அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
முன் வினைப்பயனை அனுபவித்து தீர்க்கலாம். தர்மத்தால் தீர்க்கலாம். இறை வழிபாட்டால் தீர்க்கலாம். முன் வினைப்பயன் குறையக் குறைய துன்பங்கள் குறைந்து கொண்டே வரும்.
சேர்த்த பாவத்தை குறைப்பதற்காகவும் இனி பாவம் செய்யாமல் வாழ்வதற்கு மட்டும்தான் மனித தேகம் மனித பிறவி. சிந்திக்கும் ஆற்றலை இறை மனிதனுக்கு தந்ததின் காரணம் பிறர் துன்பங்களை கண்டு வருந்த இரங்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்படிப்பட்ட எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் உயர்ந்த ஆத்மாக்களை. இதில் விலங்கு விருட்சம் மனிதன் என்ற பேதம் இல்லை.