கேள்வி: சித்தர்கள் கூறிய பரிகாரம் பிரார்த்தனை சிறந்ததா? நாங்கள் ஆலயத்திற்கு சென்று செய்யும் பரிகாரம் பிரார்த்தனை சிறந்ததா? இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கூறுங்கள் ஐயனே:
இறைவன் அருளால் உண்மையான பிரார்த்தனைகளை நாங்கள் கூறி செய்தாலும் மனிதனாக செய்தாலும் இரண்டிற்கும் நல்ல பலன் உண்டு. இது ஒரு நிலை அடுத்ததாக மகான்களும் ஞானிகளும் வழிகாட்டி அதன் மூலம் பரிகாரங்களை செய்யும் பொழுது மனிதனுக்கு சற்று கூடுதல் பலமும் வலிமையும் கிடைப்பது என்பது உண்மையாகும். இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆளுகின்ற அரசனை நேரடியாக சென்று பார்த்து உதவி கேட்பது ஒருவகை. அந்த அரசனுக்கு நெருங்கிய உறவின் மூலம் செல்வது இன்னொரு வகை. இரண்டில் எது சிறப்பு? என்பதை புரிந்து கொண்டால் இந்த வினாவிற்கு விடை புரியும்.