ராமேஸ்வரம் உப்பு லிங்கம்

இராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருக்கிறது. ஒரு முறை சிலர் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும் அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கம் இப்போதும் உள்ளது.

One thought on “ராமேஸ்வரம் உப்பு லிங்கம்

  1. தங்கவேல் Reply

    அருமை தகவல் அய்யா மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு தகவல் அற்புதம் பயன் உள்ளது தகவல் tsaravanan
    . com மனதில் நீற்கும் 😄😄🙏🏽

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.