மகாபாரதத்தில் விதுரர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ணன் திருதராஷ்டரரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார். அத்தகைய பெருமை மிக்க விதுரர் 15 வகையான மூடர்களை பட்டியலிடுகிறார்.
- தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.
- தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவன்.
- பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்பவன்.
- உயர்ந்த குடும்பத்தில் பிறந்து முறையற்ற செயலை செய்பவன்.
- தானத்தைக் கேட்கக்கூடாதவனிடம் கேட்பவன்.
- எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து தற்பெருமை பேசுபவன்.
- பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம் பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
- பலமில்லாதவனாக இருந்துகொண்டு பலமுள்ளவனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
- பிறரிடம் இருந்து உதவியோ அல்லது பொருளையோ பெற்றுக்கொண்டு பின் அது தனது நினைவில் இல்லையே என்று சொல்பவன்.
- தனது மனைவியைக் குறித்து பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
- அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
- தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
- புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு வீட்டிற்கு வந்து அதை தானே சொல்லித்தற்பெருமை பேசுபவன்.
- எதிரிகளிடம் சரண்டைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
மிகவும் பயனுள்ள தகவல்கள்…