ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 513

பட்டீஸ்வரம் திருச்சத்தி முற்றம் ஆலய திருவிழாவை பற்றி:

இறைவனின் அருளை கொண்டு அதுபோல் அங்கே எமது ரூபத்தை பல நாட்களாக பலரும் காணாத நிலையிலேயே இத்தருணம் அங்கே இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தை வைத்து பூஜை நடப்பதை நாங்கள் வரவேற்றாலும் கூட பொதுவாக சித்தர்களை வணங்கு என்று ஒருபோதும் யாமோ வேறு சித்தர்களோ கூற மாட்டோம். அங்கே இறைவனுக்கே முன்னுரிமை. இருந்தாலும் அன்போடு செய்கின்ற அனைத்தையும் எமக்கு செய்தாலும் அதை இறைக்கு செய்ததாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மற்றபடி குறிப்பிட்ட நட்சத்திரம் தான் என் போன்ற மகான்களுக்கு உரியது என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. ஆண் பெண் கலப்பிலே பிறக்கக் கூடிய குழந்தைகளுக்குத்தான் நட்சத்திரம். அக்னியில் உருவாகக் கூடிய ரிஷிகளுக்கு ஏதடா நட்சத்திரம்? இருந்தாலும் ஏதாவது ஒரு தினத்தை தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இதுபோன்ற நிகழ்வை நாங்கள் குறை கூறவில்லை. தொடர்ந்து ஒன்றுபட்ட உள்ளத்தோடு வேறு எந்த விதமான பங்கங்கள் இல்லாமல் பூஜைகள் செய்வதோடு இன்னும் புண்ணிய காரியங்களை அதிகரித்தால் எப்பொழுதுமே இறைவழிபாடு என்பது தர்ம சிந்தனையோடு இருக்கும் பொழுது தான் இறைவனின் பரிபூரண அருளை பெறத்தக்கதாகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செய்ய நல்லாசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.