அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
ஒரே பிறவியில் ஞானம் அடைந்தவர்கள் என்று யாருமே கிடையாது. இறை மனது வைத்தால் வேண்டுமானால் அப்படி அமையலாம். பல பிறவிகள் எடுத்து அனுபவங்களை நுகர்ந்து பல்வேறு கர்மாக்களை கழித்த பிறகுதான் ஞானம் என்பது சித்திக்கும். உண்மையான ஞானத்தை அடைந்து விட்டால் ஒரு மனிதன் யாருடனும் பேச மாட்டான். அவன் பேசுவதற்கும் கேட்பதற்கும் எதுவும் இல்லை. பார்ப்பதற்கு உணர்வதற்கும் எதுவும் இல்லை. அவனுக்கு தேவையுமில்லை. அவன் தேவையும் யாருக்கும் இல்லை. இதுதான் ஞானத்தின் உச்ச நிலையாகும். அதை அடைவதற்குத்தான் அனைத்து வழிபாடுகளும் சடங்குகளும் புறச் செயல்களும் கூறப்பட்டுள்ளன. விட்டு விடுதல் சகித்துக் கொள்ளுதல் எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுதல் எத்தனை துன்பத்திலும் இறைவனை இகழாமல் இருத்தல் ஞானத்தை இப்படித்தான் விளக்கம் தரலாமே ஒழிய இதுதான் என்று தனியாக உனக்கு காட்ட முடியாது. ஏனென்றால் நீ ஞானமாகி விட்டால் அப்போது நீயே இருக்க மாட்டாய்.