ஹாசன அம்மாள்

பெங்களுர் அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும். அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும். இந்த சுவாமியின் பெயர் ஹாசன அம்மாள். மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். சுவாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும். இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அணையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும். நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது. சுவாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் இயற்கையாகவே சுவாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிக்கு நைவேத்தியம் சுடாக கொதிக்க கொதிக்க நைவேத்தியம் செய்யப்படுகிறது. சுவாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது, சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும், சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு அபிஷேகம் செய்து முடித்து வெறும் கற்கலாக தான் நடை சாற்றப்படுகிறது. ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று சுவாமிகள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.

One thought on “ஹாசன அம்மாள்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.