ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 693

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒரு மனிதனை விதியே தவறு செய்யத் தூண்டினாலும் தன் மனதை கட்டுப்படுத்தி போராடி தவறு செய்யாமல் பாவத்தை சேர்க்காமல் வாழப்பழக வேண்டும். நல்லவற்றை செய்ய வாய்ப்பை காட்டும் பொழுது தாராளமாக அந்த வழியில் நடக்கலாம். ஆனால் நல்லவை அல்ல என்று விதி தூண்டும் பொழுது நல்ல ஆத்மாக்களுக்கு ஓரளவு நன்மைகளை எண்ணக் கூடிய ஆத்மாக்களுக்கு இறைவன் மனசாட்சி மூலமாக வேண்டாம் இந்த வழி செல்லாதே இதைச் செய்யாதே என்று எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருப்பான். அந்த மனச்சான்றை மதித்து நடந்தால் அந்த தவறிலிருந்து அந்த பாபத்திலிருந்து ஒருவன் தப்பிக்கலாம். பலகீனமான இதயம் கொண்டவர்களால் இதை செய்ய முடியாது. அதனால்தான் நாங்கள் தொடர்ந்து தர்மம் செய் தர்மம் செய் தர்மம் செய் தொடர்ந்து பிரார்த்தனை செய் பிரார்த்தனை செய் பிரார்த்தனை செய். தொடர்ந்து தலயாத்திரை செய் தலயாத்திரை செய் தலயாத்திரை செய். தொடர்ந்து புனித நதியில் நீராடு புனித நதியில் நீராடு புனித நதியில் நீராடு என்கிறோம். இவற்றை தொடர்ந்து செய்து வர அவனது விதி மெல்ல மெல்ல மாறி அவனை மேலும் அறவழியில் செல்ல தூண்டும். தன்முனைப்பு எதிர்பார்ப்பின்றி இவைகளை செய்வதால் அவன் மனது வைராக்கியப்படுகிறது. அந்த வைராக்கியம் திட மனதை கொடுக்கிறது. பரம்பொருளின் மீது அமர்கிறது. இதுதான் ஒருவன் சென்று சேரவேண்டிய இடம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.