அனேகுடே என்பது இந்தியாவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தபுரா தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் கும்பாசி என்றும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பியில் இருந்து குந்தாபுரா நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ளது. கும்பாசி என்ற பெயர் இங்கு கொல்லப்பட்ட கும்பாசுரனிடமிருந்து வந்ததாக வரலாறு உள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான விநாயகர் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. ஆனேகுடே கடலோர கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் (பரசுராம க்ஷேத்திரம்) ஒன்றாகும்.
முன் காலத்தில் இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட போது அகஸ்திய முனிவர் பல முனிவர்களுடன் மழைக் கடவுள் வருணனை மகிழ்விக்க யாகம் செய்ய இங்கு வந்தார். அந்த நேரத்தில் கும்பாசுரன் என்ற அரக்கன் யாகம் செய்யும் முனிவர்களை தொந்தரவு செய்து யாகத்தை சீர்குலைக்க முயன்றான். முனிவர்கள் வன வாசத்தில் இருந்த பாண்டவர்களிடம் யாகத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படாதவாறு காக்குமாறு பாண்டவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். யாகத்திற்கு இடையூறு ஏதும் வராதவாறு காக்கிறோம் என்று பீமன் முன் வந்தான். வினாயகர் பீமனுக்கு வாள் கொட்டுத்து ஆசிர்வதித்தார். அந்த வாளைப் பயன்படுத்தி பீமன் அரக்கனைக் கொன்று யாகத்தை முடிக்க உதவினார். அரக்கன் இரந்த அந்த இடத்திற்கு இதற்கு கும்பாசி என்று பெயர் வந்தது. யானைத் தலை கடவுளான விநாயகத்தின் இருப்பிடமாக இருப்பதால் ஆனே (யானை) மற்றும் குட்டே (குன்று) என்பதிலிருந்து ஆனேகுடே என்ற பெயர் வந்தது.
இங்கு வினாயகர் சித்தி விநாயகா என்றும் சர்வ சித்தி பிரதாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.