கேள்வி: திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் இருக்கும் இடுக்கின் வழியாக வந்தால் முக்தி கிடைக்குமா?
இறைவன் அருளால் இதே போல காஞ்சியிலே கைலாசநாதர் ஆலயம் இருக்கிறது. அங்கே தவழ்ந்து வந்தால் ஒரு பிறவி போய்விடும் என்ற வழக்கு இருக்கிறது. இன்னொரு ஆலயத்திலேயே தலவிருட்சம் இருக்கிறது. அதனை சுற்றி வந்தால் பல பிறவிகள் போய்விடுகிறது என்று கூறுகிறார்கள். இன்னொரு ஆலயத்திற்கு ஒருமுறை சென்று இறை நாமத்தை ஒரு முறை ஜெபித்தாலே கோடி முறை ஜெபித்த பலன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இவையெல்லாம் இறைவனின் பெருமையை பறைசாற்றுவதற்காக மனிதர்களால் கூறப்பட்டது. பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் செய்துவிட்டு நீ கூறிய இடுக்கின் வழியாக ஒருவன் வெளியே வந்தால் அவனுக்கு என்ன முக்தி கிடைக்குமா? மோட்சம் கிடைக்குமா? முதலில் ஒருவனின் நடைமுறை வாழ்க்கையில் சாத்வீகமும் சத்தியமும் தர்மமும் பக்தியும் தான் இருக்க வேண்டும். மற்ற புற சடங்குகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.