பாகல்பூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பங்க மாவட்டத்தில் மாந்தர் பர்பத் அமைந்துள்ளது. இங்கு உள்ள மலை 700 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலையைப் பற்றி புராணங்கள் மற்றும் மகாபாரதத்தில் பல கதைகள் உள்ளது. மலையின் நடுவில் நரசிம்மர் குகைக்கு அருகில் ஒரு சங்கு குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் எப்போதும் வறண்டு போகாது. சிவராத்திரிக்கு ஒரு நாள் முன்பு நீர் வற்றி விடும். அப்போது இந்த குளத்தில் உள்ள சங்கை பார்க்கலாம். மீதி 364 நாட்கள் 70 லிருந்து 80 அடி தண்ணீருக்குள் இந்த சங்கு இருக்கும். இந்த ஒரு நாள் மட்டும் தண்ணீர் குறைந்து சங்கு வெளியே தெரியும் அடுத்த நாள் தண்ணீர் சேர்த்து குளம் நிரம்பி சங்கு மறைந்து விடும். இந்த பாஞ்சசன்ய சங்கு கடலை கடையும் போது கிடைத்த ஆலகால விஷத்தை சிவபெருமான் குடித்தாக கூறப்படுகிறது. கி.பி 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு காலத்திய சிவன் காமதேனு மற்றும் வராகி ஆகியோரின் பல அரிய சிற்பங்கள் இந்த கோவில் இருக்கும் மலையைச் சுற்றி சிதறிக் கிடப்பதைக் காணலாம்.