்தின் அடிப்பகுதி நீரால் சூழப்பட்டு அவ்வறையில் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்டளவுக்கு நீர் உள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் நரசிங்கப்பூர் மாவட்டத்தில் உள்ள கதர்வாரா நகரிலுள்ள டமரு காட்டி சிவலிங்கம்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மஹாதேவ் ஆலய சிவலிங்கம்.
மங்களூரில் உள்ள கத்ரி மஞ்சுநாதர் கோயில் சிவலிங்கம்.
மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் நாராயன் மஹாராஜ் மடத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்.
குடிலோவா ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள குடிலோவா மலையுச்சியில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.