அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
நடக்கட்டும் நம்புகிறோம் என்பது மனிதர்களின் வாக்கு. நம்புங்கள் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.
எம் வழியே வருகின்ற மனிதர்கள். திடம் கொண்டு வைராக்கியம் கொண்டு தர்ம வழியிலும் சத்திய வழியிலும் இறை பக்தி வழியிலும் மிக நன்றாக செல்ல செல்ல நாங்களே ஒன்றை கூறி அதனை தேவையான தருணத்தில் நடத்தாமல் மாற்றுவோம். யாம் ஒன்றை கூறாமல் நடவாதப்பா என்று கூறி நடத்தியும் காட்டுவோம். இந்த இரண்டிற்கும் பல்வேறு விதமான கர்ம வினை சூட்சும நுணுக்கங்கள் உண்டு. அதை ஒரு விதமாக நுணுக்கமாக ஆய்ந்து பார்த்தால்தான் புரியும்.
ஆண்டாண்டு காலம் மந்திரங்களை ஜெபித்தாலும் மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டால் ஓட்டை பாத்திரத்தில் நீரை வைத்தது போல் ஆகிவிடும். முதலில் பூஜை தர்மம் தொண்டு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு பிறர் மனதை புண்படுத்தாமல் நாகரீயமாக வார்த்தைகளை பயன்படுத்துவது முக்கியம். அந்த பயிற்சியை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும்.