கேள்வி: பிளாஸ்டிக் பொருள் இயற்கையாக மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் வகையில் ஒரு வேதிப்பொருளை இவ்வுலகுக்கு அருள் செய்ய வேண்டும்:
நல்ல பாம்பு இருக்கிறது. அதை எடுத்து மேலே விட்டுக் கொள்வேன். அது என்னைத் தீண்டும். விஷம் உள்ளே இறங்கும். அந்த விஷம் பாதிக்காமல் இருக்க ஒரு மருந்தைக் கொடுங்கள் என்று கேட்கிறான். எதற்கு பாம்பை எடுப்பானேன்? மேலே விடுவானேன்? எதற்கு அந்த விஷத்தை உள்ளே வாங்குவானேன்? இதுதான் எமது வினா. எது தவறு தீங்கு என்று தெரிந்து விட்டதோ அதை விட்டு விடுவதுதான் சிறப்பு. இருந்தாலும் இப்பொழுது இதே உலகத்திலே இது போன்ற சுயநலமும் பேராசையும் உள்ள தேசத்தில்தான் ஒரு பொருள் தவறு என்று தெரிந்தாலும் தொடர்ந்து பயன் படுத்தப்படுகிறது லாப நோக்கத்திற்காக. மற்ற தேசங்களிலே இவைகள் எல்லாம் குறைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னவன் கூறியது போல இதுபோல் இலகு உருகியான இதனை மிகவும் உயர்தரமாக தயாரித்தால் அதனால் எந்தவிதமான தீங்கும் மண்ணிற்கு இல்லை. அதனை மறு சுழற்சிக்கு உட்படுத்தலாம். மலிவாக தரம் குறைந்ததாக தயாரிப்பதால்தான் அதன் தன்மை நச்சுப்பொருளாக மாறுகிறது. இதனையெல்லாம் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தது இறைவன்தான். இறைவன் ஏன் இதனையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும்? இறைவனை நோக்கிதான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும். இதனை கற்றுக் கொடுத்த இறைவனே இதனை நீக்குவதற்கும் உண்டான இன்னவன் கூறியது போன்ற ஒரு பொருளை கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு வழிகாட்டுவார். விரைவில் அதற்கான சூழல் ஏற்படும். ஆனால் அப்படியொரு சூழல் வந்தாலும் கூட இங்கு உடனடியாக அது வரப்போவதில்லை என்பதே உண்மை.