தண்டம்

முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். தண்டம் என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து T அல்லது Y வடிவத்தில் இருக்கும். அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்தால் சுவாசம் திசை மாறும். வலது நாசி சுவாசத்தை நிறுத்த வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள். சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வேண்டும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?

மூச்சுக்காற்று நாசியின் வலது புறம் ஓடுவது சூரிய கலை என்றும் இடது புறம் ஓடுவது சந்திரகலை என்றும் பெயர். சூரியகலையில் மூச்சுக்காற்று ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்றும் சந்திரகலையில் ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்த யோகியர்கள் முனிவர்கள் தங்களது சாதகங்கள் அல்லது யோக முறைகளை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் தண்டத்தை உபயோகித்து மூச்சுக்காற்றை மாற்றுக்கொண்டு தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்வார்கள்.

சாதகங்கள் அல்லது யோக காரியங்களை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். உடனே தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில் மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும். துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. இதனை செய்ய சூரியகலை சந்திரகலைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

2 thoughts on “தண்டம்

  1. சுந்தரம்சாமி Reply

    ஹரி ஓம் நமச்சிவாய
    அய்யா அடியேன் பெயர் சுந்தரம்சாமி இப்போது அடியேன் இருக்கும் இடம் கர்நாடகம் மாநிலம்
    அடியேன் இப்போது மையத்தில்
    உள்ளேன் அய்யா சிறிய சந்தேகம்
    உள்ளது அதைத் பற்றி தங்களிடம்
    தெரிந்து கொள்ளலாமா பிறகு
    அடியேனுக்கு யோகத்திற்க்கு
    தேவையான உபகரணம் தங்களிடம் கிடைக்குமா அதற்க்கு அடியேன் பணம் செலுத்தி
    விடுகிறேன் அய்யா (அய்யா அடியேன் படிக்கதவன் எழுத்துக்கள் பிழைகள் இருந்தால்
    அடியேனை மன்னிக்கவும் அய்யா

    • Saravanan Thirumoolar Post authorReply

      நாங்கள் எந்த பொருளும் விற்பனை செய்வதில்லை. தங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் விற்பனை செய்கின்ற இடத்தை சொல்கிறோம் தாங்கள் வாங்கிக் கொள்ளலாம். நன்றி

Leave a Reply to சுந்தரம்சாமிCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.