அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
உள்ளத்தில் உண்மையை மறைத்து வைப்பது என்பது அக்னியை மடியில் வைத்துக் கொள்வது போல கடை (இறுதி) வரையில் அவனை சுட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று ஆதியிலிருந்து ஒரு மனிதன் உண்மையை சொல்ல பழக வேண்டும். இடையில் இருந்து தொடங்கினால் அதற்கு அவன் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். எனவே அறத்தில் மிகப்பெரிய அறம் உண்மை பேசுவதாகும்.