செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்தார்கள். அவர்கள் பெரியவாளிடம் தங்கள் அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் விடாமப் செய்து கொண்டு இருக்கோம். ஆனாஇந்த ஊர்ல பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே ஒரே ஒருவர் தான் இருக்கிறார். அவரும் பண்ணி வெக்கும் போது அவர் சொல்ற மந்திரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை. அர்த்தம் தெரியாம பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் பண்றதை எங்கள் வீட்டு பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும் என்றார்கள்.
அதற்கு பெரியவா பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு என்று அவர் ஆரம்பித்த போது ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு போஸ்ட்மேன் வந்து சில கடிதங்களை கொடுத்து விட்டு சென்றார். பெரியவா அதிலிருந்து ஒரு லெட்டரை எடுத்தார். அதில் பின்கோடு என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி பின்கோடுன்னு போட்டிருக்கே அதோட அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டு வந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.
போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர் என்று அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு பின்கோடுன்னு போட்டிருக்கற இடத்தில் சரியான நம்பரை எழுதிட்டா அது சரியா போய்சேர வேண்டிய இடத்துக்கு போய்விடும். அது மாதிரி பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் பண்ணி வெக்கற ப்ரோகிதருக்கு மந்திரங்களோட அர்த்தம் தெரியாவிட்டாலும் பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும் எந்த கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ அதை சரியாக சொன்னால் அதுக்குண்டான பலனை அது குடுக்கும். அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். அதுனால இப்போ இருக்கற ப்ரோகிதரை நிறுத்தாம நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை சிரத்தையோட பண்ணிட்டு வாங்க ஒரு குறைவும் வராது கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.
மந்திரம் என்பது உண்டா? குழந்தைக்கு மந்திரித்தல்,பயந்தவற்களுக்கு மந்திரத்தல், இதெல்லாம் உண்மையா? அப்படியெனில் அவ்வாறு மந்திரிக்கும் போது என்ன என்ன விசயங்கள் தெரிய வரும்?
மந்திரம் என்பது உண்டு. குழந்தைகளுக்கு மந்திரித்தல் என்பது உண்மையே. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சரியானபடி மந்திரிப்பவர்கள் யாரும் இல்லை என்பது எமது கருத்து. மந்திரிக்கும் போது சொல்லப்படும் மந்திரங்களுக்கு ஏற்ப பலன்களை தெரிந்து கொள்ளலாம்.