கடவுள் இருக்கின்றார்

ஒரு நாத்திகர் இருந்தார். அவர் ஒரு மக்கள் கூட்டத்தில் பேசும் போது கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது என்று கடவுளை அவன் விருப்பத்திற்கு திட்டினான். நான் வேண்டுமானால் சவால் விடுகிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இன்னும் 30 நிமிடத்திற்குள் இந்த மேடைக்கு வந்து என்னை கொல்ல வேண்டும். அப்போது நான் கடவுள் இருக்கிறார் என்று ஏற்கிறேன் என்று சொல்லி விட்டு கடிகாரத்தை அவர் முன் இருக்கும் டேபிள் மீது வைத்து அங்கு அமர்ந்து விட்டார். இப்போது இங்கு என்ன நடக்க போகிறது என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 30 நிமிடம் ஆனது. சவால் விட்டவன் சாக இல்லை. அப்போது அங்கு உள்ளவர்களின் மனதில் கடவுளை இவ்வளவு திட்டுகிறான். இவ்வளவு திட்டியும் இவனுக்கு ஒன்றுமே ஆகவில்லையே? கடவுள் என்ற ஒருவர் இல்லையோ என்ற சந்தேகம் வர ஆரம்பித்தது. சிலர் இவன் சொன்னது சரிதான் 5 நிமிடமாகியும் இவன் சாகவே இல்லை. ஆக கடவுள் இல்லை என்று சொன்னார்கள்.

அப்போது அந்த மேடையில் ஒரு ஞானி வந்து மக்கள் முன் பேச ஆரம்பித்தார். இவன் சொன்னதை இவ்வளவு நேரம் கேட்டீர்கள். இப்போது நான் சொல்வதையும் கேட்டு சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று ஆரம்பித்தார். உங்களது மகனோ மகளோ உங்களது எதிரில் வந்து என்னை நீ 5 நிமிடத்தில் கொன்றால்தான் நீ எனக்கு தாய் தந்தை. இல்லை என்றால் நீங்கள் எனது தாய் தந்தை இல்லை என்று என்று சொன்னால் நீங்கள் உங்களது தாய் தந்தை உறவை நிருபிக்க உங்களது குழந்தைகளை நீங்கள் கொல்வீர்களா? உங்களது குழந்தைகள் உங்களை தவறாக பேசினால் கூட அவர்களை எப்படி திருத்துவது என்றுதானே சிந்திப்பீர்கள். அவர்களுக்கு நீங்கள் தண்டனை கொடுப்பதில்லை. அதுபோல் இறைவன் என்பவர் நமக்கு உண்மையான தாய் தந்தை. அவர் அன்பின் உருவம். நாம் அவரை தவறாக பேசினால் கூட அவர் நம்மை தண்டிப்பதில்லை. நாம் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று அவரை ஏற்றுக் கொள்வதாலோ ஏற்றுக் கொள்ளாமல் போனாலோ அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் தன்னுடைய கடமைகளை சரியாக செய்து கொண்டே இருப்பார். இதனை அறிந்து கொள்வதும் ஆன்மிகமே என்று சொல்லி முடித்தார். மக்கள் மனதில் வந்த சந்தேகம் முழுமையாக அகன்று இறைவன் இருக்கிறார் என்று ஒருமித்த குரலில் சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள். நாத்திகரின் மனதிற்குள்ளும் இறைவன் இருக்கிறாரோ என்ற சிந்தனை ஓட ஆரம்பித்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.