திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இருக்கும் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு முதியவர் ஒருவரை ஆலயத்தார் அமர்த்தியிருந்தார்கள். அவர் முருகன் மீது அதிதீவிரமான பக்தியைக் கொண்டிருந்தார். நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு வயோதிகத்தின் காரணமாய் சரியான நேரத்திற்கு இவரால் நைவேத்ய உணவு தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம் கொண்டு ஏசினர். முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பி அழுதார். ஒரு நாள் அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக் கொடுக்கவே ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டி விட்டார். இதனால் மனம் வருந்திய முதியவர் தன் உயிரை மாய்த்து விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார். அவர் கடலினுள் செல்ல செல்ல நீர்மட்டம் கூடுதலாகாமல் அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது. அவரும் ஆழத்தை எதிர்பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார். அப்போதும் முழங்காலுக்கு மேல் கடல்நீர் உயராமல் இருந்தது.
இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் செல்லவும் நில்லுங்கள் என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தான். அவரும் திரும்பி வந்து அச்சிறுவன் முன்பு நின்றார். கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன். முதியவர் அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார். இதற்காகவா உயிர் துறப்பார்கள் என்று சிறுவன் சிரித்தான். உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள் என்றான். முதியவர் எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது என வருத்தத்துடன் சொன்னார். நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன என்றான் சிறுவன். இந்த வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார் முதியவர். திருச்செந்தூர் தல புராணத்தை நான் எழுதுவதா பள்ளிக்கூடம் போகாத எனக்கு கல்வியறிவு கொஞ்சமும் கிடையாதே என்னால் இது எப்படி சாத்தியமாகும் என்றார். மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமாகும். மேலும் நீங்கள் தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ அதற்கான ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில் வைத்தான். சிறுவனிடம் கைநீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் முதியவர். இனிமேல் நீங்கள் சமையல் பணியாளர் அல்ல இன்று முதல் வென்றிமாலை கவிராசர் என்று அழைக்கப்படுவீர்கள் என்று சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன்.
முதியவர் ஒன்றும் புரியாமல் நின்றார். முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ தெளிச்சி அடைந்த முதியவர் கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப் போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தைச் சொல்லும்படி விவரமாகக் கேட்டார். பின் அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய அர்ச்சகர்களை நாடினார். முருகன் தனக்கு காட்சி தந்ததையும் அவர் சொல்லியபடி நூல் இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார். அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்பவில்லை. மாறாக அவரைக் கேலி செய்து கோயிலிலிருந்து விரட்டி விட்டனர். கோயிலை விட்டு வெளியேறிய கவிராசர் மனம் குமுறி தான் இயற்றிய நூலை கடலில் வீசிவிட்டார். கடலில் விழுந்த நூல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூரிலிருந்து அடுத்த கிராமத்துக் கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற கடற்கரையில் நடந்து வந்தபோது அவரின் கண்களில் இந்நூல் காணப்பட்டன. அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் வியப்படைந்து போனார். எவ்வளவு மகோத்மன்யமான இது கடலில் கிடந்து கசங்குகிறதே என்று அந்நூலை செந்திலாண்டவன் கோயிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர்கள் முன்பு படித்துக் காட்டினார். நூலின் முடிவில் நூலை எழுதியது வென்றிமாலை கவிராயர் என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர். கவிராயரை தேடிக் கண்டு அழைத்து வந்தனர் அர்ச்சகர்கள். உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில் எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என கேட்டு தகுந்த மரியாதையையும் செய்தனர். பின்பு செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது. படிக்காதவரையும் பாவலராக்கினான் செந்திலாண்டவன் முருகன்.
Hello Sir,
I am Venkatesh from Chennai. I am searching for this book for many years. Can you please help on were to find and buy this book.
Thank you
வணக்கம் நன்று விரைவில் தங்களது மெயிலுக்கு புத்தகம் கிடைக்கும் விலாசத்தை அனுப்பிவைக்கின்றோம். நன்றி
Sir please send me this book. My email id is [email protected].
நன்று வாட்சாப்பில் தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறோம்
I am vaithiswari from sirkali. I am searching for this book many year.please tell where can i get this book.Thank you
வணக்கம் தங்களது மெயிலுக்கு விலாசத்தை அனுப்பி வைக்கிறோம் நன்றி
வணக்கம் இந்த புத்தகம் கிடைக்குமா நன்றி
இந்த புத்தகம் சில பதிப்புகளில் கிடைக்கும்.
I would like to have a copy of Tiruchendur Sthala Puranam.
விரைவில் வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றோம்.
மிகவும் அருமைஐயாஇந்தபுனிதகவல்தந்தமைக்
மிக்கநன்றிஐயா
வணக்கம் மதுரை சுப்ரமணியன் கிருஷ்ணமு்ர்த்தி
மிகவும் அருமையான தகவல் வணக்கம் மதுரை சுப்பிரமணியம் கிருஷ்ணமூர்த்தி
வணக்கம். எனக்கு இந்த திருச்செந்தூர் தல புராணம் – வென்றிமாலைக் கவிராயர் இயற்றிய நூல் தேவைப்படுகிறது. எனது இ மெயில் [email protected].
அனுப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி 🙏
இந்த புத்தகம் சில பதிப்புகளில் கிடைக்கும்.
சுப்பிரமணிய அந்தாதி என்ற நூலையும் தேடிக் கொண்டிருக்கிறேன். தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.
நன்றி 🙏
நன்று தகவல் கிடைத்தவுடன் சொல்கிறோம்
Namaskaram I want a copy of the book Can please send a copy to K Kala,Trichy 620006 Can pay online
போனில் தொடர்பு கொள்ளுங்கள்.
Hi Sir,
I am from Australia and searching this book for a long time. Could you kindly do let me know where I can buy this book or can you able to send me one book which I will bare all the cost involved.
நன்று வாட்சாப்பில் தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறோம்
I am Ganesa Pillai from Bangalore. I am looking for Thiruchendur Sthala varalaru. If this can be mailed then my mail address is [email protected]. looking forward to receive the same
வணக்கம் தங்களுக்கு பிடிஎப் புத்தகமாக இருந்தால் போதுமா?
PDF puthaham Pothum. Please help me with the book
PDF puthaham Pothum. thayavu saidu anupi kodungkal.
விரைவில் வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றோம்.
வணக்கம்.எனக்கு வென்றிமாலை கவிராயர் எழுதிய திருச்செந்தூர் ஸ்தல புராணம் பாடல் வரிகள் அனுப்பி தாருங்கள்.நன்றி
விரைவில் வலைதளத்தில் பதிவேற்றுவோம்.
Waiting for the PDF ebook. Thanks in advance.
விரைவில் வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றோம்.
please send me the book sthalapuranam thiruchendur
விரைவில் வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றோம்.
Sir please teruchndur thala puranam book send pannunga sir
விரைவில் வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றோம்.
Awaiting for your Tiruchendur Sthala Puranam publication
Pl send it to me too. Putting my email
Thx a ton
Namaskarams
Kindly send this book pdf over mail at the earliest
Would be of great help
A very kind request as a Muruga Bhaktha
விரைவில் வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றோம்.
Sir, kindly send the Sthala varalaru book , written by Vettri malai karirayar,
please
விரைவில் வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றோம்.
Sir kindly send the Thiruchendur Sthala puranam book , written by Vendri malai Kavirayar pl.
திருச்செந்தூர் தல புராணம் book கிடைக்குமா sir எனக்கு படிக்கணும் போல இருக்கு
திருச்செந்தூர் தலபுராணம் கிடைக்கும் இடத்தை தயவுசெய்து தெரிவிக்கவும்.
விரைவில் இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படும்
தமிழிணையம் சந்தூர் தலபுராணம் பிடிஎப்
திருச்செந்தூர் தல புராணம் பிடிஎப் தமிழிணையம் http tamil digital library பாடலும் உரையும் உள்ளது
திருச்செந்தூர் தல புராணம் பிடிஎப் பொக்கிஷம் இன்று ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி வரய்ரசாதமாய் அனைவரும் அழகு தமிழில் அமிர்தம் பருகுவோம்
Please share to my email.
வலைதளத்தில் உள்ளது இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம் நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
தல புராணம் கிடைக்குமா
இந்த வலைதளத்தில் உள்ளது. டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
ஐயா
இந்த பத்தகத்தை பல வருடங்களாகதேடிக் கொண்டிருக்கிறேன். PDF இல்லாமல் புத்தக வடிவில் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்பதை தெரிவிக்க தயவு கூர்ந்து வேண்டுகிறேன்
வணக்கம் எமக்கு தெரிந்த வரை இந்த புத்தகத்தை இரண்டாவது பதிப்பு செய்யவில்லை. ஆகவே கிடைப்பது கடினம் என்றே எண்ணுகிறோம். தங்களுக்கு புத்தகமாக வேண்டுமென்றால் PDF புத்தகத்தை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றி
Hi Sir, I would like to have a PDF copy of this book. Kindly help
Sir, kindly send me the pdf of this book.
இந்த புத்தகம் வலைதளத்தில் மின் புத்தகங்கள் பக்கத்தில் உள்ளது. டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
https://tsaravanan.com/tirusentur-thalapuranam/
அய்யாவணக்கம்
தங்களின் சேவை வணக்கத்திற்கு உரியது
திருச்செந்தூர் முருகனின் தல வரலாறு Pdf ஐ எனது Email க்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்🙏
இந்த புத்தகம் வலைதளத்தில் மின் புத்தகங்கள் பக்கத்தில் உள்ளது. டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
https://tsaravanan.com/tirusentur-thalapuranam/