கேள்வி: சில தேவாலயங்களில் இறந்தவர்களை புதைத்து வைக்கும் வழக்கம் இருக்கிறது.
பொதுவாக இது போன்ற விஷயங்களை நாங்கள் ஆதரிப்பதில்லை. போதிக்கவுமில்லை. இவையெல்லாம் தவறான வழிகாட்டுதலால் ஏற்பட்ட விஷயம். இவைகளைக் குறைத்துக் கொள்வது மனித சமுதாயத்திற்கும் பூமி வளத்திற்கும் நல்லது. நன்றாக கவனிக்க. இறந்த விலங்குகளை புதைத்தால் பூமிக்கு நன்மை உண்டு. மனிதனை அவ்வாறு செய்வதைவிட அக்னிக்கு இறையாக்குவதே நல்ல செயலாகும். இருந்தாலும் மிகப் புனிதமான ஆத்மாக்கள் சிலரை வேண்டுமானால் அவ்வாறு செய்யலாம். இருந்த போதிலும் அக்னி காரியம் என்பதே இந்த இடத்தில் பொருத்தமானதாகும். மற்ற விளக்கங்களை மீண்டும் தக்க காலத்தில் உரைப்போம். ஆசிகள்.
அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஜபத்தைவிட உள்ளன்போடு ஆத்மார்த்தமாக பரிசுத்த இதயத்தோடு ஒரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் இறை தரிசனம் வேண்டும் என்கிற அந்த எண்ணம் தீவிரமடைந்து லோகாயம் எல்லாம் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெபித்தால் கட்டாயம் இறை துவாபர யுகத்தில் மட்டுமல்ல திரேதா யுகத்தில் மட்டுமல்ல இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் லகரம் (லட்சம்) ககரம் (கோடி) மந்திரங்களை ஜெபி என்று கூறுவதன் காரணமே மனித மனம் ஒரு ஒழுங்குக்கு கட்டுப்படாததால் (அப்படி) கூறிக்கொண்டே இருந்தால் என்றாவது ஒருநாள் அவனையும் அறியாமல் மனம் லயித்து ஒரு முறை ஒரு முறை அந்த திருவின் நாமத்தை மனம் வாக்கு காயம் (உடல்) 72000 நாடி நரம்புகள் பரவ கூறுவான் என்று தானப்பா நாங்களும் கூறுகிறோம். எனவே கூறிக்கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நிலையில் சித்திக்கும்.
