கேள்வி: கருங்காலி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?
ஒரே குழுமத்தில் இருந்து கொண்டு அந்த குழுமத்திற்கு எதிராக செயல்படக் கூடிய மனிதனைப் பார்த்து இந்த மரத்தின் நாமத்தை கூறுவார்கள் ஏன் தெரியுமா? இதுபோல் இந்த மரத்தின் உறுதியை கொண்டுதான் பிற மரங்களை பிளக்கும் கோடாலிக்கு கைப்பிடி போட மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறான். தன் இனத்திலே பிறந்த தன் இனத்தையே அழிப்பதற்கு உதவி செய்கிறது என்ற ஒரு நோக்கில் இவ்வாறு கூறப்பட்டாலும் கூட இதுபோல் மரம் நேரடியான காரணம் அல்ல. மனிதன் செய்யக்கூடிய தவறுகளில் ஒன்று. இருந்தாலும் அதிகமாக வேர் விடக்கூடிய புளியமரம் கருங்காலி மரம் போன்றவற்றை இல்லங்களை வளர்ப்பதை தோஷம் என்று நாங்கள் கூற மாட்டோம். ஏற்புடையதாக இராது.
